5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Budget Cars : லாங் டிரைவ் செல்ல ஏற்ற சூப்பரான 7 கார்கள்.. லிஸ்ட் இதோ!

Cars List : வீக் எண்டில் லாங் டிரைவ் செல்ல விரும்புவோர் எந்த காரை வாங்க வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கும். பாதுகாப்பாக இருக்குமா.. நீண்ட தூரம் சென்றாலும் களைப்பு ஏற்படாமல் இருக்குமா எனப் பல கேள்விகளுக்கு உங்களுக்கு வரும்.. ஆனால், ரொம்ப குழம்ப வேண்டாம்.. லாங் டிரைவ் பிரியர்களுக்கே ஏற்ற ஏழு கார்கள் லிஸ்டை ரெடி செய்து வைத்துள்ளோம். அவை என்னவென்று பார்க்கலாம்.

Budget Cars : லாங் டிரைவ் செல்ல ஏற்ற சூப்பரான 7 கார்கள்.. லிஸ்ட் இதோ!
கார்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 17 Jun 2024 12:04 PM

சூப்பர் கார் மாடல்கள் : வீக் எண்ட் வந்துவிட்டாலே காரை எடுத்துக் கொண்டு லாங் டிரைவ் செல்ல விரும்பும் நபரா நீங்கள்.. அப்போ உங்களுக்கு பக்காவாக செட் ஆகும் 7 கார் மாடல்கள் இருக்கிறது.. அவை குறித்து நாம் பார்க்கலாம்.பலருக்கும் இங்கு வண்டியை எடுத்துக் கொண்டு ஜாலியாக ஒரு லாங் டிரைவ் போக வேண்டும் என்பதே ஆசை.. அதிலும் ஐடி நிறுவனங்களில் வேலை செய்வோர் வீக் எண்ட் வந்துவிட்டாலே லாங் டிரைவ் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி வீக் எண்டில் லாங் டிரைவ் செல்ல விரும்புவோர் எந்த காரை வாங்க வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கும். பாதுகாப்பாக இருக்குமா.. நீண்ட தூரம் சென்றாலும் களைப்பு ஏற்படாமல் இருக்குமா எனப் பல கேள்விகளுக்கு உங்களுக்கு வரும்.. ஆனால், ரொம்ப குழம்ப வேண்டாம்.. லாங் டிரைவ் பிரியர்களுக்கே ஏற்ற ஏழு கார்கள் லிஸ்டை ரெடி செய்து வைத்துள்ளோம். அவை என்னவென்று பார்க்கலாம்.

ஹோண்டா அமேஸ்

கார் பிரியர்களுக்கு ஹோண்டா எந்தளவுக்கு நம்பகமான ஒரு கார் பிராண்டு என்பதை நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. அந்த ஹோண்டா அமேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள காம்பாக்ட் செடான் வகை கார் தான் இந்த ஹோண்டா அமேஸ்.. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்று இந்த ஹோண்டா அமேஸ். இந்த மாடல் 1.2L NA பெட்ரோல் i-VTEC இன்ஜினைக் கொண்டுள்ளது.. இது ஆட்டோமெடிக் CVT மாடல்களில் கிடைக்கும். இல்லைப்பா எனக்கு மேனுவல் கியர் கியர் மாடல் தான் வேண்டும் என்றால் அதற்கும் 5-ஸ்பீடு மேனுவல் ஆப்ஷனில் நமக்கு மாடல் இருக்கிறது. இந்த அமேஸ் மாடலில் இருக்கும் மிகச் சிறந்த சஸ்பென்ஷன் இதை நெடுஞ்சாலைகளுக்கு ஏற்றதாக மாற்றுகிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல இதன் சைஸ் சிறியதாக இருந்தாலும் பவர் வேற லெவலில் இருக்கும்.

Also Read : காரா இல்ல தேரா? வெளியீட்டுக்கு முன்னரே வெளியான எம்.ஜி அஸ்டர் படங்கள்!

