Budget 2024: எதிர்பார்ப்பை கிளப்பும் மோடி 3.0-ன் முதல் பட்ஜெட்.. எப்போது தாக்கல்? - Tamil News | | TV9 Tamil

Budget 2024: எதிர்பார்ப்பை கிளப்பும் மோடி 3.0-ன் முதல் பட்ஜெட்.. எப்போது தாக்கல்?

Updated On: 

18 Jun 2024 12:29 PM

Union Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மோடி 3.0 ஆட்சியின் முதல் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 2024-25ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 22ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கடந்த பிப்ரவரியில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.தற்போது பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக ஜூலை 3ஆவது வாரத்தில் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Budget 2024: எதிர்பார்ப்பை கிளப்பும் மோடி 3.0-ன் முதல் பட்ஜெட்.. எப்போது தாக்கல்?

நிர்மலா சீதாராமன்

Follow Us On

2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் எப்போது? நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணிக்கு 234 இடங்கள் கிடைத்தன. 240 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. தனிபெரும்பான்மை 272 கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்திய அக்கட்சி ஆட்சியமைத்தது. பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், 18வது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24ஆம் தேதி தொடங்கி இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார். மக்களவை கூட்டத்தின் முதல் 3 நாட்கள் புதிய எம்.பிக்கள் பதவியேற்பு மற்றும் அவைத் தலைவர் தேர்வு நடைபெற உள்ளது. மாநிலங்களவையின் 264-வது அமர்வு, ஜூன் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

தற்போதைய மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம் அதிகரித்துள்ளதால், விவாதத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றுவார். இந்த கூட்டத்தில் 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்  தாக்கல் தேதி அறிவிக்கப்படும்.  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மோடி 3.0 ஆட்சியின் முதல் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 2024-25ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 22ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கடந்த பிப்ரவரியில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Also Read: வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா.. ரேபரேலி எம்பியாக தொடரும் ராகுல் காந்தி!

எதிர்பார்ப்புகள் என்ன?

தற்போது பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக ஜூலை 3ஆவது வாரத்தில் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பல சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் நிலையை மேம்படுத்தவும் சில முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள், அரசின் முதலீட்டை அதிகரிப்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பெண்கள், குழந்தைகள், முதியவ்ரகளுக்கான பிரத்யேக திட்டங்களும், புதிய சலுகைகளும் இடம்பெற வாய்ப்புள்ளது.  ஒட்டுமொத்தமாக அடுத்த மாதம் தாக்கலாகும் முழு பட்ஜெட் பல்வேறு துறைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிக்கும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயின் சாதனையை கடந்த பிப்ரவரியில் சமன் செய்த நிர்மலா சீதாராமன், இப்போது புதிய சாதனை படைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வயநாட்டில் பிரியங்கா காந்தி.. தேர்தல் அரசியலில் சாதிப்பாரா?

 

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version