Share Market : இந்திய பங்குச்சந்தை கடும் சரிவு.. பயங்கர அடிவாங்கிய அதானி பங்குகள்!

Adani Stocks Crash : இந்திய தொழிலதிபர் அதானி லஞ்சம் கொடுத்தாக அமெரிக்க குற்றச்சாட்டு வைத்துள்ளது. இது தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, இன்று காலை அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்துள்ளன.

Share Market : இந்திய பங்குச்சந்தை கடும் சரிவு.. பயங்கர அடிவாங்கிய அதானி பங்குகள்!

பங்குச்சந்தை (picture credit : PTI)

Updated On: 

21 Nov 2024 11:27 AM

இந்திய தொழிலதிபர் அதானி லஞ்சம் கொடுத்தாக அமெரிக்க குற்றச்சாட்டு வைத்துள்ளது. இது தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, இன்று காலை அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்துள்ளன. அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பங்குகள் வர்த்தகத்தின் தொடக்கத்தில் 20 சதவீதம் வரை சரிவை கண்டன. இன்று காலை இந்திய பங்குச்சந்தை நிஃப்டி 187 புள்ளிகள் சரிந்து 23,330 ஆகவும், சென்செக்ஸ் 549 புள்ளிகள் சரிந்து 77,028 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.

பயங்கர அடிவாங்கிய அதானி பங்குகள்

கௌதம் அதானி லஞ்சம் பெற்றதாக அமெரிக்க குற்றச்சாட்டியதை அடுத்து, அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்தது. குறிப்பாக, அதானி பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.2.24 லட்சம் கோடி நஷ்டத்தை சந்தித்தது.

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகபட்சமாக ரூ.49 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. அதே நேரத்தில், அதானி கிரீன் எனர்ஜியின் மார்க்கெட் கேப் ரூ.42,000 கோடி நஷ்டத்தை சந்தித்தது.

அதானி போர்ட் மற்றும் SEZ ரூ.27,844  கோடி வரை நஷ்டத்தை சந்தித்தன. இதன் காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2,78,452 கோடியில் இருந்து ரூ.2,50,608 கோடியாக குறைந்துள்ளது. அதானி பவர் வர்த்தகத்தின் போது ரூ.36,006 கோடி வரை நஷ்டத்தை சந்தித்துள்ளது.

Also Read : அதானி பங்குகள் 20 சதவீதம் வரை வீழ்ச்சி: பின்னணி என்ன?

ரூ.2.24 லட்சம் கோடி இழப்பு

இதன் காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2,02,367 கோடியில் இருந்து ரூ.1,66,361 கோடியாக குறைந்துள்ளது. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் ரூ.20,950.36 கோடி வரை நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதன் காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,04,763 கோடியில் இருந்து ரூ.83,813 கோடியாக குறைந்துள்ளது.

மேலும், அதானி கிரீன் எனர்ஜி ரூ.42,865.415 கோடி வரை நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதன் காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2,23,509 கோடியில் இருந்து ரூ.1,80,644 கோடியாக குறைந்துள்ளது.

அதானி டோட்டல் கேஸ் ரூ.13,417 கோடி வரை சரிந்துள்ளது. இதன் காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.73,934 கோடியில் இருந்து ரூ.60,517 கோடியாக குறைந்துள்ளது.  ஏசிசி லிமிடெட் ரூ.596 கோடி வரை நஷ்டத்தை சந்தித்தது.

Also Read : மோசடியில் ஈடுபட்டரா அதானி? கோடிக்கணக்கில் அதிகாரிகளுக்கு லஞ்சம்.. அமெரிக்கா குற்றச்சாட்டு!

இதன் காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.41,032 கோடியில் இருந்து ரூ.35,062 கோடியாக குறைந்துள்ளது.  அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சரிந்துள்ளதால், அதானி குழுமம் இதுவரை ரூ.2,24,070.205 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதானி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு:

லஞ்சம் கொடுத்து அமெரிக்க முதலீடுகளை ஈர்த்தாக தொழிலதிபர் அதானி மீது நியூயார்க் நீதிமன்றம் வழக்குப்பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் சர்ச்சை தற்போது ஓய்ந்துள்ள நிலையில், மீண்டும் அதானி குழுமத்தின் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முன்வைத்துள்ளது. அதாவது, 2020 முதல் 2024ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு லட்ஞசமாக சுமார் 265 மில்லியன் டாலர் கொடுத்தாக அதானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் மூலம் அடுத்த 20 ஆண்களுக்கு அதானி குழுமத்திற்கு ஆண்டுதோறும் ரூ.16 ஆயிரம் கோடிக்கு லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், லஞ்சம் கொடுப்பதை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் கடன் தருபவர்களிடம் இருந்து 300 கோடி டாலருக்கு மேல் கடனாகவும், பத்திரமாகவும் அதானி நிறுவனம் பெற்றதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டியுள்ளார். அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று  காங்கிரஸ் வலியுறுத்து வருகிறது.

இரவு தூங்கும் முன் இந்த பழங்களை நிச்சயம் சாப்பிடக்கூடாது..
இந்த பிரச்சனை இருப்பவர்கள் தப்பி தவறி கூட பாதாம் சாப்பிடக்கூடாது..
குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி?
ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்..?