டாடா அல்ட்ராஸ்

இது ​​ஒரு சிறந்த பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் காராகும்.. இது 1.2L பெட்ரோல் மற்றும் 1.5L டீசல் எஞ்சினுடன் வருகிறது. இந்த அல்ட்ராஸ் மாடலில் சஸ்பென்ஷன் ட்யூனிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.. இதனால் எவ்வளவு தூரம் ஓட்டினாலும் உங்களுக்குக் களைப்பே தெரியாது. மேலும், இது டாடாவின் கார் பாதுகாப்பு குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. பாதுகாப்பு ரேட்டிங்கில் பெரியவர்களுக்கு 5 ஸ்டாரும், குழந்தைகளுக்கு 4 ஸ்டாரும் பெற்றுள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்.. பாதுகாப்பு தான் உங்கள் முதல் சாய்ஸ் என்றால் கண்ணை மூடிக் கொண்டு இந்த டாடாவின் அல்ட்ராஸ் காரை வாங்கலாம்.

மாருதி சுஸுகி பலேனோ

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் கார் நிறுவனமான மாருதி சுஸுகியின் பலேனோவில் பல வசதிகள் கொட்டி கிடக்கிறது. இந்த கார் 1.NA பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. மாருதி ஒரு இந்திய நிறுவனம் என்பதால் இந்திய நெடுஞ்சாலைகளுக்கு ஏற்ப காரின் சஸ்பென்ஷனை எவ்வாறு அமைப்பது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.. இந்த காரில் அவர்கள் அதை மிகச் சிறப்பாகவே செய்துள்ளார்கள். எனவே, இந்தியா நெடுஞ்சாலைகளில் நீங்கள் நீண்ட தூரம் களைப்பின்றி பயணிக்க இந்த பலேனோ சிறந்த காராக இருக்கும்.

மாருதி சுசுகி சியாஸ்

இந்தியாவில் விற்பனையாகும் அண்டர்-ரேடட் செடான் கார் என்று இதைச் சொல்லலாம். பலருக்கும் இந்த கார் மாடலை பற்றி தெரியாது.. ஆனால், இது குறித்து தெரிந்தால் மற்ற கார் மாடல்களை வாங்கவே யோசிப்பார்கள்.. அந்தளவுக்குப் பல வசதிகள் கொட்டி கிடக்கிறது. 1.5L பெட்ரோல் எஞ்சினுடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் சிஸ்டத்தை இது கொண்டுள்ளது. மேலும், பாதுகாப்பு ரேட்டிங்கிலும் இதற்கு 4 ஸ்டார் என்பதால் இந்தியாவின் நெடுஞ்சாலைகளில் இந்த காரை வைத்துக் கொண்டு நம்பிக்கையாகப் பயணிக்கலாம்.

ஹூண்டாய் i20

பிரீமியம்-ஹேட்ச் செக்மென்ட்டில் வரும் இந்த மாடல் பல முக்கியமான வசதிகள் கொண்டு இருக்கிறது. 1.2L பெட்ரோல் எஞ்சின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர் மாடலுடன் இது வருகிறது.. பழைய ஹூண்டாய் மாடல்களில் சஸ்பென்ஷன் ஒரு பிரச்சினையாகவே இருக்கும். ஆனால், ஐ 20 போன்ற புதிய ஹூண்டாய் மாடல்கள் வேற லெவல் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது. இது நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரப் பயணத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது.

நெக்ஸான்

இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். இது 1.2l டர்போ பெட்ரோல் எஞ்சின் அல்லது 1.5லி டீசல் எஞ்சினுடன் வருகிறது. இந்தியாவில் இருக்கும் கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்றவாறு இந்த காரை டிசைன் செய்துள்ளனர். மேலும், லாங் டிரைவ் செல்ல உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் இது கொண்டுள்ளது. குறிப்பாக டாடா கார் என்பதால் பாதுகாப்பில் இதற்கும் 5 ஸ்டார் ரேட்டிங் தான்.

மஹிந்திரா XUV 3XO

எஸ்யுவி கார்களில் ஒன்றான இது, இந்த செக்மென்ட்டில் தவிர்க்கவே முடியாத ஒன்று.. இது 1.2L டர்போ பெட்ரோல் அல்லது 1.5L டீசல் இன்ஜின் என இரு ஆப்ஷன்களில் கிடைக்கிறது.. இதன் வீல்பேஸ் பெரியது என்பதால் அதிக வேகத்தில் சென்றாலும் நிலையாக இருக்கும்.. பாதுகாப்பிலும் இதற்கு 5 ஸ்டார் ரேட்டிங் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆட்டோமொபைல் துறையில் உள்ள வல்லுநர்களின் முதல் சாய்ஸாகவும் இந்த மஹிந்திரா XUV 3XO உள்ளது.