Amazon Great Indian Festival : அசத்தல் தள்ளுபடிகளுடன் வரப்போகும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. எப்போது தெரியுமா? - Tamil News | Amazon Greatest Indian festival will began on September 20th know the special offers | TV9 Tamil

Amazon Great Indian Festival : அசத்தல் தள்ளுபடிகளுடன் வரப்போகும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. எப்போது தெரியுமா?

Updated On: 

15 Sep 2024 20:11 PM

Offer | அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் குறித்து அமேசான் நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்பிளஸ் 11R, ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் 12R, ஒன்பிளஸ் Nord CE 4 Lite, ஒன்பிளஸ் Nord CE 4 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Amazon Great Indian Festival : அசத்தல் தள்ளுபடிகளுடன் வரப்போகும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. எப்போது தெரியுமா?

அமேசான்

Follow Us On

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் : 2024 ஆம் ஆண்டுக்கான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் எப்போது நடைபெறும் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மூலம் மொபைல் போன்கள் முதல் மின்சாதன பொருட்கள் வரை பல சாதனங்களை மிக குறைந்த விலையில் வாங்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் எப்போது தொடங்கவுள்ளது, என்ன என்ன சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Realme P2 Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி2 ப்ரோ.. விலை மற்றும் சிறப்பு அமங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சேலில் பல பொருட்கள் சிறப்பான சலுகைகளுடன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக ஒன்பிளஸ், போக்கோ X6 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அதிரடி சலுகைகளுடன் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் குறித்து அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக தான் அமேசான் நிறுவனம் தள்ளுபடி வழங்க உள்ள மொபைல் போன்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Apple 16 Series : இன்று தொடங்குகிறது ஆப்பிள் 16 சீரீஸ் ப்ரீ புக்கிங்.. எப்படி ஆர்டர் செய்வது.. முழு விவரம் இதோ!

அதிரடி சலுகைகளுடன் விற்பனையாக உள்ள ஸ்மார்ட்போன்கள்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் குறித்து அமேசான் நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்பிளஸ் 11R, ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் 12R, ஒன்பிளஸ் Nord CE 4 Lite, ஒன்பிளஸ் Nord CE 4 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ரியல்மி நாஸ்ரோ 70 ப்ரோ மற்றும் ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன்களும் தள்ளுபடி பெற உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Apple Airpod 4 : தலையை அசைத்தால் மட்டும் போதும்.. Call Attend செய்யலாம்.. ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4-ன் அசத்தல் அம்சங்கள்!

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களும் தள்ளுபடியுடன் கிடைக்கும்

iQOO Z9s Pro, iQOO Z9, iQOO Z9 Lite, iQOO Neo 9 Pro, iQOO 12 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது சலுகைகளுடன் விற்பனை செய்யப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா, கேலக்ஸி எம்15 உள்ளிட்டவையும் விலை குறைவாக விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ள ஜியோமி ஸ்மார்ட்போன்கள்

ஜியோமி ஸ்மார்ட்போன்களும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி Xiamoi 14 Civi, Redmi 13, Redmi Note 13, Xiaomi 14 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அடங்கும். இதேபோல டெக்னோ, ஹானர், ஓப்போ மற்றும் விவோ மொபைல் போன்களும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

இதையும் படிங்க : iPhone 16 Series : சந்தையில் அறிமுகமானது ஐபோன் 16 சீரீஸ்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

மொபைல் சம்மந்தமான பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடி

ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுவது மட்டுமன்றி ஸ்மார்ட்போன்களுடன் தொடர்புடைய பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது OnePlus Nord Buds 2r, Sony C700 உள்ளிட்ட வையர்லஸ் ஏர்பாட்ஸ் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல பவர் பேங்க், சார்ஜர், சார்ஜிங் கேபிள்ஸ் உள்ளிட்ட பொருட்களும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிகப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version