PM Kisaan: பிஎம் கிசான் திட்டம்.. உங்க அக்கவுண்டுக்கு ரூ.2000 வந்துதா? வரலனா இதை பண்ணுங்க - Tamil News | 18th installment of pm kisan released todat check the details in tamil news | TV9 Tamil

PM Kisaan: பிஎம் கிசான் திட்டம்.. உங்க அக்கவுண்டுக்கு ரூ.2000 வந்துதா? வரலனா இதை பண்ணுங்க

Updated On: 

05 Oct 2024 19:34 PM

பிஎம் கிசான் திட்டம்: பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் இன்று விவசாயிகளுக்கு ரூ.2,000 அவர்களது வங்கி கணக்கில் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 9.4 கோடி விவசாயிகள் பயன் அடைய உள்ளனர். ரூ.2000 விடுவிக்கப்பட்டதற்கான குறுஞ் செய்தியும் பயனாளிகளின் மொபைல் எண்ணிற்கு வந்திருக்கும்.

PM Kisaan: பிஎம் கிசான் திட்டம்.. உங்க அக்கவுண்டுக்கு ரூ.2000 வந்துதா? வரலனா இதை பண்ணுங்க

பிஎம் கிசான் திட்டம் (picture credit: Getty)

Follow Us On

பாஜக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்கள், விவசாயிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கு ஏற்றவாறு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம். இது விவசாயிகளுக்கான அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம். அதிலும் பொருளாதார ரீதியாக நிலவுற்ற விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் 3 தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

பிஎம் கிசான் திட்டம்

இந்த உதவித் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 17 தவணகளாக விவசாயிகளுக்கு ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக ஜூன் மாதம் 18ஆம் தேதி 17வது தவணை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

Also Read: வார இறுதி நாள்.. மாற்றம் கண்டதா தங்கம் விலை? இன்றைய நிலவரம் என்ன?

சுமார் 9.25 கோடி விவசாயிகள் ரூ. 2,000 தொகையைப் பெற்றனர். இந்த நிலையில், 18வது தவணை இன்று விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 9.4 கோடி விவசாயிகள் பயன் அடைய உள்ளனர்.

ரூ.2000 விடுவிக்கப்பட்டதற்கான குறுஞ் செய்தியும் பயனாளிகளின் மொபைல் எண்ணிற்கு வந்திருக்கும். மேலும், பிஎம் கிசான் திட்டத்தின அதிகாரப்பூர்வ இணையத்திலும் உங்கள் பணம் விடுவிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.

எப்படி பார்ப்பது?

  • முதலில் https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
  • அங்கு beneficiary status என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதில் உங்கள் மொபைல் நம்பர் அல்லது register number என எதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்
  • பின்பு மொபைல் எண் அல்லது register number-ஐ உள்ளீட வேண்டும்.
  • பின்னர், உங்கள் மாநிலம், மாவட்டம், கிராமம் உள்ளிட்ட விவரங்களை உள்ளீட்டு ரூ.2,000 விடுவிக்கப்பட்டுள்ளதாக என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ரூ.2,000 வரவில்லையா?

பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.2000 பணம் சிலருக்கு விடுவிக்கப்படாமல் இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் e-KYC புதுப்பிப்பது அவசியம். e-KYC புதுப்பிக்காவிட்டால் உங்களது வங்கி கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்படாது. எனவே, e-KYC புதுப்பிப்பது மிகவும் அவசியம். இருப்பினும், சில பயனாளிகள் e-KYC புதுப்பித்து இருப்பார்கள்.

Also Read: எஸ்பிஐ வழங்கும் “Green Rupee Term Deposit”.. வட்டி மட்டும் சிறப்பு அம்சங்கள் என்ன?

அவர்களுக்கு சில நேரங்களில் ரூ.2,000 வரவு வைக்கப்படாது. இதனால் சம்பந்தப்பட்ட பயனாளிகள் புகார் அளிக்கலாம். தகுதியான விவசாயி திங்கள் முதல் வெள்ளி வரை புகார் அளிக்கலாம். மின்னஞ்சல் மூலமாகவும் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம். pmkisan-ict@gov.in. மற்றும் pmkisan-funds@gov.in என்ற மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

மேலும், 011 – 24300606, 155262 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு இல்லாமல் https://pmkisan.gov.in/ என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்.

e-KYC புதுப்பிப்பது எப்படி?

பிஎம் கிசான் திட்டம் பயன்பெற e-KYC புதுப்பிப்பது அவசியமான ஒன்று. e-KYC புதுப்பிக்க மொத்த மூன்று வழிகள் உள்ளன. முதலில் பயனாளிகள் ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும். என்ற இணையதளத்திற்கு சென்று e-KYC என்பதை க்ளிக் செய்து உங்கள் ஆதார் எண்ணை உள்ளீட வேண்டும்.

பிறகு உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும். அந்த OTP-ஐ உள்ளீட்டு e-KYC புதுப்பித்து கொள்ளுங்கள். இரண்டாவது பயோமெட்ரிக் மூலம் e-KYC  புதுப்பிப்பிக்க முடியும். விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை யைமத்திற்கு சென்று பதிவு மற்றும் e-KYC செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
நெல்லிக்கனி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
Exit mobile version