Rolls Royce: ரோல்ஸ் ராய்ஸில் ஜாலி ரைடு போன ஆகாஷ் அம்பானி… விலை எவ்வளவு தெரியுமா? - Tamil News | mukesh ambani son Akash ambani joyride ride in rolls royce phantom drophead coupe car in mumbai with Isha Ambani and Solana meta details in tamil | TV9 Tamil

Rolls Royce: ரோல்ஸ் ராய்ஸில் ஜாலி ரைடு போன ஆகாஷ் அம்பானி… விலை எவ்வளவு தெரியுமா?

Akash Ambani's Jolly Ride: இந்தியாவின் பெரும் தொழிலதிபரும் முடிசூடா மன்னனும் ஆன முகேஷ் அம்பானியின் இரட்டைக் குழந்தைகள் ஆன இஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோர் மும்பை சாலைகளில் தனது விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஜாலியாக பயணம் செய்தனர். இதன் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் காரின் விலை எத்தனை கோடி தெரியுமா?

Rolls Royce: ரோல்ஸ் ராய்ஸில் ஜாலி ரைடு போன ஆகாஷ் அம்பானி... விலை எவ்வளவு தெரியுமா?

ரோல்ஸ் ராய்ஸ்

Published: 

23 Oct 2024 22:45 PM

இந்தியாவின் தலைசிறந்த பணக்காரராகவும் முடிசூடா மன்னனாகவும் இருப்பவர் தான் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி. இவருக்கு ஆகாஷ் அம்பானி மற்றும் அனந்த் அம்பானி என இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சமீபத்தில் உலக பிரபலங்கள் பங்கேற்று உலகமே வியக்கும் அளவில் வெகு விமரிசையாக அனந்த் அம்பானி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஆகாஷ் அம்பானி அவரது மனைவி சுலோகா மேத்தா‌‌ மற்றும் ஆகாஷ் அம்பானியின் தங்கை இஷா அம்பானி இரவு நேரத்தில் தனது Rolls Royce காரில் மும்பையில் மகிழ்ச்சியாக சுற்றிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘SochXIndia’ தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தது. இந்த வீடியோவில் ஆகாஷ் அம்பானி Rolls Royce காரினை ஓட்ட அவர் அருகில் இஷா அம்பானி அமர்ந்திருக்கிறார். பின் இருக்கையில் சுலோகா அமைந்திருக்கிறார். இந்த வீடியோ குறித்து இணையத்தில் இணைவாசிகள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

கவனத்தை ஈர்த்த கார்:

ஆகாஷ் அம்பானி தனது மனைவி மற்றும் தங்கையுடன் மும்பை சாலைகளில் ஜாலியாக உலா வந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர்கள் பயணித்த அந்த ரோல்ஸ் ராய்ஸ் வகை கார் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் கூபே (Rolls – Royce Phantom Coupe) என்ற கார் உலகில் மிகவும் அரிதானது. அதில் இந்த வகை பாண்டோம் மிகவும் அரிதானது. அதிலும் குறிப்பாக டிராப்ஹெட்‌ பதிப்பினை காண்பது மிகவும் அரிது. இந்தியாவில் வெறும் 6 பாண்டோம்‌ கார்கள் மட்டுமே உள்ளது. ஆகாஷ் அம்பானி பயணிக்கும் போது மேற் கூரை முழுவதுமாக திறக்கப்பட்டிருந்தது. இது ஒரு கன்வேர்ட்டபிள் கார் ஆகும்.

வெள்ளி நிறம் கொண்ட அந்த காரில் அவர்கள் பயணிக்கும் போது 1940 களில் இங்கிலாந்து இளவரசர், இளவரசிகள் பயணிக்கும் கார் போன்று காட்சியளித்தது. பாதுகாப்பும் ராஜ குடும்பத்தினருக்கு போலவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆகாஷ் அம்பானியின் இந்த ஜாலி பயணத்திற்கு பாதுகாப்புக்காக பல லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார்கள் சைரனுடன் அணி வகுத்து செல்வதை பார்க்க முடிந்தது. இந்த ரேஞ்ச் ரோவர் கார்களே கோடி ரூபாயில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read: Tata Motors: இந்த கார் செம பாதுகாப்பு.. ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்ற டாடா‌ கர்வ் மாடல்கள்!

காரின் விலை மற்றும் சிறப்பம்சம்:

பாதுகாப்புக்கு செல்லும் கார்களே கோடி கணக்கில் இருக்கிறது என்றால் அவர்கள் பயணித்த காரின் விலை என்ன என்பது பலரின் கேள்வியாக இருக்கும்.இந்த அரிய வகை காரின் விலை 11 லட்சம் டாலர்கள் ஆகும். இதன் இந்திய மதிப்பு ரூ.9 கோடி ஆகும். கடந்த 2016 ஆம் ஆண்டு விற்பனை நிறுத்தப்பட்ட இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் இரண்டு கதவுகள் மற்றும் நான்கு இருக்கைகள் மட்டுமே இருக்கும். இதில் சிவப்பு நிறத்தில் மேற்கூரையும், பெரிய குரோம் சக்கரங்களையும் கொண்டது. இந்த ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம்‌ டிராம்ஹெட்  காரில் 6.8 லிட்டர் V12 டர்போ சார்ஜ் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.‌

இந்த அரிய வகை காரை முகேஷ் அம்பானியின் குடும்பம் நீண்ட ஆண்டுகளாக வைத்துள்ளது. இவர்களிடம் பத்துக்கும் மேற்பட்ட rolls-royce கார்கள் உள்ள நிலையில் அதில் பெரும்பாலான கார்கள் ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனன் மாடல் கார்களே ஆகும்.

Also Read: Driverless Cybercab: டிரைவரே கிடையாது… விரையில் அறிமுகமாகும் ரோபோ டாக்ஸி.. சிறப்பம்சங்கள் என்ன?

ஆடம்பரத்தின் அடுத்த கட்டம்:

பொதுவாக முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் பயணங்கள் மிகவும் பாதுகாப்பு நிறைந்ததாக இருக்கும். அந்த வகையில் இவர்கள் சென்ற இந்த ஜாலி பயணத்திற்கும் பாதுகாப்புக்காக ரேஞ்ச் ரோவர் கார்கள் உடன் சென்றது.”அம்பானியின் இரட்டையர்களான இஷாவும் ஆகாஷும் தனது ஆடம்பரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். அவர்கள் சந்தோஷத்துடன் கார் ஓட்டி மகிழ்கிறார்கள். அவர்கள் கனவை வாழ்வதற்கான ஒரு சாதாரண நாள்” என்று இந்த வீடியோவுக்கு தலைப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கியூட் சிறுமி யார் தெரியுமா?
நடிகை அனு இம்மானுவேல் பற்றிய சுவராஸ்ய தகவல் இதோ..!
இனி திரைப்படங்களுக்கு இடையில் விளம்பரம் தோன்றும் - அமேசான்!
குழந்தைகள் பொய் சொல்ல காரணம் தெரியுமா?