5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Economic Survey 2024: இன்று தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை.. அப்படி என்றால் என்ன? ஏன் முக்கியம்?

பொருளாதார ஆய்வறிக்கை 2024: முதல் நாளான இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து நாளை  மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். எனவே, இன்று தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன? அது ஏன் தாக்கல் செய்யப்படுகிறது? அதனின் முக்கியத்துவம் பற்றிய தகவலை பார்ப்போம்.

Economic Survey 2024: இன்று தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை.. அப்படி என்றால் என்ன? ஏன் முக்கியம்?
பொருளாதார ஆய்வறிக்கை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 22 Jul 2024 08:47 AM

பட்ஜெட் கூட்டத்தொடர்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 19 அமர்வுகளுடன் நடைபெறுகிறது. வழக்கமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை இறுதியில் தொடங்கி நடைபெறும். நடப்பாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் மழைக்கால கூட்டத் தொடர் பட்ஜெட் கூட்டத்தொடராக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து நாளை  மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். எனவே, இன்று தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன? அது ஏன் தாக்கல் செய்யப்படுகிறது? அதனின் முக்கியத்துவம் பற்றிய தகவலை பார்ப்போம்.

Also Read: ரூ.5 லட்சம் செலுத்தி ரூ.10,00,000 பெறலாம்.. முதலீட்டை டபுள் ஆக்கும் அசத்தல் திட்டம்.. முழு விவரம் இதோ!

பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன?

பொருளாதார ஆய்வறிக்கை என்பது நாட்டின் பொருளாதார தன்மையை காண்பிக்கும் அறிக்கையாகும். பொருளாதார அடிப்படையில் நாடு எந்த அளவு வளர்ச்சி அடைந்துள்ளது, வரும் வருடத்தில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் குறித்த தகவல்களை அளிக்கும் ஆவணமாகும். பொருளாதார ஆய்வறிக்கையானது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இதன் மூலம் நாட்டின் பொருளாதார தன்மையை அறிந்து பட்ஜெட் தயாரிப்பதற்கு இந்த அறிக்கை உதவும். 1950-51ஆம் ஆண்டில் முதல்முறையாக பொருளாதார ஆய்வறிக்கை கொண்டு வரப்பட்டது. 1964ஆம் ஆண்டு வரை மத்திய பட்ஜெட்டுன் சேர்த்தே பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதற்கு பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

யார் தயார் செய்வார்?

பொருளாதார ஆய்வறிக்கை தலைமை பொருளாதார ஆலோசகர்களின் வழிகாட்டுதலில் படி மத்திய நிதியமைச்சகம் தயார் செய்கிறது. ஆய்வறிக்கையை நிதிச் செயலாளரால் சரி பார்க்கப்பட்டு இறுதியில் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படுகிறது.

பொருளாதார ஆய்வறிக்கை ஏன் முக்கியம்?

பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் வருவாய், தொழிற்துறை உற்பத்தி, வேலைவாய்ப்பு, பணவீக்கம், வணிகம், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம், விலைவாசி, விவசாய உற்பத்தி உள்ளிட்டவைகளின் விவரங்கள் பொருளாதா ஆய்வறிக்கையில் இடம்பெறும். மேலும் அன்னிய செலவாணி கையிருப்பு போன்ற விவரங்களும் இடம்பெற்றிருக்கும். பொருளாதார ஆய்வறிக்கை மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. முதல் பகுதியில் நாட்டின் நிதி நிலை தொடர்பாக அரசின் நிலைப்பாடு பற்றிய தரவுகளும், நாட்டில் நிலவும் பொருளதார பிரச்னைகள் குறித்தும் இடம்பெறும். பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்கள் சமர்பிக்கும் தரவுகள், முக்கிய விவரங்களானது இரண்டாவது பாகத்தில் இடம்பெற்றுள்ளன. மூன்றாவது பகுதி நாட்டின் வருமானம், உற்பத்தி, வேலைவாய்ப்பு, பணவீக்கம், ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் என அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

இன்று எப்போது தாக்கல் செய்யப்படுகிறது?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.  பொருளாதார ஆய்வறிக்கை இன்று மதியம் 1 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது.

Also Read: மத்திய பட்ஜெட் 2024.. எதிர்ப்பார்ப்புகள் என்ன? வரி சலுகை அறிவிப்பு வெளியாகுமா?

Latest News