5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஆக்ஸிஸ் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு: புதிய வீதத்தை செக் பண்ணுங்க!

Axis Bank Fixed Deposit Rates: ஆக்ஸிஸ் வங்கி, 7-29 நாள்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 3.00% வட்டி விகிதத்தை வழங்கும். அதே நேரத்தில் வங்கி 30-45 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3.50% நிலையான வட்டி விகிதத்தை கொடுக்கும். மேலும், 46 முதல் 60 நாட்களுக்குள்ளான டெபாசிட்களுக்கு 4.25% ஆகவும், 61 முதல் மூன்று மாதங்களுக்கு இடைப்பட்ட எஃப்.டி-களுக்கு 4.50% ஆகவும் இருக்கும்.

ஆக்ஸிஸ் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு: புதிய வீதத்தை செக் பண்ணுங்க!
ஆக்ஸிஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்.
Follow Us
intern
Tamil TV9 | Published: 21 Jun 2024 20:03 PM

ஆக்ஸிஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு: நாட்டின் 4ஆவது பெரிய தனியார் பேங்க் ஆன ஆக்சிஸ் வங்கி ரூ.3 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ஆக்சிஸ் வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் வாடிக்கையாளர்கள் இப்போது 1 வருடம் முதல் 15 மாதங்கள் வரையிலான கால எல்லையில் 30 bps அதிக வட்டி விகிதங்களைப் பெறலாம். ஆக்ஸிஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி சமீபத்திய வட்டி விகிதங்கள் ஜூன் 19 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த அதிரடி உயர்வு அறிவிப்பு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்.பி.ஐ) ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வுக்கு பின்னர் அமலுக்கு வந்துள்ளது. எஸ்.பி.ஐ, ஜூன் 15ஆம் தேதி, 1 வருடத்திற்கும் குறைவான காலக்கட்டத்தில் உள்ள எஃப்.டி.களின் வட்டி விகிதங்களை 25 பி.பி.எஸ் உயர்த்தியது.

ஆக்ஸிஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்

ஆக்ஸிஸ் வங்கி, 7-29 நாள்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 3.00% வட்டி விகிதத்தை வழங்கும். அதே நேரத்தில் வங்கி 30-45 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3.50% நிலையான வட்டி விகிதத்தை கொடுக்கும். மேலும், 46 முதல் 60 நாட்களுக்குள்ளான டெபாசிட்களுக்கு 4.25% ஆகவும், 61 முதல் மூன்று மாதங்களுக்கு இடைப்பட்ட எஃப்.டி-களுக்கு 4.50% ஆகவும் இருக்கும். மூன்று முதல் ஆறு மாதங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 4.75% வட்டி விகிதம் கிடைக்கும். ஆறு முதல் ஒன்பது மாதங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு 5.75% வருமானம் கிடைக்கும்.
மேலும், ஒரு வருடத்தில் இருந்து 15 மாதங்களில் முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 6.70% லிருந்து 7% ஆக 30 bps ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 9 மாதங்கள் முதல் ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்டுகள் இன்னும் அதே வட்டி விகிதமான 6.00% பெறும். அதேநேரத்தில், 15 முதல் 17 மாத கால டெபாசிட்கள் 7.10% வட்டி விகிதம் பெறும். தொடர்ந்து, 17 முதல் 18 மாத காலத்திற்கு 7.20% வட்டி விகிதமும், 18 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 7.10% வட்டியும், 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 7% வட்டியும் கிடைக்கும்.

எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட்

எஸ்.பி.ஐ, 7 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 3.50% வட்டி விகிதத்தை தொடர்ந்து வழங்கும். அதே நேரத்தில் 46 முதல் 179 நாட்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு 5.50% வட்டி விகிதம் கிடைக்கும். மேலும், 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான காலக்கெடுவிற்கு, எஸ்.பி.ஐ வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் 6% லிருந்து 6.25% ஆக உயர்த்தியுள்ளது. 211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு, வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் 6.25% லிருந்து 6.50% ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில், 1 வருடத்தில் இருந்து 2 வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 6.80% வட்டி விகிதமும், 2 வருடங்கள் முதல் 3 வருடங்களுக்கு குறைவாக உள்ள எஃப்.டி.-களுக்கு 7% வட்டி விகிதமும் தொடர்ந்து வழங்கப்படும். 3 வருடங்களில் இருந்து 5 வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் உள்நாட்டு டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதம் 6.75% ஆகவும், ஐந்து ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் கணக்குகளின் வட்டி விகிதம் 6.50% ஆகவும் இருக்கும்.

இதையும் படிங்க : ரூ.1 கோடி வரை காப்பீடு.. ஈஸி ஏர்போர்ட் லவுஞ்ச்: SBI கிரெடிட் கார்டு தெரியுமா?

Latest News