5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Union Budjet 2024: ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்படுமா? பட்ஜெட் மீது எகிறும் எதிர்பார்ப்புகள்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி தொடங்க உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கையும், இரண்டாவது நாளில் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.

Union Budjet 2024: ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்படுமா? பட்ஜெட் மீது எகிறும் எதிர்பார்ப்புகள்!
நிர்மலா சீதாராமன்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 03 Jul 2024 18:28 PM

ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்படுமா? பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி தொடங்க உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கையும், இரண்டாவது நாளில் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். இதனால், முழு பட்ஜெட் மீது அனைவரின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. குறிப்பாக, வருமான வரி வலிக்கு உச்ச வரம்பு, ஜிஎஸ்டி திருத்தங்கள், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, தனிநபர் வருமான வரி விலக்கு உள்ளிட்டவற்றியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறிப்பாக மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என சமானியர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மருத்துவ காப்பீட்டு துறையில் 2024 மத்திய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. பட்ஜெட்டில் சில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மருத்துவ காப்பீட்டை மக்கள் மத்தியில் ஊக்கவிக்க முடியும் என்றும் மக்களின் நிதி பாதுகாப்பை மேம்படுத்த முடியும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.

Also Read: திருமணத்திற்காக பிஎஃப் கணக்கிலிருந்து எவ்வளவு பணம் எடுக்கலாம்?.. விதிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!

மருத்துவ செலவுகள் அதிகரித்து வருவதால் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பிரீமியம் தொகைக்கான விலக்கு வரம்பு போதுமானதாக இல்லை போன்ற கோரிக்கைகளை முன்வைக்க மருத்துவ காப்பீட்டு துறை திட்டமிட்டு வருகிறது. மருத்துவ காப்பீடு திட்டத்தின் தற்போதை ஜிஎஸ்டி வரி 18 சதவீத விதிக்கப்படுகிறது.  இந்த நிலையில், இந்த ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படுமா? குறைக்கப்படுமா? என அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.

வேறு என்னென்ன எதிர்பார்ப்புகள்?

இந்த பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பல சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் நிலையை மேம்படுத்தவும் சில முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது.புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள், அரசின் முதலீட்டை அதிகரிப்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பெண்கள், குழந்தைகள், முதியவ்ரகளுக்கான பிரத்யேக திட்டங்களும், புதிய சலுகைகளும் இடம்பெற வாய்ப்புள்ளது.  ஒட்டுமொத்தமாக அடுத்த மாதம் தாக்கலாகும் முழு பட்ஜெட் பல்வேறு துறைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிக்கும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயின் சாதனையை கடந்த பிப்ரவரியில் சமன் செய்த நிர்மலா சீதாராமன், இப்போது புதிய சாதனை படைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: FD-க்களின் வட்டி விகிதத்தை உயர்த்திய வங்கிகள்.. எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டி வழங்குகின்றன.. முழு விவரம் இதோ!

Latest News