PM Kisan: பிஎம் கிசான் திட்டத்தில் உதவித்தொகை உயர்த்தப்படுமா? பட்ஜெட்டில் காத்திருக்கும் சப்ரைஸ்! - Tamil News | | TV9 Tamil

PM Kisan: பிஎம் கிசான் திட்டத்தில் உதவித்தொகை உயர்த்தப்படுமா? பட்ஜெட்டில் காத்திருக்கும் சப்ரைஸ்!

Updated On: 

15 Jul 2024 14:11 PM

Budget 2024 : ஜூலை 23ஆம் தேதி, இந்தாண்டின் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்திற்கு அதிக தொகையை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திட்டத்திற்கான நிதியை 30 சதவீதம், அதிகரித்து அதாவது சுமார் ரூ.80,000 கோடியாக மத்திய அரசு உயர்த்தலாம் எனக் கூறப்படுகிறது.

PM Kisan: பிஎம் கிசான் திட்டத்தில் உதவித்தொகை உயர்த்தப்படுமா? பட்ஜெட்டில் காத்திருக்கும் சப்ரைஸ்!

மத்திய பட்ஜெட் 2024

Follow Us On

பட்ஜெட் 2024: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி தொடங்க உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கையும், இரண்டாவது நாளில் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். இதனால், முழு பட்ஜெட் மீது அனைவரின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. குறிப்பாக, வருமான வரி வலிக்கு உச்ச வரம்பு, ஜிஎஸ்டி திருத்தங்கள், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, தனிநபர் வருமான வரி விலக்கு உள்ளிட்டவற்றியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், பிரதம மந்திரி கிசான் திட்டம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்திற்கு அதிக தொகையை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: 7.5% வட்டி.. முதலீட்டை டபுள் ஆக்கும் அசத்தல் திட்டம்.. முதலீடு செய்வது எப்படி?

பிரதம மந்திரி கிசான் திட்டம்:

பிரதம மந்திரி கிசான் திட்டம் என்பது மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியல் அமல்படுத்தப்படுகிறது.  இந்த திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு, டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் 3 தவணைகளில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற வேண்டுமானால் பல நிபந்தனைகள் இருக்கிறது. அதன்படி, குடும்பத்தில் கணவர், மனைவி, மைனர் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். திட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி பயனாளிகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கண்டறிய வேண்டும்.

உதவித்தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், வரும் ஜூலை 23ஆம் தேதி, இந்தாண்டின் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்திற்கு அதிக தொகையை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

திட்டத்திற்கான நிதியை 30 சதவீதம், அதிகரித்து அதாவது சுமார் ரூ.80,000 கோடியாக மத்திய அரசு உயர்த்தலாம் எனக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்திற்கு 60,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம், பட்ஜெட் தாக்களுக்கு முன்னதாக விவசாயப் பிரதிநிதிகளுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டு இருந்தார். அதில் விவசாயிகளுக்கு அடிக்கப்படும் உதவித்தொகையை  6000 ரூபாயிலிருந்து 8000 ரூபாயாக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தற்போது அதிக நிதியை இந்த திட்டத்திற்கு ஒதுக்க நிதியமைச்சர் முடிவெடுத்திருப்பதாக நிதியமைச்சர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Also Read: ஆண்டுக்கு வட்டி மட்டுமே ரூ.66,600.. மாதாந்திர வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version