5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

காரா இல்ல தேரா? வெளியீட்டுக்கு முன்னரே வெளியான எம்.ஜி அஸ்டர் படங்கள்!

MG Astor Facelift : தற்போதைய மாடலைப் பொறுத்த வரை, இது இரண்டு எஞ்சின் விருப்பங்களால் இயக்கப்படுகிறது. இது 1.5-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சினுடன் வாங்கப்படலாம், இது அதிகபட்சமாக 108 BHP மற்றும் 144 Nm ஆற்றலை உருவாக்குகிறது. சந்தையில் உள்ள மற்ற மாடல்களான மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டாவின் அர்பன் க்ளூஸர் ஹை ரைடர் ஆகியவற்றுடன் போட்டியிடும் எனக் கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் ஹூண்டாய் க்ரெக்டா, கியா செல்டோஸ் ஆகியவையும் உள்ளன.

காரா இல்ல தேரா? வெளியீட்டுக்கு முன்னரே வெளியான எம்.ஜி அஸ்டர் படங்கள்!
எம்.ஜி அஸ்டர் ஃபேஸ்லிப்ட்
Follow Us
intern
Tamil TV9 | Published: 21 May 2024 21:34 PM

எம்.ஜி அஸ்டர் ஃபேஸ்லிப்ட் புகைப்படங்கள் லீக்: எம்.ஜி இந்தியா நிறுவனம் ஆஸ்டர் ஃபேஸ்லிப்ட் என்ற காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தக் காரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே காரின் லுக் வெளியாகி உள்ளது. இந்தப் படங்களை பார்க்கும் போது காரின் பல்வேறு அம்சங்கள் கண்ணுக்கு தெரிகிறது. அந்த வகையில் கார், எல்இடி ஹெட்லேம்ப்ஸ், டைமண்ட் டிசைனுடன் கூடிய புதிய கிரில், பெரிய ஏர் டேம்களுடன் கூடிய வலுவான பம்பர், ஃப்ரண்ட் உடன் காணப்படுகிறது. மேலும் காரின் சைடில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுளளன. இதில் பிளாக்-அவுட் பில்லர்ஸ், ரூஃப் மற்றும் ஓ‌ஆர்‌வி‌எம்ஸ் ஆகியவை அடங்கும். கூடுதலாக, சில்வர் ஃபினிஷ்ட் ரூஃப் ரெயில்ஸுடன் ஸ்கிட் ப்ளேட்டில் சில்வர் அக்ஸ்ன்ட்ஸ் உள்ளன.

மேலும் காரில் ஆஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் டூயல்-டோன் ஃபினிஷுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலோய் வீல்களும் உள்ளன. தொடர்ந்து, பம்பரில் சில்வர் அலங்காரம், வாஷருடன் ரியர் வைப்பர் காணப்படுகிறது. தொடர்ந்து, புதிய டாஷ்போர்டுடன் கூடிய பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஃபங்ஷனுடன் கூடிய ஸ்டீயரிங் வருகிறது.
இது மட்டுமின்றி பார்க்கிங் பிரேக் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றைப் பெற்றிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதை பார்க்கும் போது காரில் சென்டர் கன்சோலில் புதிய மாற்றங்கள் உள்ளன. எனினும் காரின் என்ஜின் தொடர்பாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இதனால் புதிய காரின் என்ஜின் தொடர்பாக தகவல்கள் வெளியீட்டின் போது தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Swift: 2024 மாருதி ஸ்விஃப்ட் மாடல்: விலை, இதர விவரங்களை செக் பண்ணுங்க!

இந்திய சந்தைகளில் எம்ஜி ஆஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்தக் கார்கள் மிகுந்த தரத்துடன் கவர்ச்சிக்கரமான விலையில் காணப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், சந்தையில் உள்ள மற்ற மாடல்களான மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டாவின் அர்பன் க்ளூஸர் ஹை ரைடர் ஆகியவற்றுடன் போட்டியிடும் எனக் கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் ஹூண்டாய் க்ரெக்டா, கியா செல்டோஸ் ஆகியவையும் உள்ளன.

தற்போதைய மாடலைப் பொறுத்த வரை, இது இரண்டு எஞ்சின் விருப்பங்களால் இயக்கப்படுகிறது. இது 1.5-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சினுடன் வாங்கப்படலாம், இது அதிகபட்சமாக 108 BHP மற்றும் 144 Nm ஆற்றலை உருவாக்குகிறது.

ஏப்ரலில் கார்கள் விற்பனை

2024 ஏப்ரலில் கார்களின் விற்பனை பட்டியலை பார்க்கலாம்.

  1. டாடா மோட்டார்ஸ் 77,521 யூனிட்
  2. மாருதி சுஸூகி 1,68,089 யூனிட்
  3. ஹூண்டாய் மோட்டார் இந்தியா 63,701 யூனிட்
  4. டோயோட்டா கிர்லோஷகர் மோட்டார் 20,494 யூனிட்
  5. டிவிஎஸ் மோட்டார் 3,83,615 யூனிட்
  6. ஈஸியர் மோட்டார்ஸ் மோட்டார்சைக்கிள் 81,870 யூனிட்
  7. ஈஸியர் மோட்டார் டிரக்ஸ் அண்ட் பஸ் 5,377 யூனிட்
  8. எஸ்கார்ட்ஸ் குபோடா 7,515 யூனிட்

இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஆட்டோமொபைல் துறை சுமார் 7% பங்களிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய டி.வி.எஸ்: 75 கி.மீ ஸ்பீடு, விலை என்ன தெரியுமா?