5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali Bonus : ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. தீபாவளி போனஸ் அறிவித்த அரசு.. எவ்வளவு தெரியுமா?

Tamil Nadu Government | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Diwali Bonus : ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. தீபாவளி போனஸ் அறிவித்த அரசு.. எவ்வளவு தெரியுமா?
கோப்பு புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 06 Nov 2024 11:27 AM

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு ஊழியர்கள் போனஸ் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். நேற்று (அக்டோபர் 21) டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்டோபர் 22) ரேஷன் கடை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு எவ்வளவும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Monthly Income Scheme : வட்டி மட்டும் ரூ.66,600.. அதிக லாபம் வழங்கும் அஞ்சலக மாத வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!

அரசு ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் அகவிலைப்படி உயர்வு

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் போனஸ் மற்றும் அகவிலைப்படி உயர்வை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு.

இதையும் படிங்க : Share Market : கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை.. ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 20% போனஸ்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனங்களும் தனித்தனியாக தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், நேற்று (அக்டோபர் 21) டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : India’s UPI : மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் UPI சேவை.. பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என நம்பிக்கை!

25,824 ஊழியர்கள் பயனடைவார்கள்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த 20% தீபாவளி போனஸ் மூலம் 25,824 டாஸ்மாக் பணியாளர்கள் பயனடைய உள்ளனர். டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் ஆகியோருக்கு அதிகபட்சமாக 16,800 வரை தீபாவளி போனஸ் கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : FD Interest Rate : 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்கள்.. வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்திய ஆக்சிஸ் வங்கி!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட போனஸ்

நேற்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று ரேஷன் கடை ஊழியர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி ரேஷன் கடை ஊழியர்கள் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு அதிகபட்சமாக ரூ.7,000 வரை போனஸ் பெறுவார்கள்.

இதையும் படிங்க : EFPO : PF பயனர்களுக்கு இனிப்பான செய்தி வழங்கிய EPFO.. விதிகளில் மாற்றம்!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்திய அரசு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதன் மூலம் தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 54% ஆக உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாத ஊதியம் 28ஆம் தேதியே செலுத்தப்படும் என்று கூறப்படும் நிலையில், அதனுடன் சேர்த்து 3 மாத நிலுவை அகவிலைப்படி பணம், போனஸ் மற்றும் ஊதியம் வழங்கப்படும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Latest News