5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aavin : ஆவினில் அறிமுகமாகிறது புதிய வகை பால்.. எப்போது தெரியுமா?

Green Magic Plus | இந்த புதிய வகை பால் பாக்கெட்டை அறிமுகம் செய்வது குறித்து ஆவின் நிர்வாகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆவின் நிர்வாகம் மூலம் தமிழ்நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 31 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யபபடுவதாக கூறப்பட்டுள்ளது.

Aavin : ஆவினில் அறிமுகமாகிறது புதிய வகை பால்.. எப்போது தெரியுமா?
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 14 Dec 2024 11:57 AM

அரசின் ஆவின் நிர்வாகம் பொதுமக்களின் தேவைக்காக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்து வருகிறது. மற்ற தனியார் பால் நிறுவனங்களின் விலையை விடவும் ஆவினில் பால் விலை சற்று குறைவாக உள்ளதால், ஏராளமான பொதுமக்கள் ஆவின் பாலை பயன்படுத்தி வருகின்றனர். ஆவினில் பால் மட்டுமன்றி பார் சார்ந்த தயிர், நெய் முதல் இனிப்பு வகைகள் வரை அனைத்தும் விற்பனை செய்யபப்டுவதால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த நிலையில், ஆவின் நிர்வாகம் புதிய பொருள் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆவின் நிர்வாகம் விரைவில் புதிய வகை பால் பாக்கெட்டை அறிமுகம் செய்ய உள்ளதாம். இந்த நிலையில், ஆவினின் இந்த புதிய அறிமுகம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : HDFC : FD திட்டங்களின் வட்டி விகிதங்களை உயர்த்திய ஹெச்டிஎஃப்சி.. எவ்வளவு தெரியுமா?

புதிய அறிமுகம் குறித்து ஆவின் நிர்வாகம் கூறுவது என்ன

இந்த புதிய வகை பால் பாக்கெட்டை அறிமுகம் செய்வது குறித்து ஆவின் நிர்வாகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆவின் நிர்வாகம் மூலம் தமிழ்நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 31 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யபபடுவதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல, தமிழ்நாட்டில் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான பால் பொருட்கள் எந்த வித பிரச்னைகளும் தடையுமின்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட ஆவின் பாலங்கள் செயல்பட்டு வருவதாகவும், சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பால் விநியோகம் செய்யபப்டுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் மற்றும் கூடும் இடங்களில் புதிய ஆவின் பாலங்கள் திறக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : EVKS Elangovan: தமிழக அரசியலில் தவிர்க்க முடியாதவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.. ஏன் தெரியுமா?

புதிய வகை பால் அறிமுகம் – ஆவின்

இந்த நிலையில் புதிய வகை பால் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது, பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது என்று ஆவின் கூறியுள்ளது. இந்த நிலையில், பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்த செறிவூட்டப்பட்ட புதிய வகையான பாலை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. அதாவது, இந்த புதிய செறிவூட்டப்பட்ட பாலை ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் என ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது.

இதையும் படிங்க : Australia : ரூ.54 லட்சம் போனஸ்.. ஊழியர்களை ஆனந்த கண்ணீரில் மிதக்க விட்ட நிறுவனம்!

ஆவினின் இந்த புதிய வகை பால் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, வரும் டிசம்பர் 18 ஆம் தேதி முதல் காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் முதற்கட்டமாக இந்த ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் விற்பனை செய்யப்பட உள்ளதாக ஆவின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News