Share Market : உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?
Sensex and Nifty | இந்திய பங்குச்சந்தை கடும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்திய பங்குச்சந்தை நேற்று (அக்டோபர் 22) கடும் சரிவை சந்தித்தது. நேற்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1% குறைந்து வர்த்தகம் நடைபெற்றது. அதேபோல BSE-ன் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 4 சதவீதம் வரை சரிந்தன.
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில், நேற்று (அக்டோபர் 22) கடும் சரிவை சந்தித்தது. அதாவது நேற்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.9 லட்சம் கோடியை இழந்தனர். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் அச்சத்தில் இருந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இன்று (அக்டோபர் 23) பங்குச்சந்தை சற்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தையின் நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Diwali Bonus : ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. தீபாவளி போனஸ் அறிவித்த அரசு.. எவ்வளவு தெரியுமா?
போரால் கடும் பாதிப்பை சந்திக்கும் பங்குச்சந்தை
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதலே ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் மிக கடுமையான தாக்குதல் நடத்தியது. அதாவது ஒரே நேரத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகனைகளை வீசி, இஸ்ரேலை நிலைகுலைய செய்தது. ஈரானின் இந்த தாக்குதலால் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை தீவிரமடைய செய்தது.
இதையும் படிங்க : Monthly Income Scheme : வட்டி மட்டும் ரூ.66,600.. அதிக லாபம் வழங்கும் அஞ்சலக மாத வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!
ஈரானின் இந்த செயலால் கடும் கோபம் கொண்ட இஸ்ரேல், ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது. இதனை தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்த ராணுவத்தை திரட்டிய இஸ்ரேல், இரான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இவ்வாறு அங்கு நிலமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே சென்றது. இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை செய்யப்பட்ட சம்பவம் போரின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க : Aavin Ice Cream : ஐஸ்கிரீம்களின் விலையை அதிரடியாக உயர்த்தும் ஆவின்.. நவம்பர் 1 முதல் புதிய விலை அமல்!
ஒரே நாளின் ரூ.9 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்
இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை கடும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்திய பங்குச்சந்தை நேற்று (அக்டோபர் 22) கடும் சரிவை சந்தித்தது. நேற்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1% குறைந்து வர்த்தகம் நடைபெற்றது. அதேபோல BSE-ன் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 4 சதவீதம் வரை சரிந்தன. அதன் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. அதாவது முந்தைய அமர்வில் BSE-ல் பட்டியலிடப்பட்டிருந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த மூலதனம் ரூ.453.7 லட்சம் கோடியாக இருந்தது. அடுத்த அமர்வில் அது ரூ.444.7 லட்சம் கோடியாக குறைந்தது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் நேற்று ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடையை இழக்கும் நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க : India’s UPI : மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியாவின் UPI சேவை.. பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என நம்பிக்கை!
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
நேர்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய நிலையில், இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் B&P BSE சென்செக்ஸ் 162.52 புள்ளிகள் உயர்ந்து 80.383.24 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. இதேபோல, NSE நிஃப்டி 50 46.45 புள்ளிகள் உயர்ந்து 24,518.55 ஆக வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.