5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விலை ஜஸ்ட் 22 லட்சம்.. மணிக்கு 253 கி.மீ பறக்கும்: இந்த பைக்குகள் தெரியுமா?

BMW S 1000 XR: பி.எம்.டபிள்யூ மோட்டோராடு பைக்குகள் மோட்டார் சைக்கிளை இயக்குவது 168 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க்கை உருவாக்கும் இன்-லைன் 4-சிலிண்டர் இன்ஜின் ஆகும். இந்த எஞ்சின் 0 முதல் 100 கிமீ வேகத்தை 3.25 வினாடிகளில் அடையும். மேலும், மணிக்கு 253 கிமீ வேகத்தில் செல்லும்.

விலை ஜஸ்ட் 22 லட்சம்.. மணிக்கு 253 கி.மீ பறக்கும்: இந்த பைக்குகள் தெரியுமா?
இந்தியாவில் புதிய BMW S 1000 XR பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
Follow Us
intern
Tamil TV9 | Published: 22 May 2024 23:22 PM

பி.எம்.டபிள்யூ மோட்டோராடு பைக் அறிமுகம்: இந்தியாவில், பி.எம்.டபிள்யூ மோட்டோராடு (BMW Motorrad) புதிய எஸ் (S) 1000 எக்ஸ்.ஆர் (XR)-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை ரூ.22.50 லட்சம் ஆகும். எஸ் 1000 எக்ஸ்.ஆர் முற்றிலும் பில்ட்-அப் யூனிட் (CBU) ஆக விற்பனைக்கு வருகிறது. இந்த மோட்டார் சைக்கிளை நேற்று முதல் (மே 21, 2024) முதல் அனைத்து பி.எம்.டபிள்யூ மோட்டோராடு (BMW Motorrad) அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களிலும் முன்பதிவு செய்யலாம். புதிய S 1000 எக்ஸ்.ஆர் பிளாக்ஸ்டார்ம் மெட்டாலிக், கிராவிட்டி ப்ளூ மெட்டாலிக் (ஸ்டைல் ஸ்போர்ட்ஸுடன்) மற்றும் லைட்வைட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும், புதிய S 1000 XR ஆனது டூரிங் மற்றும் டைனமிக் பேக்கேஜ்கள் உட்பட விரிவாக்கப்பட்ட நிலையான உபகரணப் பட்டியலுடன் வருகிறது. அதே நேரத்தில் கூடுதல் செயல்திறன் மற்றும் வசதியும் பைக்கில் உள்ளன.

டே டைம் ரன்னிங் லைட்கள்

இது மட்டுமின்றி, ரைடிங் மோட்ஸ் ப்ரோ, ஹீட்டர் கிரிப்ஸ் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற பல நிலையான அம்சங்களும் பைக்கில் உள்ளன. தொடர்ந்து, ரைடிங் தரமும்ம் உயர்த்தப்பட்டுள்ளன. ஹெட்லைட் ப்ரோ இரவு நேர சவாரிகளின் போது கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

இதையும் படிங்க : புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய டி.வி.எஸ்: 75 கி.மீ ஸ்பீடு, விலை என்ன தெரியுமா?

மேலும்,டயர் பிரஷர் கண்ட்ரோல் மற்றும் பாதுகாப்பு போன்ற பல அம்சங்கள் சவாரியை சுவாரஸ்யமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுகின்றன. தொடர்ந்து, பகலில் சிறந்த வாகன அங்கீகாரத்திற்காக, பேக்கேஜில் டேடைம் ரன்னிங் லைட்கள் (DRL) உள்ளன. கீலெஸ் ரைடு மற்றும் 12 ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரிகள் நிலையான அம்சங்களாக உள்ளன.

கூடுதலாக, யூ.எஸ்.பி சார்ஜிங் பொருத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஷிப்ட் அசிஸ்டெண்ட் புரோ கியர்களை மாற்றும் போது இன்னும் அதிக துல்லியத்தை உறுதி செய்கின்றன. இதனால், ரைடர்கள் தங்கள் மோட்டார்சைக்கிளை விருப்பமான முறையில் இயக்கிக் கொள்ளலாம்.

மணிக்கு 253 கி.மீ வேகம்

மேலும், பிரத்தியேகமான லைட் ஒயிட்/எம் மோட்டார்ஸ்போர்ட் பெயிண்ட்வொர்க் சேர்க்கப்பட்டுள்ளது. இது, மோட்டார்சைக்கிளுக்கு சக்திவாய்ந்த தோற்றத்தை அளிக்கிறது. இது மட்டுமின்றி, எம் ஸ்போர்ட் இருக்கை, எம் லைட்வெயிட் பேட்டரி, எம் ஃபோர்ஜ்டு வீல்கள், எம் எண்டூரன்ஸ் செயின், எம் ஜிபிஎஸ்-லேப்ட்ரிகர், ஸ்போர்ட்ஸ் சைலன்சர், டின்ட் ஸ்போர்ட்ஸ் விண்ட்ஸ்கிரீன் மற்றும் ஸ்டிரைக்கிங் பிளாக் ஃப்யூல் ஃபில்லர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிளை இயக்குவது 168 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க்கை உருவாக்கும் இன்-லைன் 4-சிலிண்டர் இன்ஜின் ஆகும். இந்த எஞ்சின் 0 முதல் 100 கிமீ வேகத்தை 3.25 வினாடிகளில் அடையும். மேலும், மணிக்கு 253 கிமீ வேகத்தில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : காரா இல்ல தேரா? வெளியீட்டுக்கு முன்னரே வெளியான எம்.ஜி அஸ்டர் படங்கள்!