Aadhaar : ஆதார் அட்டையை சான்றாக எடுக்க கூடாது.. உச்சநீதிமன்றம் சொன்ன முக்கிய தீர்ப்பு.. முழு விவரம் இதோ!
Supreme Court | இந்திய குடிமக்களின் அடையாள அட்டையாகவே ஆதார் விளங்குகிறது. பல சேவைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் பொதுமக்கள் குழம்பி போயுள்ளனர்.
இந்தியாவில் உள்ள அனைவரும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. சொல்லபோனால், இந்திய குடிமக்களின் அடையாள அட்டையாகவே ஆதார் விளங்குகிறது. பல சேவைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் பொதுமக்கள் குழம்பி போயுள்ளனர். இந்த நிலையில், உச்சநீதிமன்றம் கூறிய அந்த தீர்ப்பு என்ன, எந்த வழக்கில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Fixed Deposit : 3 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் முன்னணி வங்கிகள்.. பட்டியல் இதோ!
ஆதார் அட்டையை ஆவணமாக கருத முடியாது – உச்ச நீதிமன்றம்!
இந்தியாவில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் ஒருவரின் தனிநபர் அடையாள அட்டையாக மட்டுமன்றி, முக்கிய முகவரி சான்றிதழாகவும் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சேறுவது முதல் மருத்துவம், பயணம், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாய ஆவணமாக கோரப்படுகிறது. குறிப்பாக ஆதார் அட்டை இல்லாமல் பல காரியங்களை செய்யவே முடியாத நிலை உள்ளது. இத்தகைய முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை உள்ள நிலையில், ஆதார் அட்டையை வைத்து ஒருவரின் வயதை தீர்மாணிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதையும் படிங்க : November Changes : கேஸ் சிலிண்டர் முதல் தொலைத்தொடர்பு வரை.. நவம்பர் மாதம் வரவுள்ள அதிரடி மாற்றங்கள்!
காப்பீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
சாலை விபத்தில் உயிரிழந்தவருக்கு நீதிமன்றம் இழப்பீடு வழங்கிய வழக்கில், உயிரிழந்த நபரின் உறவினர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், உயிரிழந்த நபருக்கு MACT ரூ.19.35 லட்சம் இழப்பீடாக வழங்கியது. இந்த நிலையில், பஞ்சாப்-ஹரியான உயர்நீதிமன்றம், உயிரிழந்தவரின் வயது தவறாக கணக்கிடப்பட்டுள்ளதாக கூறி இழப்பீட்டு தொகையை ரூ.9.22 லட்சமாக குறைத்து அறிவித்தது. இதன் காரணமாக அந்த நபரின் உறவினர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இதையும் படிங்க : Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டம்.. மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?
பள்ளி சான்றிதழை வைத்து தான் கணக்கீடு செய்ய வேண்டும்
இந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பஞ்சாப்-ஹரியான உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்தது. இந்த வழக்கில் ஆதார் அட்டையின் அடிப்படையில் அந்த நபரின் வயது கணக்கீடு செய்யப்பட்டிருந்ததை அடுத்து, ஒருவருடைய வயதைக் கணக்கீடு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் ஒருவரின் வயதை சரிபார்க்க வேண்டும் என்றால் அவரின் பள்ளி சான்றிதழை வைத்து தான் கணக்கீடு செய்ய வேண்டும் என்றும் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ முதல் ஐசிஐசிஐ வரை.. 5 ஆண்டுகளுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!
ஆதார் முக்கிய சான்றாக கருதப்படாதா?
ஆதார் அட்டையை வைத்து வயதை கணக்கீடு செய்ய கூடாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், தற்போதைய சூழலில் பெரும்பாலான சேவைகளுக்கு ஆதார் முக்கிய சான்றாக கருதப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து பல்வேறு சேவைகளுக்கு ஆதார் முக்கிய ஆவணமாக எடுத்துக்கொள்ளப்படாமல் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.