Tata Motors Discounts: கார்களுக்கு ரூ.2.05 லட்சம் வரை தள்ளுபடி.. டாடா கொடுக்கும் அடடே ஆஃபர்!
Car Offer : விழா காலங்களின் சலுகையாக 'கார்களின் திருவிழா' என்ற பெயரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிரடியாக பல ஆஃபர்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி இருக்கிறது. இது மூலம் ரூ.2.05 இலட்சம் வரை சேமிக்க முடியும் என்று அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த தள்ளுபடி திருவிழா அக்டோபர் 31, 2024 வரை நடைபெற இருக்கிறது.
டாடா கார்கள் ஆஃபர் : இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வருவதை முன்னிட்டு விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் ‘கார்களின் திருவிழா’ என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களுக்கு தள்ளுபடிகள் வழங்குவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அக்டோபர் 31, 2024 வரை நடக்க இருக்கும் இந்த திருவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ICE கார்களுக்கு ₹2.05 லட்சம் வரை சலுகைகள் கிடைக்கும். இந்தச் சலுகை மூலம் Safari, Harrier, Nexon, Tiago, Altroz மற்றும் Tigor போன்ற பிரபலமான கார்களை வாங்கலாம். ஆனால் Punch, சமீபத்தில் அறிமுகமான Curvv போன்ற கார்கள் இந்த சலுகையில் இடம்பெறவில்லை.
விழாக்கால சலுகையில் அறிவித்திருக்கும் தள்ளுபடிகள் என்ன?
டாடா நிறுவனம் அறிவித்திருக்கும் சலுகைகளில், ₹5.65 லட்சத்திற்கு விற்பனையாகும் Tiago இப்பொழுது ₹4.99 லட்சம் விலையில் வழங்கப்படுகிறது. அதைப்போல் Tigor கார்கள் ₹30,000 விலை குறைப்புடன் ₹5.99 லட்சத்திற்கும் Altroz கார்கள் ₹45,000 விலை குறைப்புடன் ₹6.49 லட்சத்திற்கும் கிடைக்கிறது. அதேபோல் Nexon ₹7.99 லட்சத்திலும் Harrier ₹14.99 லட்சத்திலும் Safari ₹15.49 லட்சத்திலும் இந்த சலுகையில் கிடைக்கிறது. இதன் மூலம் ₹80,000 முதல் ₹1.80 வரை சேமிக்க முடியும்.
இது தவிர hatchbacks மற்றும் sedans கார்களும் இந்த சலுகையில் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில ஷோரூம்களில் டாடா வாடிக்கையாளர்களுக்கு ₹45,000 வரை Exchange Offer போன்ற கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகிறது.
Also Read: Maruti Suzuki: பட்ஜெட் கார் வாங்க திட்டமா? மாருதி கார்களுக்கு அதிரடி தள்ளுபடி..
மதிப்புமிகு வாடிக்கையாளர்களுக்கு மறக்க முடியாத சலுகைகள்:
இந்தச் சலுகைகள் குறித்து அறிமுகம் செய்து வைத்து பேசிய தலைமை வணிக அதிகாரி விவேக் ஸ்ரீ வத்ஸா, “விழாக் காலங்களில் எங்களின் மதிப்புமிகு வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ICE வாகனங்களுக்கு ₹2.05 லட்சம் வரையிலான தள்ளுபடிகள் கிடைக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி டாடா கார்களை சொந்தமாக்கி விழா காலங்களை மறக்க முடியாததாக மாற்றிக் கொண்டு பயனடைவார்கள் என்று நம்புகிறோம்” என தெரிவித்தார்.
விற்பனை அதிகரிக்குமா?
கடந்த ஆகஸ்ட் மாதம் பயணிகள் வாகன விற்பனையில் 4.5% குறைந்து பெரும் சரிவை எதிர் கொண்டது. இந்நிலையில், இந்த விழாக்கால தள்ளுபடியால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வணிகத்தை மேம்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் வணிக வாகனம் மற்றும் பயணிகள் வாகனம் என இரண்டு நிறுவனங்களாக பிரிக்க டாடா மோட்டார்ஸ் வாரியம் ஒப்புதல் அளித்து இருந்தது.
புதிய கார் வாங்க அடிப்படையான விதிமுறைகள்:
முதலாவதாக பட்ஜெட். பட்ஜெட்டை நிர்ணயம் செய்யாமல் நீங்கள் வாங்கும் எந்த பொருளாக இருந்தாலும் பின் காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மொத்தத் தொகையை கொடுத்து கார் வாங்குபவருக்கு பெரிதாக சிக்கல் ஏற்படாது. தவணை முறையில் கார் வாங்க இருப்பவர்கள் வட்டி விகிதத்தை சரியாக வங்கிகளிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். மூன்று ஆண்டுக்குள் தவணையை முழுமையாக முடிக்க வேண்டும்.
அடுத்ததாக எரிபொருள். தினமும் 50 கிலோ மீட்டருக்குள் தான் பயணிக்க போகிறீர்கள் என்றால் நீங்கள் பெட்ரோல் இன்ஜினை தேர்ந்தெடுக்கலாம். 50 கிலோ மீட்டருக்கும் மேல் பயணிப்பவராக இருந்தால் டீசல் இன்ஜினை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இணையங்களில் கொடுக்கக்கூடிய ரிவியூகளை வைத்துக்கொண்டோ அல்லது இணையத்தின் மூலமாகவோ காரை முன்பதிவு செய்ய வேண்டாம். நீங்கள் நேரடியாக சென்று கண்டிப்பாக டெஸ்ட்ரை செய்து பார்த்துவிட்டு காரை முன்பதிவு செய்யுங்கள். ஒரே டீலரிடம் பேசி முடிவெடுக்காமல் இரண்டு மூன்று டீலர்களை அணுகவும். குறிப்பாக மாத இறுதியில் டீலர்களை அணுகினால் சில சலுகைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
டீலர்கள் கூறும் அக்சஸரீஸ்களை தவிர்த்து விட்டு காருக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை மட்டும் பொருத்திக் கொள்ளுங்கள். இணையத்தில் பல இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஒப்பீடு செய்து விட்டு இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். இறுதியாக உங்களுடைய கார் டெலிவரி ஆவதற்கு முன்பாக உங்கள் காரை அணு அணுவாக ஆய்வு செய்யுங்கள். சிறு சேதம் ஏற்பட்டிருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். அதேபோல் ஓடோமீட்டரையும் பரிசோதித்துக் கொள்ளுங்கள். அது 100 கிலோ மீட்டருக்கும் குறைவாக தான் இருக்க வேண்டும்.
Also Read:Budget Cars: விலை கம்மியா நல்ல மைலேஜ்.. டாப் 4 பட்ஜெட் கார்கள்!