5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aavin : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய வியாபாரம்.. ரூ.115 கோடி வருமானம் ஈட்டிய ஆவின்!

Festival Season | நாளை (அக்டோபர் 31 ஆம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட உள்ளது. அதற்காக கடந்த ஒரு மாத காலமாகவே பொதுமக்கள் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு புது ஆடைகள் வாங்குவது, உறவினர்களுக்கு பரிசு வாங்குவது, இனிப்புகள் வாங்குவது என வியாபாரமும் கலைக்கட்டி வருகிறது.

Aavin : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய வியாபாரம்.. ரூ.115 கோடி வருமானம் ஈட்டிய ஆவின்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 30 Oct 2024 15:51 PM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசின் ஆவின் நிறுவனம் சுமார் ரூ.115 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி விற்பனையில், ஆவின் நிர்வாகம் ரூ.10 கோடி கூடுதலாக விற்பனை செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளி விற்பனை குறித்து ஆவின் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரத்தை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: தீபாவளில் நாளில் சென்னை உட்பட 8 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்!

கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகை

நாளை அதாவது அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட உள்ளது. அதற்காக கடந்த ஒரு மாத காலமாகவே பொதுமக்கள் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு புது ஆடைகள் வாங்குவது, உறவினர்களுக்கு பரிசு வாங்குவது, இனிப்புகள் வாங்குவது என வியாபாரமும் கலைக்கட்டி வருகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்புக்கு பஞ்சம் இருக்காது. பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின்போது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுவர். இதனால் இனிப்பு வியாபாரமும் களைக்கட்டும்.

இதையும் படிங்க : Sivakasi Crackers:களைகட்டிய விற்பனை.. ரூ.6000 கோடிக்கு பட்டாசு விற்பனை!

அந்த வகையில் அரசின் ஆவின் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.115 கோடிக்கு இனிப்பு விற்பனை செய்துள்ளதாக அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு வெறும் ரூ.105 கோடிக்கு மட்டுமே ஆவினில் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக ரூ.10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விஷமாக மாறிய மோமோஸ்.. பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்.. அதிர்ச்சி சம்பவம்!

தீபாவளி விற்பனை குறித்து ஆவின் வெளியிட்டுள்ள அறிக்கை

தீபாவளி விற்பனையை குறித்து அரசின் ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள ஆவின் பொருட்களுக்கான மூல பொருட்கள், சுமார் 4.5 லட்சம் கிராமப்புர பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொல்முதல் செய்யப்படுகிறது என்று கூறியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னையில் உள்ள ஆவின் நிலையம் ஆகியவற்றின் மூலம் சுகாதாரமான முறையில் உயர்ந்த தரத்தில் சுமார் 200 வகையான இனிப்பு பொருட்கள் தயாரிக்கப்பட்டு நுகர்வோர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Petrol Diesel Price: பெட்ரோல், டீசல் விலை குறைகிறதா? தீபாவளி நாளில் காத்திருக்கும் பரிசு!

40 ஆண்டுகளாக பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடியாக ஆவின் நிறுவனம் திகழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆவின் நிறுவனம் கிராம அளவில் உள்ள சுமார் லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை உயர்த்த ஆவின் முக்கிய பங்கு வகிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு ஆவினில் சிறப்பு விற்பனை

இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவது பல்வேறு சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அந்த பொருட்கள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆணடை விட இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.10 கோடி கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Ajithkumar: ஒன்றிணைந்து செயல்படுவோம்.. அஜித்தை அழைத்த உதயநிதி ஸ்டாலின்!

தீவாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பொருட்கள் விற்பனை கலைக்கட்டிய நிலையில், ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட உள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய தரம் மற்றும் புதிய விலையில் பொருட்களை விற்பனை செய்ய ஆவின் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News