Income Tax : 2024-ல் அதிக வருமான வரி செலுத்திய இந்திய நடிகர்கள்.. 2வது இடம் பிடித்த நடிகர் விஜய்.. முதல் இடம் யாருக்கு? - Tamil News | Actor Vijay took second place in annual tax paying celebrities list of India | TV9 Tamil

Income Tax : 2024-ல் அதிக வருமான வரி செலுத்திய இந்திய நடிகர்கள்.. 2வது இடம் பிடித்த நடிகர் விஜய்.. முதல் இடம் யாருக்கு?

Published: 

06 Sep 2024 12:03 PM

Actors List | இந்த நிலையில் இந்தியாவில் அதிக வரி செலுத்திய நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. பட்டியலில் பெரும்பாலும் பாலிவுட் நடிகர்களே ஆதிக்கம் செலுத்தும் நிலையில், தென்னிந்திய நடிகரின் பெயர் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

1 / 6இந்தியாவில்

இந்தியாவில் தனிநபர் வருமான வரி விதிக்கப்படுகிறது. அதன்படி, குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் அவர்களின் ஆண்டு ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதங்கள் சமீபத்திய பட்ஜெட்டில் மாற்றி அமைக்கப்பட்டது.

2 / 6

இந்த நிலையில் இந்தியாவில் அதிக வரி செலுத்திய நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. பட்டியலில் பெரும்பாலும் பாலிவுட் நடிகர்களே ஆதிக்கம் செலுத்தும் நிலையில், தென்னிந்திய நடிகரின் பெயர் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

3 / 6

அதன்படி இந்தியாவில் அதிக வரி செலுத்தும் நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் முதல் இடத்தில் உள்ளார். ரூ.92 கோடி வரி செலுத்தி அவர் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

4 / 6

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டின் இந்திய அரசுக்கு வரி செலுத்திய பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய் 2வது இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் மற்றும் 3வது இடத்தை பாலிவுட் பிரபலங்கள் பிடித்துள்ள நிலையில், தென்னிந்திய நடிகராக விஜய் 2வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

5 / 6

ரூ.80 கோடி வரி செலுத்தி நடிகர் விஜய் 2வது இடம் பிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து அதிக வரி செலுத்திய நடிகர்கள் பட்டியலில் விஜய் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

6 / 6

இந்த பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் பாலிவுட் பிரபலம் சல்மான் கான். இவர் ரூ.75 கோடி வரி செலுத்தி 2024 ஆம் ஆண்டின் இந்திய அரசுக்கு வரி செலுத்திய பிரபலங்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!