Amrit Kalash : பொது குடிமக்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை.. அம்ரித் கலாஷ் திட்டத்தில் FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் SBI..

SBI Interest Rate | திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், அம்ரித் கலாஷ் திட்டத்தில் 1 முதல் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு எஸ்.பி.ஐ வங்கி வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். 

Amrit Kalash : பொது குடிமக்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை.. அம்ரித் கலாஷ் திட்டத்தில் FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் SBI..

கோப்பு புகைப்படம் (Photo Credit : Pixabay)

Published: 

03 Sep 2024 15:15 PM

நிலையான வைப்புநிதி : சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், அம்ரித் கலாஷ் திட்டத்தில் 1 முதல் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு எஸ்.பி.ஐ வங்கி வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Fixed Deposit : FD-களுக்கு 8.05% வரை வட்டி வழங்கும் தனியார் துறை வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

அம்ரித் கலாஷ் என்றால் என்ன?

உள்நாட்டு மற்றும் என்.ஆர்.ஐ வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் எஸ்.பி.ஐ வங்கியின் இந்த அம்ரித் கலாஷ் நிலையான வைப்புநிதி திட்டம். இந்த திட்டம் மூலம் மூத்த குடிமக்கள் மட்டுமன்றி பொதுக் குடிமக்களுக்கும் அதிக வட்டி வழங்கப்படுகிறது. இந்நிலையில் மூத்த குடிமக்கள் மற்றும் பொதுக் குடிமக்களுக்கு அம்ரித் கலாஷ் வழங்கும் வட்டி விகிதங்கள் என்ன என விரிவாக பார்க்கலாம்.

பொதுக் குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் FD வட்டி விகிதம்

பொதுக் குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ்.பி.ஐ வங்கி 7.25% வரை வட்டி வழங்குகிறது.

பொதுக் குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 1 ஆண்டு FD வட்டி விகிதம் : பொதுக் குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 1 ஆண்டு நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ்.பி.ஐ வங்கி 6.80% வரை வட்டி வழங்குகிறது.

பொதுக் குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 3 ஆண்டுகளுக்கான FD வட்டி விகிதம் : பொதுக் குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ்.பி.ஐ வங்கி 6.75% வரை வட்டி வழங்குகிறது.

பொதுக் குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 5 ஆண்டுகளுக்கான FD வட்டி விகிதம் : பொதுக் குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ்.பி.ஐ வங்கி 6.50% வரை வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : Credit Card : உங்களுக்கான சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்வது எப்படி?.. இந்த 5 விஷயம் தான் முக்கியம்!

மூத்த குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் FD வட்டி விகிதம்

மூத்த குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ்.பி.ஐ வங்கி 7.75% வரை வட்டி வழங்குகிறது.

மூத்த குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 1 ஆண்டு FD வட்டி விகிதம் : மூத்த குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 1 ஆண்டு நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ்.பி.ஐ வங்கி 7.30% வரை வட்டி வழங்குகிறது.

மூத்த குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 3 ஆண்டுகளுக்கான FD வட்டி விகிதம் : மூத்த குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ்.பி.ஐ வங்கி 7.25% வரை வட்டி வழங்குகிறது.

மூத்த குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 5 ஆண்டுகளுக்கான FD வட்டி விகிதம் : மூத்த குடிமக்களுக்கான அம்ரித் கலாஷ் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ்.பி.ஐ வங்கி 7.50% வரை வட்டி வழங்குகிறது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!