Karan Johar : கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்.. 50% பங்குகளை ரூ.1,000 கோடிக்கு வாங்கும் ஆதார் பூனவல்லா! - Tamil News | Adar Poonawalla buying Karan Johar's Dharma production 50 percentage stake for 1000 crore rupees | TV9 Tamil

Karan Johar : கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்.. 50% பங்குகளை ரூ.1,000 கோடிக்கு வாங்கும் ஆதார் பூனவல்லா!

Production | தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இந்திய பொழுதுபோக்குத் துறை விரிவடைந்துள்ளது. பல்வேறு துறைகளில் இருந்து உலக தரம் வாய்ந்த கருத்துக்களையும், கதைகளையும் பார்வையாளர்கள் எதிர்ப்பார்க்க தொடங்கிவிட்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தான் செரின் புரொடக்‌ஷன் மற்றும் தர்மா  புரொடக்‌ஷன் இந்த முடிவை எடுத்துள்ளது.

Karan Johar : கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்.. 50% பங்குகளை ரூ.1,000 கோடிக்கு வாங்கும் ஆதார் பூனவல்லா!

ஆதார் பூனவல்லா மற்றும் கரண் ஜோஹர்

Published: 

21 Oct 2024 13:27 PM

ஆதார் பூனவல்லா தலைமையிலான செரீன் புரொடக்‌ஷன், கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் தர்மடிக் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை சுமார் ரூ.1,000 கோடிக்கு வாங்க உள்ளதாக செய்தி குறிப்பு ஒன்றில் கூறியுள்ளது.  அதன்படி தர்மா நிறுவனத்தின் மீதமுள்ள 50 சதவீத பங்குகளை கரண் ஜோஹர் தக்கவைத்துக் கொள்வார் என்றும் மேலும் அந்த நிறுவனத்தின் செயல் தலைவராகா அவர் தொடர்ந்து நீடிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அபூர்வா மேத்தா நீடிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : GST Exemption: இன்சூரன்ஸ் டூ தண்ணீர் பாட்டில்.. ஜிஎஸ்டி வரி குறையப்போகுதா? நிர்மலா சீதாராமன் எடுத்த முடிவு!

புதிய இலக்கை அடைய கைக்கோர்த்த நிறுவனங்கள்

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இந்திய பொழுதுபோக்குத் துறை விரிவடைந்துள்ளது. பல்வேறு துறைகளில் இருந்து உலக தரம் வாய்ந்த கருத்துக்களையும், கதைகளையும் பார்வையாளர்கள் எதிர்ப்பார்க்க தொடங்கிவிட்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தான் செரீன் புரொடக்‌ஷன் மற்றும் தர்மா  புரொடக்‌ஷன் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த கூட்டணி, தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் கதைகளை உருவாக்குவது, விநியோகம் செய்வது, அதன் மூலம் பார்வையாளர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க வழிவகை செய்துள்ளது.

இதையும் படிங்க : Fixed Deposit : 3 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் 7 வாங்கிகள்.. பட்டியல் இதோ!

எனது நண்பருடன் இணைந்து பணியாற்றுவது பெருமகிழ்ச்சி – பூனவல்லா

இந்தியாவின் மிகச் சிறந்த தயாரிப்பு நிறுவனம் மற்றும் எனது நண்பர் கரண் ஜோஹர் உடன் இணைந்து இந்த பணியை செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் தர்மா நிறுவனத்தை வரும் நாட்களில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வோம் என்று செரீன் புரொடக்‌ஷன் தலைவர் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : DA Hike : அகவிலைப்படி உயர்வால் ஊதியத்தில் ஏற்றம்.. யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

சிறந்த கதை சொல்லும் முறையை அறிமுகம் செய்ய திட்டம்

செரீன் புரொடக்‌ஷன் மற்றும் தர்மா புரொடக்‌ஷன் இணைந்து தற்போதை தொழில்நுட்ப வளர்ச்சியில் உள்ள பார்வையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக சிறந்த கதைகள் மற்றும் கதைம் சொல்லும் முறையை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை மகிழ்விக்கவும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப திரைக்கதைகளை தயாரிக்கவும், டிஜிட்டல் தலைமுறையின் பொழுதுபோக்கின் எதிர்காலத்தை வடிவமைக்க விரும்புவதாகவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : Fixed Deposit : ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி.. அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!

இந்த முயற்சியின் மூலம் இந்திய பொழுதுபோக்கு தளங்களுக்கு இடையேயான உறவு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் என கூறப்படுகிறது. இந்திய பொழுதுபோக்குத் துறையை உலக அரங்கில் உயர்த்துவதற்கான காரணமாகவும் இந்த கூட்டணி அமைய உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Post Office Scheme : 8.2% வட்டி.. மாதம் ரூ.20,500 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்!

கரண் ஜோஹர் நம்பிக்கை

தர்மா புரொடக்‌ஷம் ஆரம் காலம் முதலே இந்திய கலாச்சாரத்தின் சாரத்தை படம்பிடிக்குவும், இதயபூர்வமான கதைகளையும் சொல்லி வருகிறது. எனது தந்தை அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திரைப்படஙக்ளை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டார். அவரின் அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காகவும், அவரது பார்வையை விரிவு படுத்துவதற்காகவும் எனது வாழ்க்கையை அர்பணித்தேன். அதன் ஒரு பகுதியாக இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளேன். இது எங்கள் உணர்ச்சிகரமான கதை சொல்லும் திறன் மற்றும் முன்னோக்கி சிந்திக்கும் வணிக உத்திகளின் சரியான கலவையாகும் என்று தர்மா புரொடக்‌ஷன் தலைவர் கரண் ஜோஹர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி!
சாத்துக்குடியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?