Marriage Loan : கடன் வாங்கிதான் திருமணத்தை நடத்த வேண்டுமா? இதை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்! - Tamil News | avoid getting load for your marriage this will make your economy fall | TV9 Tamil

Marriage Loan : கடன் வாங்கிதான் திருமணத்தை நடத்த வேண்டுமா? இதை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Marriage Facts | நீங்கள் பட்ஜெட் போட்ட அளவிற்கு பணத்தை சேமிக்கவில்லை என்றால் கடன் வாங்குவதற்கு பதிலாக உங்கள் திருமணத்தின் பட்ஜெட்டை குறைத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். பிரம்மாண்ட தோற்றத்துடன் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் கடன் வாங்கி திருமணம் செய்வது மிகவும் தவறான பொருளாதார நடைமுறையாகும்.

Marriage Loan : கடன் வாங்கிதான் திருமணத்தை நடத்த வேண்டுமா? இதை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

மாதிரி புகைப்படம்

Published: 

09 Jul 2024 18:33 PM

திருமணம் : இந்தியாவில் பல வகையான கலாச்சாரமும், நடைமுறைகளும் பின்பற்றப்ப்பட்டு வருகின்றன. அவற்றில் முதன்மையானது திருமணம். இந்திய கலாச்சாரத்தில் திருமணங்களுக்கு எப்பொழுதும் தனி சிறப்பு உண்டு. இந்திய  பெற்றோர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் குழந்தைகளில் திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக தங்கள் சொத்துக்களை கூட விற்பனை செய்து திருமணத்தை செய்து வைப்பார்கள். ஆனால் தற்போது சூழல் மாறிவிட்டது. பிள்ளைகள் தங்களின் திருமண செலவிற்கு தாங்களே பொருப்பேற்றுக்கொள்கின்றனர்.

பட்ஜெட்டில் திருமணத்தை திட்டமிடுங்கள்

இந்நிலையில், திருமணத்திற்கு தேவையான பணம் இல்லையென்றால் வங்கியில் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். திருமணங்களுக்கு கடன் உதவி வழங்க நிறுவனங்களும், வங்கிகளும் தயாராக உள்ளனர். திருமணம் என்பது ஒரு முறைதான், அது என்றும் நினைவில் இருக்கும்படி மிக பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்றும் எல்லாம் கூறுவார்கள். ஆனால் திருமணத்திற்காக கடன் வாங்குவது உங்களுக்கு நிதி பற்றாக்குறையை ஏற்படுத்துவதுடன் உங்கள் பொருளாதாரத்தை பாதிக்கும்.

நீங்கள் பட்ஜெட் போட்ட அளவிற்கு பணத்தை சேமிக்கவில்லை என்றால் கடன் வாங்குவதற்கு பதிலாக உங்கள் திருமணத்தின் பட்ஜெட்டை குறைத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். பிரம்மாண்ட தோற்றத்துடன் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் கடன் வாங்கி திருமணம் செய்வது மிகவும் தவறான பொருளாதார நடைமுறையாகும்.

இதையும் படிங்க : மாதம் ரூ.20,000 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

பட்ஜெட் திருமணங்கள்

ஆடம்பரமாக திருமணங்கள் செய்யப்படும் இந்த காலக்கட்டத்தில், கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட போது நிச்சயிக்கப்பட்ட பிரம்மாண்ட திருமணங்கள் கூட மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றன. திருமண மண்டபங்களில் கூட திருமணங்களை நடத்த முடியாமல் வீடுகளுக்குள்ளே திருமணங்கள் நடைபெற்றன. அப்பொழுது திருமணம் செய்தவர்கள் தாங்கள் ஆசை பட்டது போல மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடக்கவில்லையே என வருதப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போது அவர்களின் பொருளாதாரம் சிறப்பானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.

இதையும் படிங்க : Gold Bonds : தங்க பத்திரம் உள்ளிட்ட சேமிப்பு பத்திரங்கள்.. எதை கவனிக்கனும்? வட்டி மற்றும் முதலீட்டு விவரம்!

எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்குள் திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பபர்கள் இன்றே அதற்கான சேமிப்பை தொடங்குவது நல்லது. ஒருவேளை திட்டமிட்டபடி, போதிய தொகையை உங்களால் சேமிக்க முடியவில்லை என்றால் திருமணத்தை பட்ஜெட்டை குறைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் கடன் வாங்கி திருமணம் செய்த பிறகு, அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு நீங்கள் EMI செலுத்த வேண்டிய நிலை வரும். இதனால் உங்கள் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படலாம். எனவே கடன் வாங்கி திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!