5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Budget 2024 : மத்திய பட்ஜெட் 2024.. ஆந்திராவுக்கு அள்ளிக்கொடுத்த மத்திய அரசு.. எவ்வளவு தெரியுமா?

Nirmala Sitharaman on Andhra Pradesh: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய திட்டங்கள் இடம் பெற்று இருந்தது. குறிப்பாக ஆந்திராவுக்கு இதில் பல அறிவிப்புகள் இருந்தன. வளர்ச்சி பணிகளுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு தொடங்கி பல திட்டங்களை நிர்மலா சீதாராமன் ஆந்திராவுக்க்கு அறிவித்துள்ளார். ஆந்திரா மாநில வளர்ச்சிக்காக ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் அறிவித்தார்.

Budget 2024 : மத்திய பட்ஜெட் 2024.. ஆந்திராவுக்கு அள்ளிக்கொடுத்த மத்திய அரசு.. எவ்வளவு தெரியுமா?
பட்ஜெட் 2024
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 Jul 2024 15:38 PM

ஆந்திராவுக்கு அள்ளிக்கொடுத்த மத்திய அரசு: நாடாளுமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவியேற்றது. இதையடுத்து இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ததன் மூலம் தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒரு முறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதி, சமூக நீதி, சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 9 விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள என நிர்மலா சீதாராமன் கூறினார். மேலும், இளைஞர், பெண்கள், விவசாயிகள், எழைகள் நலன் சார்ந்த திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக ஆந்திராவுக்கு இதில் பல அறிவிப்புகள் இருந்தன.

வளர்ச்சி பணிகளுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு தொடங்கி பல திட்டங்களை நிர்மலா சீதாராமன் ஆந்திராவுக்க்கு அறிவித்துள்ளார். ஆந்திரா மாநில வளர்ச்சிக்காக ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் அறிவித்தார். குறிப்பாக தலைநகரமாக உருவாகும் அமராவதியை நிறுவக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார். ஆந்திராவில் பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். ஆந்திராவில் நதிநீர், சாலை மேம்பாடு என பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். மேலும், மின்சாரம், சாலை, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார்.  பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

பீகாருக்கும் நிதி ஒதுக்கீடு:

பீகார் மாநிலத்திற்கு 3 அதிகவேக சாலை திட்டம் செயல்படுத்தப்படும். பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பீகாரில் வெள்ள பாதிப்புகளை தடுக்க ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பீகாரில் வெள்ள பாதிப்பை தடுக்கவும், பாசனத்திற்கும் திட்டம் கொண்டு வரப்படும். பீகார் மாநிலத்தின் காயா பகுதியில் உள்ள விஷ்ணுபாதம் கோயில், மகாபோதி கோயில், நாலந்தா மாவட்டத்தில் உள்ள நாலந்தா பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றை சுற்றுலாத்துறையின் கீழ் மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும் என்றார்.

2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கா பட்சத்தில், ஆந்திராவின் தெலுங்கு தேசம், பீகாரின் ஜக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக அமைத்திருக்கிறது. இதற்கு கைமாறாக பட்ஜெட்டில் இரண்டு மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Also Read: தங்கம் முதல் வருமான வரி வரை.. பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய டாப் தகவல்கள்

Latest News