5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Australia : ரூ.54 லட்சம் போனஸ்.. ஊழியர்களை ஆனந்த கண்ணீரில் மிதக்க விட்ட நிறுவனம்!

Air Trunk | ஏர் டிரங்க் நிறுவனம் சிட்னியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்காவின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக் ஸ்டோனுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்தது. அந்த ஒப்பந்தம் என்னவென்றால், பிளாக் ஸ்டோன் நிறுவனம் ஏர் டிரங்க் நிறுவனத்தை 24 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது.

Australia : ரூ.54 லட்சம் போனஸ்.. ஊழியர்களை ஆனந்த கண்ணீரில் மிதக்க விட்ட நிறுவனம்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 14 Dec 2024 08:56 AM

உலக அளவில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் நிதி தேவைகளுக்காக வேலை செய்கின்றனர். சிலர் தங்களின் சொந்த முதலீடு அல்லது கடன் மூலம் தொழில் செய்யும் நிலையில், பெரும்பாலான மக்கள் ஏதேனும் ஒரு நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். தொழில் தொடங்குவதற்கான முதலீடு இல்லாதது, தொழில் குறித்த பயம் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான மக்கள் தொழில் செய்வதில்லை. இந்த நிலையில், தங்களிடம் பணி செய்யும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு நிறுவனங்கள் சில சிறப்பு சலுகைகளை வழங்கும். குறிப்பாக கல்வி கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட உதவிகளை பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்காக வழங்கி வருகின்றன. இதுபோக, போனஸ், சம்பள உயர்வும் வழங்கப்படுகின்றன. ஆனால், ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு ரூ.54 லட்சம் போனஸ் வழங்கி அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : Elon Musk : ரூ.37 லட்சம் கோடியை தாண்டிய சொத்து மதிப்பு.. வரலாற்று சாதனை படைத்த எலான் மஸ்க்!

ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஏர் டிரங்க் நிறுவனம்

இந்த ஏர் டிரங்க் நிறுவனம் சிட்னியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்காவின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக் ஸ்டோனுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்தது. அந்த ஒப்பந்தம் என்னவென்றால், பிளாக் ஸ்டோன் நிறுவனம் ஏர் டிரங்க் நிறுவனத்தை 24 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது. இந்த நிலையில், நிறுவனத்தை விற்ற தொகையில் இருந்து தங்களது ஊழியர்களுக்கு ஒரு பெரிய அளவு தொகையை இந்த நிறுவனம் வழங்கியுள்ளது. அதாவது ஒரு ஊழியருக்கு தலா 65 ஆயிரம் டாலர்களை போனஸாக வழங்கியுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.54 லட்சம் ஆகும். அதன்படி, இந்த ஏர் டிரங்க் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரிந்த சுமார் 330 ஊழியர்களுக்கு போனஸ் வழங்கியுள்ளது. ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக மட்டும் அந்த நிறுவனம் சுமார் 22 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Ramachandra Aggarwal : அன்று கடனில் தொடங்கிய தொழில்.. இன்று ரூ.2,000 கோடிக்கு அதிபதி.. யார் இந்த ராமச்சந்திர அகர்வால்?

100 பில்லியன் மதிப்புக்கொண்ட நிறுவனமாக மாற வேண்டும்

இந்த ஏர் டிரங்க் நிறுவனத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு ராபின் கூடா என்பர் நிறுவினார். இந்த நிறுவனம் ஜப்பான், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் மொத்தம் 11 டேட்டா மையங்களை நிறுவியுள்ளது. இது கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு டேட்டா சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி, இந்த நிறுவனம் உலக அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், ஏர் டிரங்க் நிறுவனத்தை சுமார் 100 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கொண்ட நிறுவனமாக மாற்றுவதே தனது இலக்கு என்று நிறுவனத்தின் தலைவர் ராபின் கூடா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : PF Claim : உங்கள் பிஎஃப் க்ளெய்ம் நிராகரிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

தற்போது ஏர் டிரங்க் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 24 பில்லியன் டாலர்களாக உள்ள நிலையில், அதன் சொத்து மதிப்பு விரைவில் 100 பில்லியன் டாலர்களை எட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Latest News