5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aavin Ice Cream : ஐஸ்கிரீம்களின் விலையை அதிரடியாக உயர்த்தும் ஆவின்.. நவம்பர் 1 முதல் புதிய விலை அமல்!

Price Hike | தமிழ்நாட்டில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில், அரசின் ஆவின் நிறுவனமும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அரசின் நிறுவனம் என்பதாலும், குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாலும் ஆவினுக்கு வாடிக்கையாளர்கள் ஏராளம்.

Aavin Ice Cream : ஐஸ்கிரீம்களின் விலையை அதிரடியாக உயர்த்தும் ஆவின்.. நவம்பர் 1 முதல் புதிய விலை அமல்!
ஆவின் ஐஸ்கிரீம்
vinalin
Vinalin Sweety | Published: 22 Oct 2024 14:16 PM

பால், தயிர், நெய் உள்ளிட்ட பால் பொருட்களை தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் அரசின் நிறுவனமான ஆவின், தனது ஐஸ்கிரீம்  வகைகளின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது. தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்த ஆவின் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பால் பொருட்கள் விற்பனையில் லாபப் ஈட்டும் வகையில், ஐஸ்கிரீம்களின் விலை மற்றும் தரத்தை உயர்த்தி வழங்க உள்ளதாக ஆவின் தெரிவித்துள்ளது. ஆவினின் இந்த விலை உயர்வு வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள நிலையில், எவ்வளவு விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : India’s UPI : மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் UPI சேவை.. பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என நம்பிக்கை!

ஐஸ்கிரீம்களின் விலையை அதிரடியாக உயர்த்திய ஆவின்

தமிழ்நாட்டில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில், அரசின் ஆவின் நிறுவனமும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அரசின் நிறுவனம் என்பதாலும், குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாலும் ஆவினுக்கு வாடிக்கையாளர்கள் ஏராளம். இந்த நிலையில்தான் தனது ஐஸ்கிரீம்களின் விலையை ஆவின் அதிரடியாக உயர்த்தியுள்ளது.

இதையும் படிங்க : Fixed Deposit : 7.75% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் வழங்கும் ஆக்சிஸ் வங்கியின் FD திட்டங்கள்!

ரூ.3 முதல் ரூ.70 வரை விலையை உயர்த்திய ஆவின்

இது குறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ஆவினின் சுமார் 100 வகையான ஐஸ்கிரீம்களின் விலையை ரூ.3-ல் இருந்து 70 வரை உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஐஸ்கிரீம்களை வாங்கி விற்பனை செய்ய வியாபாரிகள் முன்வராத நிலையில் ஆவின் இந்த முடிவை எடுத்துள்ளது. அதுமட்டுமன்றி, சில புதிய வகை ஐஸ்கிரீம்களை அறிமுகம் செய்யவும், குல்ஃபி உள்ளிட்ட சில வகை ஐஸ்கிரீம்களின் விலையை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் குல்ஃபி ஐஸ்கிரீம் ரூ.15-க்கு விற்பனை செய்யப்படவும், பெரிய குல்ஃபி ரூ.40-க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : FD Interest Rate : 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்கள்.. வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்திய ஆக்சிஸ் வங்கி!

மொத்தமாக வாங்கும் ஐஸ்கிரீம்களுக்கு தள்ளுபடி

திருமணங்கள் மற்றும் விழாக்களுக்கு சிறப்பாக விற்பனை செய்யபப்டும் சுமார் 4,500 மில்லி லிட்டர் அளவு கொண்ட ஐஸ்கிரீமுக்கு ரூ.100 தள்ளுபடி வழங்கப்படும். இனி வரும் காலங்களில் சர்க்கரை சேர்க்கபடாத வெண்ணிலா ஐஸ்கிரீம் மற்றும் பெரிய குல்ஃபி ஆகியவற்றை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் போவதில்லை என்று ஆவின் கூறியுள்ளது. இந்த இரண்டு பொருட்களும் புதிய சுவை மற்றும் விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Ration Card : ரேஷன் அட்டையில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி.. முழு விவரம் இதோ!

தீபாவளி வரை பழைய விலையிலே விற்பனை செய்யபப்டும்

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் இனிப்புகளை செய்ய நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்குவர். சிலர் தங்கள் உறவினர்களுக்கு பரிசளிக்க இனிப்பு வகைகளை வாங்குவர். இதன் காரணமாக தீபாவளி முடியும் வரை பழைய விலை பட்டியலே பின்பற்றப்படும் என்றும் தீபாவளி முடிந்த பிறகு அதாவது வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் விலை ஏற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News