Did You Know: காரின் பின்பக்க கண்ணாடியில் சிவப்பு கோடுகள் ஏன் இருக்கு தெரியுமா? இப்படி ஒரு விஷயத்துக்காகத்தான்! - Tamil News | | TV9 Tamil

Did You Know: காரின் பின்பக்க கண்ணாடியில் சிவப்பு கோடுகள் ஏன் இருக்கு தெரியுமா? இப்படி ஒரு விஷயத்துக்காகத்தான்!

Car Safety Features: பொதுவாக குளிர் காலங்களிலும், மழை காலங்களிலும் பனி மற்றும் மழை துளிகள் காரின் பின் பக்க கண்ணாடிகளில் பரவி படர்ந்திருக்கும். இதன்மூலம், காரை இயக்கும் டிரைவரால் ரியர் வியூ மிரர் மூலம் பின்னாடி எந்த வாகனங்கள் வருகிறது என்று தெளிவாக பார்க்க முடியாது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த சிக்கல்களை தவிர்க்கவே, இந்த சிவப்பு நிற கோடுகள் அதிக பயனுள்ளதாக இருக்கிறது.

Did You Know: காரின் பின்பக்க கண்ணாடியில் சிவப்பு கோடுகள் ஏன் இருக்கு தெரியுமா? இப்படி ஒரு விஷயத்துக்காகத்தான்!

(Photo-freepik)

Published: 

16 Jul 2024 12:00 PM

உங்களுக்கு தெரியுமா? : இருசக்கர வாகனங்களோ, நான்கு சக்கர வாகனங்களோ மனித வாழ்வில் தற்போது முக்கிய அங்கமாகிவிட்டன. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் வாகனங்களுடன் அதிகளவில் பயணிக்கின்றன. இப்படியான சூழ்நிலையில், சாலையில் நீங்கள் வந்து செல்லும் கார்களின் பின் கண்ணாடியில் சில சிவப்பு நிற கோடுகளை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். பெரும்பாலும், இந்த கோடுகளை எல்லா கார்களிலும் பார்க்க முடியாது. குறிப்பிட்ட மாடலின் டாப் வேரியண்ட் அல்லது மிட் வேரியண்ட் கொண்ட சில கார்களில் இந்த சிவப்பு கோடுகள் காணப்படும். இதை பார்த்ததும் காரின் பின் கண்ணாடியில் ஏன் இந்த சிவப்புக் கோடுகள் என்று நீங்கள் நினைத்தது உண்டா..? இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்று தெரியுமா..? தெரியவில்லை என்றால் காரின் பின் கண்ணாடியில் ஏன் இந்த சிவப்பு நிற கோடுகள் உள்ளது என்று இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

Also Read: Paris Olympic 2024 Ticket Rate: பாரிஸ் ஒலிம்பிக் டிக்கெட் எவ்வளவு..? எங்கு எப்படி வாங்குவது தெரியுமா?

எதற்காக இந்த சிவப்பு கோடுகள்..?

கார்களில் பின் பக்க கண்ணாடிகளில் (விண்டுஷீல்டில்) இந்த கோடுகள் இடம் பெற்றிருக்கும். இதை பலரும் டிசைன் ஸ்டிக்கர்கள் என்றே நினைத்து கொண்டுள்ளனர். ஆனால், இந்த சிவப்பு கோடுகள் டிசைன் ஸ்டிக்கர்கள் கிடையாது. பாதுகாப்பு நோக்கத்திற்காகவே இடம்பெற்றுள்ளது. ஒரு காரை பாதுகாப்பாக ஓட்டுவதற்கு பல விஷயங்களை கவனிக்க வேண்டும். இல்லையெனில், அதை விபத்தை ஏற்படுத்தலாம். காரின் பின் பக்க கண்ணாடியில் இடம்பெற்றுள்ள இந்த சிவப்பு கோடுகள் உலோகத்தால் செய்யப்பட்ட ஒயர்கள் ஆகும். இது ‘டிஃபோகர் கிரிட் லைன்’ (Defogger) அல்லது ‘டிஃப்ரோஸ்டர் கிரிட் லைன்’ (Defrosters) என்று அழைக்கப்படுகிறது.

இந்த சிவப்பு நிற கோடுகள் என்ன செய்யும்..?

பொதுவாக குளிர் காலங்களிலும், மழை காலங்களிலும் பனி மற்றும் மழை துளிகள் காரின் பின் பக்க கண்ணாடிகளில் பரவி படர்ந்திருக்கும். இதன்மூலம், காரை இயக்கும் டிரைவரால் ரியர் வியூ மிரர் மூலம் பின்னாடி எந்த வாகனங்கள் வருகிறது என்று தெளிவாக பார்க்க முடியாது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த சிக்கல்களை தவிர்க்கவே, இந்த சிவப்பு நிற கோடுகள் அதிக பயனுள்ளதாக இருக்கிறது.

Also Read: EB Bill : மின் கட்டணம் கம்மியா வரணுமா? இந்த டிப்ஸை வீட்டில் ஃபாலோ பண்ணுங்க!

அதாவது பின் பக்க கண்ணாடிகளில் இடம்பெற்றுள்ள இந்த சிவப்பு நிற கோடுகளுக்குள் இருக்கும் ஒயர்கள் வெகு விரைவாக பனி மற்றும் மழை பெய்யும்போது நீரை அகற்றுகிறது. அதாவது, இந்த டிஃப்ரோஸ்டர் கிரிட் லைனை பயன்படுத்த காரின் டேஷ்போர்டில் ஸ்விட்ச் வழங்கப்பட்டிருக்கும். பனி அல்லது மழை நீர்கள் பின் பக்க கண்ணாடியை முழுமையாக ஆக்கிரமித்து இருக்கும்போது, இந்த ஸ்விட்சை ஆன் செய்ய வேண்டும். அப்போது இந்த சிவப்பு நிற கோடுகளுக்குள் இருக்கும் ஒயர்களுக்கு மின்சாரம் பாய்ந்து சூடாகும். அந்த நேரத்தில், பனி மற்றும் நீர் துளிகள் வெப்பமடைந்து, ஆவியாகிவிடும்.

இதன் மூலம், டிரைவர் பின்பக்க ஜன்னல் வழியாக கூட பின்புற காட்சியை தெளிவாக பார்க்க முடியும். காரின் பின் கண்ணாடியில் உள்ள இந்த கோடுகள் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் பயணத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது. கார் கண்ணாடியை சுத்தம் செய்யும் போது பின் கண்ணாடியின் உள்ளே இருந்து இந்த கோடுகளை தொட்டு பார்க்கும்போது நீங்கள் அதை உணர செய்வீர்கள்.

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?