5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Adani Group : இந்தியாவில் கடனை வாங்கி குவிக்கும் அதானி.. அதிக வட்டியை குறைக்க மாஸ்டர் பிளான்?

Loan Increased | 2024 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் 84 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 17வது இடத்தை பிடித்துள்ளார் அதானி. அதன்படி இந்திய அளவில் 2வது இடம் பிடித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் அதானியின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.8.30 லட்சம் கோடியாக உள்ளது.

Adani Group : இந்தியாவில் கடனை வாங்கி குவிக்கும் அதானி.. அதிக வட்டியை குறைக்க மாஸ்டர் பிளான்?
கவுதம் அதானி
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 28 Aug 2024 16:48 PM

இந்தியாவில் அதிக கடன் வாங்கும் அதானி : உலக பணக்காரர்களில் ஒருவர் அதானி. கடந்த ஏப்ரல் மாதம் 2024 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் 84 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 17வது இடத்தை பிடித்துள்ளார் அதானி. அதன்படி இந்திய அளவில் 2வது இடம் பிடித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் அதானியின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.8.30 லட்சம் கோடியாக உள்ளது. முன்னதாக உலக பணக்காரர்கள் பட்டியலில் 609வது இடத்தில் இருந்த அதானி, 17வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதானி குழுமம் இந்திய வங்கிகளிடம் இருந்து அதிக கடன் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : Passport : பாஸ்போர்ட் இணையதளம் 3 நாட்களுக்கு செயல்படாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த கடன் மதிப்பு ரூ.2.27 லட்சம் கோடி

அதானி குழுமத்தின் தற்போதைய ஒட்டுமொத்த கடன் மதிப்பு ரூ.2.27 லட்சம் கோடியாக உள்ளது. அதில் ரூ.75,877 கோடியை உள்நாட்டில் நீண்ட கால அடிப்படையில் அதானி குழுமம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அதானி நிறுவனம் பெற்றுள்ள மொத்த கடனில் உள்நாட்டில் பெறபட்டுள்ள கடனின் பங்கு மட்டும் 36% என்பது குறிப்பிடத்தக்கது. அதானி குழுமம் இந்திய வங்கிகளிடம் கடன் பெறுவதை அதிகரித்துள்ளது. இதை அந்த நிறுவனத்தின் கடன் சார்ந்த தரவுகளும் உறுதி செய்கின்றன. வெளிநாடுகளில் கடன்களுக்கு அதிக வட்டி விதிக்கப்படும் நிலையில், அதனை குறைக்கும் விதமாக அதானி குழுமம் இந்தியாவில் அதிக கடன் தொகையை பெறுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : PAN Card : பான் கார்டில் தந்தை பெயர் இல்லை என்றால் செல்லாதா?.. வருமான வரித்துறை கூறுவது என்ன?

2022-23 நிதியாண்டில் வெறும் ரூ.59,250 கோடியாக இருந்த கடன்

கடந்த 2022-23 நிதியாண்டில் அதானி குழுமம் இந்தியாவில் பெற்ற கடன் ரூ.59,250 ஆக இருந்தது. ஆனால் தற்போது அது கனிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பாரத் ஸ்டேட் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட அரசு வங்கிகள் மட்டுமன்றி ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்ற பல்வேறு தனியார் வங்கிகளிடமும் அதானி குழுமம் கடன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Blue Aadhaar Card : ப்ளூ ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய எவ்வளவு செலுத்த வேண்டும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

உலகம் மற்றும் உள்நாட்டு அளவில் அதானி குழுமம் பெற்றுள்ள கிரெடிட் ரேட்டிங் மேம்பாடு இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Latest News