ஃபிக்ஸட் டெபாசிட்.. கனரா வங்கி vs எஸ்.பி.ஐ: எதில் பெஸ்ட் ரிட்டன்?
Fixed deposit schemes: 5 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் எஸ்.பி.ஐ மற்றும் கனரா வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம். இந்த வட்டி விகிதங்கள் பொது மற்றும் மூத்தக் குடிமக்கள் இடையே மாறுபடும்.
Fixed deposit schemes: ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது நிலையான வைப்புத் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் மொத்த தொகையை வங்கியில் முதலீடு செய்யும் ஒரு வகையான முதலீடு ஆகும். இந்த முதலீட்டில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையானது, எஃப்.டி கணக்கு திறக்கும் நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிலையான விகிதத்தில் வட்டி விகிதத்தை அளிக்கிறது. மேலும், இது ரிஸ்க் குறைந்த முதலீட்டு கருவியாகவும் பார்க்கப்படுகிறது.
ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி நிர்ணயம்
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற குறைந்த ரிஸ்க் கொண்ட திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இந்தத் திட்டத்தை பொறுத்தவைர முதலீடு கால அளவு, முதலீட்டாளரின் வயது ஆகியவையும் ஓர் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் ஓர் காரணியாக பார்க்கப்படுகிறது.
மேலும், வங்கிகளுக்கு வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் மாறுபடுகின்றன. இது தவிர, வங்கிகள் வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள், சிறப்பு எஃப்.டி திட்டங்களை வழங்குகின்றன. இதில் சில திட்டங்கள் மகளிர் மற்றும் மூத்தக் குடிமக்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கைள வழங்குகின்றன. தற்போது நாம் நாட்டின் முன்னணி வங்கிகளான எஸ்.பி.ஐ, கனரா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் குறித்து ஒப்பிட்டு பார்க்கலாம்.
இதையும் படிங்க : ஓராண்டில் 56% ரிட்டன்.. இந்த மியூச்சுவல் ஃபண்டை நோட் பண்ணுங்க!
எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட்
எஸ்.பி.ஐ வங்கியை பொறுத்தவைர, 5 ஆண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு சாதாரண குடிமக்களுக்கு 6.50 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதுவே, மூத்தக் குடிமக்களுக்கு 1 சதவீதம் கூடுதலாக 7.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் ஓர் சாதாரண முதலீட்டாளர் இந்தத் திட்டத்தில் ரூ.6 லட்சம் முதலீடு செய்திருந்தால் அவருக்கு ரூ.8 லட்சத்து 28 ஆயிரத்து 251 வருவாய் ஆக கிடைக்கும். ஆக, வட்டி மட்டுமே ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 251 கிடைக்கும்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு உயர் வட்டி வழங்கும் வங்கிகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த வங்கி சாதாரண குடிமக்களுக்கு 7 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 7.50 சதவீதமும் வட்டி வழங்குகிறது.
இதையடுத்து, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியை பொறுத்தவரை ரூ.6 லட்சம் முதலீடுக்கு சாதாரண குடிமக்களுக்கு வட்டியாக ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 866ம், மூத்தக் குடிமக்களாக இருந்தால் ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 968ம் கிடைக்கும்.
கனரா வங்கி
மற்றொரு பொதுத்துறை வங்கியான கனரா, 5 ஆண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு பொதுமக்களுக்கு 6.70 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 7.20 சதவீதமும் வட்டியை வழங்குகிறது. ஆக, கனராவில் ரூ.6 லட்சத்தை சாதாரண முதலீட்டாளர் முதலீடு செய்திருந்தால் அவருக்கு வட்டியாக ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 440ம், மொத்தமாக ரூ.8 லட்சத்து 36 ஆயிரத்து 440ம் 5 ஆண்டுகளுக்கு பின்னர் வருவாய் ஆக கிடைக்கும்.
இதுவே மூத்தக் குடிமக்களாக இருந்தால் ரூ.6 லட்சம் முதலீடுக்கு வட்டியாக மட்டும் ரூ.2 லட்சத்து 57 ஆயிரத்து 248ம், மொத்தமாக ரூ.8 லட்சத்து 57 ஆயிரத்து 248ம் கிடைக்கும்.
ஒப்பீட்டு பார்ப்பது அவசியம்- ஏன்?
இந்த 3 வங்கிகளிலும் ரூ.6 லட்சத்துக்கு பதிலாக ரூ.12 லட்சம் முதலீடு செய்தால் வட்டி மற்றும் முதிர்ச்சி வருவாய் இரடிப்பு ஆகவும் காணப்படும். மேலும், ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை பொறுத்தவரை மேலே குறிப்பிட்டதுபோல் வங்கிக்கு வங்கி வட்டி விகிதங்கள் வட்டி விகிதங்கள் வேறுபடும்.
ஆகவே முதலீட்டாளர் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால் கால அளவு, மூத்தக் குடிமக்கள் வட்டி விகிதம் ஆகியவற்றை அறிந்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இது உயர் வட்டி விகிதம் பெற உறுதுணையாக இருக்கும்.
இதையும் படிங்க : எஸ்.பி.ஐ லோன்கள் இனி காஸ்ட்லி.. எம்.சி.எல்.ஆர் மீண்டும் அதிகரிப்பு: என்ன காரணம்?
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.