Airtel : ரீச்சார்ஜ் திட்டங்களில் விபத்து காப்பீடு.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஏர்டெல்.. எவ்வளவு தெரியுமா? - Tamil News | Airtel introduced insurance in its 3 prepaid recharge schemes | TV9 Tamil

Airtel : ரீச்சார்ஜ் திட்டங்களில் விபத்து காப்பீடு.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஏர்டெல்.. எவ்வளவு தெரியுமா?

Insurance Scheme | இந்த 3 ப்ரீ பெய்டு திட்டங்களை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள், ஐசிஐசிஐ லோம்பார்டு காப்பீட்டு நிறுவனத்துடன் தங்களது விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துக்கொள்ள ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை அங்கீகரிப்பார்கள்.

Airtel : ரீச்சார்ஜ் திட்டங்களில் விபத்து காப்பீடு.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஏர்டெல்.. எவ்வளவு தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Updated On: 

24 Oct 2024 16:07 PM

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், தனது பயனர்களுக்கு மருத்து காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஐசிஐசிஐ லோம்பார்ட் உடன் இணைந்துள்ள ஏர்டெல், தனது 3 ப்ரீ பெய்டு ரீச்சார்ஜ் திட்டங்களில் இந்த காப்பீடு திட்டங்களை அறிமுக செய்துள்ளது. இந்த நிலையில், ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன, எந்த எந்த ப்ரீ பெய்டு திட்டங்களில் இந்த சேவை வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Fixed Deposit : SBI-ன் 444 நாட்களுக்கான FD Vs ICICI-ன் 15 மாதங்களுக்கான FD.. அதிக லாபம் வழங்கும் திட்டம் எது?

சிறப்பு சலுகைகளை அறிவிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிரடியாக உயர்த்தின. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்பாரத விதமாக விலை உயர்த்தப்பட்டதால் பயனர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL-க்கு மாற தொடங்கினர். இந்த நிலையில் பயனர்களை தக்கவைத்துக்கொள்ளும் வகையில், ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் பயனர்களுக்கு ஒரு அசத்தலான சிறப்பு அம்சத்தை வழங்க திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க : UPI Payment : இனிமேல் இதை செய்ய UPI பேமண்ட் கட்டாயம்.. செபி கொண்டுவந்த புதிய விதிகள்.. நவம்பர் 1 முதல் அமல்!

அதாவது ஏர்டெல் நிறுவனம் தனது 3 ப்ரீ பெய்டு திட்டங்களில் மருத்துவ காப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த காப்பீடு திட்டத்தின் மூலம், விபத்தில் உயிரிழப்போருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோறுக்கு ரூ.25,000 பணமும் வழங்கப்படும் என்று ஏர்டெல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

காப்பீடு வழங்கப்படும் ப்ரீ பெய்டு திட்டங்கள்

ஏர்டெலின் ரூ.239, ரூ.399 மற்றும் ரூ.969 ஆகிய திட்டங்களில் விபத்துக்கான காப்பீட்டு பலன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த 3 ப்ரீ பெய்டு திட்டங்களை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள், ஐசிஐசிஐ லோம்பார்டு காப்பீட்டு நிறுவனத்துடன் தங்களது விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துக்கொள்ள ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை அங்கீகரிப்பார்கள். இதன் மூலம் அவர்களின் இன்சூரன்ஸ் உறுதி செய்யப்படும்.

இதையும் படிங்க : Post Office Scheme : ரூ.1,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.31 லட்சம் வரை வருமானம் பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

காப்பீடு திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள காப்பீட்டு திட்டத்துடன் கூடிய ப்ரீ பெய்டு திட்டங்களை பயன்படுத்த சில விதிமுறைகள் உள்ளன.

  • ஏர்டெல் நிறுவனத்தின் இந்த பாலிசி 18 முதல் 80 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
  • இந்த திட்டத்தின் உறுப்பினர், ஒரு நிகழ்விற்கு ஒரு பாலிசிக்கு ஒரு க்ளெய்ம் மட்டுமே செய்ய முடியும்.
  • பயனர்கள் ஒரு பாலிசி காலத்திற்குள் அதிக பட்சமாக 3 கிளைம்கள் மட்டுமே செய்ய முடியும்.
  • ஒருவேளை பயனர்கள் பல ஏர்டெல் ப்ரீபெய்டு சிக் கார்டுகள் வைத்திருக்கிறார்கள் என்றால், அதிகபட்சமாக ரூ.5,00,000 வரை காப்பீடு பெற முடியும்.
  • ரூ.ரூ.239, ரூ.399 மற்றும் ரூ.969 ஆகிய திட்டங்களின் கீழ் கிடைக்கும் இந்த காப்பீடு ரீச்சார்ஜ் செய்யப்பட்ட நாளின் நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : EPFO : PF உறுப்பினர்களுக்கு முக்கியச் செய்தி.. EPF பணத்தை எடுக்கும் விதிகளில் அதிரடி மாற்றம்.. முழு விவரம் இதோ!

மேற்குறிப்பிட்ட விதிகள் யாவும் இந்த காப்பீட்டு திட்டத்திற்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹேண்ட்சம் சிறுவன் யார் தெரியுதா?
தங்க நிற உடையில் மின்னும் நடிகை பூஜா ஹெக்டே!
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்?
சியா விதைகளுடன் இந்த உணவுகளை ஒரு போதும் சேர்க்கக்கூடாது..!