5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

FD Interest Rate : 1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

Interest Rate Increased | நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு குறிப்பிட்ட சில வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அந்த வகையில், பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் தங்களது 1 முதல் 2 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களின் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.

FD Interest Rate : 1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம் (Photo Credit : Soumyabrata Roy/NurPhoto via Getty Images)
vinalin
Vinalin Sweety | Updated On: 18 Nov 2024 13:44 PM

அக்டோபர் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு வரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, 1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகள் உயர்த்தியுள்ளன.

இதையும் படிங்க : Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கிகள்!

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கா அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்டுள்ள  வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Indian Rupees : இந்திய ரூபாய் நோட்டிற்கு காந்தியின் புகைப்படம் முதல் தேர்வு அல்ல.. முதல் தேர்வு என்ன தெரியுமா?

1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD-ன் வட்டி விகிதங்கள்

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 6.9% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.15% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பேங்க் ஆஃப் பரோடா 7.15% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.3% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

பேங்க் ஆஃப் இந்தியா

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பேங்க் ஆஃப் இந்தியா 6% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.3% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

இதையும் படிங்க : ரூ.2000 நோட்டுகள் பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கனரா வங்கி

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு கனரா வங்கி 6.25% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.25% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 6.25% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.45% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

இந்தியன் வங்கி

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்தியன் வங்கி 7.5% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.25% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 5.75% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.3% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

இதையும் படிங்க : Mark Zuckerberg : 200 மில்லியன் டாலர் சொத்து.. உலகின் 4வது பணக்காரராக உருவெடுத்த மார்க் ஜூக்கர்பெர்க்!

பஞ்சாப் நேஷனல் வங்கி

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி  7.05% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.25% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி 7.15% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.3% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

இதையும் படிங்க : Ration Shop : இனி வங்கிக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை.. எல்லாமே ரேஷன் கடையில் வரப்போகுது.. அரசின் அதிரடி திட்டம்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 6.5% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.25% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

Latest News