மின்சார சைக்கிளை களமிறக்கும் டாடா.. EV துறைக்குள் புது முயற்சி! - Tamil News | Tata's launch of electric cycles in india with super features in tamil | TV9 Tamil

மின்சார சைக்கிளை களமிறக்கும் டாடா.. EV துறைக்குள் புது முயற்சி!

Published: 

23 Sep 2024 08:43 AM

Tata Electric Cycle: உலகளாவிய ரீதியில் சமீப காலமாக எலக்ட்ரிக் வாகன துறை புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிலையில் அனைத்து நிறுவனங்களும் தங்களது பலத்தை வெளிப்படுத்தும் வகையில் EV உற்பத்தியை செய்து வருகிறது. அந்த வகையில் டாடாவும் EV துறைக்குள் நுழைந்திருக்கிறது. டாட்டா குழும நிறுவன ஸ்ட்டைடர் சைக்கிள் Voltic X மற்றும் Voltic Go ஆகிய இரண்டு புதிய மாடல் எலக்ட்ரிக் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மின்சார சைக்கிளை களமிறக்கும் டாடா.. EV துறைக்குள் புது முயற்சி!

டாடா ஸ்ட்ரைடர்‌ வோல்டிக்‌ X (Photo Credit: Tata Stryder)

Follow Us On

உலகளாவிய ரீதியில் சமீப காலமாக எலக்ட்ரிக் வாகன துறை புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிலையில் அனைத்து நிறுவனங்களும் தங்களது பலத்தை வெளிப்படுத்தும் வகையில் EV உற்பத்தியை செய்து வருகிறது. அந்த வகையில் டாடாவும் EV துறைக்குள் நுழைந்திருக்கிறது. டாடா குழும நிறுவன ஸ்ட்டைடர் சைக்கிள் Voltic X மற்றும் Voltic Go ஆகிய இரண்டு புதிய மாடல் எலக்ட்ரிக் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு சைக்கிள்களுக்கும் 16 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. நகர்ப்புற போக்குவரத்து நெரிசல் போன்றவைக்கு இடையில் இந்த இ- சைக்கிள்கள் மக்களை நிச்சயம் கவரும் என்கின்றனர் நிபுணர்கள். இந்த இரண்டு இ – சைக்கிள்களைப் பற்றி கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்வோம்.

மின்சார சைக்கிள்

டாடா நிறுவனத்தின் ஸ்ட்ரைடர் சைக்கிளின்‌ Voltic X இன்‌ விலை ரூ.32,495 ஆகவும் Voltic Go இன் விலை ரூ.31,495 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சைக்கிள்களும் 48V பேட்டரியுடன் வருகின்றனர். எனவே இந்த இ சைக்கிள்களை மூன்று மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 கிலோ மீட்டர்கள் வரை செல்லலாம்.

இந்த Voltic Go சைக்கிளின் வடிவமைப்பு மிகச் சிறப்பாக உள்ளது. இது சவாரி செய்பவர்களுக்கு‌ சௌகரியத்தையும் வசதியையும் வழங்குகிறது. Voltic X சைக்கிள் மௌண்டைன் பைக் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நகர்ப்புற பயணங்களுக்கும் சாகசங்கள் செய்வதற்கும் ஏற்றதாக இருக்கும். இந்த இரண்டு மாடல்களும் இரட்டை டிஸ்க் பிரேக் களை கொண்டுள்ளது.

மேலும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்கான தானியாங்கி பவர் கட் ஆப் உள்ளது. இது இரண்டு வருட பேட்டரி உத்தரவாதத்தை கொண்டுள்ளது.

மின்சார பைக்குகள் பிரபலம் அடைந்து வருவதால், பாரம்பரியமாக சைக்கிள் ஓட்டும் அனுபவத்தை வழங்குவதற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையை வழங்குவதற்கும் இந்த சைக்கிள்கள் உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த புதிய இ சைக்கிள் மாடல்களான Voltic X மற்றும் Voltic Go ஆகியவை நகர்ப்புற பயண தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே டாட்டா ஸ்ட்ரைடர் இந்தியாவில் 4000 விற்பனை நிலையங்கள் வைத்திருக்கும் நிலையில் அதனை இப்பொழுது SAARC நாடுகளிலும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் விரிவுபடுத்தி உள்ளது. மேலும் இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி நடவடிக்கைகளை விரிவுபடுத்தி உள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன சண்டை தொடர்ந்து வளர்ந்து வருவதால் ஸ்டிரைடரின் சமீபத்திய இ சைக்கிள் சலுகைகள் பசுமை இயக்க தேர்வுகளுக்கு மாற விரும்பும் நுகர்வோருக்கு மிகவும் நிலையான போக்குவரத்து விற்பங்களை வழங்குகிறது.

ஸ்ட்ரைடரின் வணிகத் தலைவரான ராகுல் குப்தா குறிப்பிடுகையில், “இந்தியாவின் ஆற்றல் மாற்றத்தில் மின் சைக்கிள்கள் ஒரு பங்கை வகிக்க முடியும்.மேலும் நிலையான போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்க முயற்சிகளுடன் இணைகிறது. நகர்ப்புற பயணத்திற்கு ஏற்ற மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இருக்கும்” என இ சைக்கிளின் வசதியை பற்றி அவர் எடுத்துரைத்தார்.

ஸ்ட்ரைடர்:

ஸ்ட்ரைடர் என்பது டாடா இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு முழுதாக சொந்தமான துணை நிறுவனமா கும். இந்த நிறுவனத்தின் அனைத்து சைக்கிள்களும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் தயாரிக்கப்படுகிறது. மின்சார சைக்கிள்கள், மலை சைக்கிள்கள்‌ குழந்தைகள் சைக்கிள்கள் என பரந்த அளவிலான சைக்கிள்களை உற்பத்தி செய்கிறது.

இந்தியா முழுவதும் 4000 விற்பனை நிலையங்கள் வைத்திருக்கும் நிலையில் தற்பொழுது SAARC நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் 10 வருட செயல்பாடுகளை நிறைவு செய்தது.

இ சைக்கிள்களின் பயன்கள்:

இதற்கு எந்தவிதமான வாகன பதிவும் தேவையில்லை. இதை வாங்கும் முறையும் எளிது. இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். பெரிய வளாகங்கள் உடைய நிறுவனங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு செல்வதற்கு இ சைக்கிள் உதவுகிறது.

சோர்வான நேரங்களில் பைக்காகவும் உடற்பயிற்சிக்கு மிதிவண்டியாகவும் பயன்படுகிறது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்படுகிறது.

மன அழுத்தம் குறைய வேண்டுமா? அப்போ இது ஒன்னே போதும்.
நடிகை ஹன்சிகா மோத்வானியின் ரீசென்ட் ஆல்பம்
அழகியே... மிருணாள் தாகூரின் அசத்தல் ஆல்பம்
இணையத்தை கலக்கும் டாப்ஸி பன்னுவின் லேட்டஸ்ட் ஆல்பம்
Exit mobile version