5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bob Utsav : அதிக வட்டியுடன் கூடிய புதிய FD திட்டத்தை அறிமுகம் செய்த பேங்க் ஆஃப் பரோடா.. சிறப்பு அம்சங்கள் என்ன?

Investment Scheme | சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Bob Utsav : அதிக வட்டியுடன் கூடிய புதிய FD திட்டத்தை அறிமுகம் செய்த பேங்க் ஆஃப் பரோடா.. சிறப்பு அம்சங்கள் என்ன?
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 15 Oct 2024 19:17 PM

பேங்க் ஆஃப் பரோடா சமீபத்தில் தனது நிலையான வைப்புநிதி திட்டங்களின் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. அதுமட்டுமன்றி, பிஓபி உட்சவ் என்ற பெயரில் புதிய வைப்புநிதி திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. பேங்க் ஆஃப் பரோடாவின் இந்த திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும். பேங்க் ஆஃப் பரோடா வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள நிலையில், நேற்று முதல் அது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் எவ்வளவு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது, புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சேமிப்பு திட்டம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : DA Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு?.. வெளியான முக்கிய தகவல்.. முழு விவரம் இதோ!

FD திட்டங்களின் வட்டி விகிதத்தை உயர்த்திய பேங்க் ஆஃப் பரோடா

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் FD எனப்படும் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், பேங்க் ஆஃப் பரோடா Bob Utsav என்ற பெயரில் ஒரு புதிய சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : SBI Amrit Vrishti : எஸ்.பி.ஐ வழங்கும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டம்.. வட்டி மட்டும் 7.75%.. அம்ரித் விருஷ்டி குறித்த முழு விவரம் இதோ!

பேங்க ஆஃப் பரோடா அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டம்

பேங்க் ஆஃப் பரோடா அறிமுகம் செய்துள்ள பிஓபி உட்சவ் திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7.30% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.80% வட்டியும் வழங்கப்படுகிறது. இது அதிக வட்டியுடன் கூடிய நிலையான வைப்புநிதி திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பொது குடிமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இருவருக்குமே சிறந்த வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Amrit Kalash Scheme : அதிக வட்டி வழங்கும் SBI-ன் அம்ரித் கலாஷ் திட்டம்.. முதலீடு செய்ய காலக்கெடு நீட்டிப்பு!

பேங்க ஆஃப் பரோடாவின் உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்

  • 7 நாட்கள் முதல் 14 நாட்களுக்கான திட்டத்திற்கு அதிகப்படியாக 4.75% வட்டி வழங்குகிறது.
  • 15 நாட்கள் முதல் 45 நாட்களுக்கான திட்டத்திற்கு அதிகப்படியாக 5% வட்டி வழங்குகிறது.
  • 46 நாட்கள் முதல் 90 நாட்களுக்கான திட்டத்திற்கு அதிகப்படியாக 6% வட்டி வழங்குகிறது.
  • 91 நாட்கள் முதல் 180 நாட்களுக்கான திட்டத்திற்கு அதிகப்படியாக 6.10% வட்டி வழங்குகிறது.
  • 181 நாட்கள் முதல் 210 நாட்களுக்கான திட்டத்திற்கு அதிகப்படியாக 6.25% வட்டி வழங்குகிறது.
  • 271 நாட்கள் முதல் 1 ஆண்டுக்கு குறைவான திட்டத்திற்கு அதிகப்படியாக 7% வட்டி வழங்குகிறது.
  • 1 ஆண்டுக்கான திட்டத்திற்கு அதிகப்படியாக 7.35% வட்டி வழங்குகிறது.
  • 1 ஆண்டு முதல் 400 நாட்கள் வரையிலான திட்டத்திற்கு அதிகப்படியாக 7.60% வட்டி வழங்குகிறது.
  • 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு அதிகப்படியாக 7.75% வட்டி வழங்குகிறது.
  • 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு அதிகப்படியாக 7.50% வட்டி வழங்குகிறது.
  • 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு அதிகப்படியாக 7.50% வட்டி வழங்குகிறது.

இந்த மேற்குறிப்பிட்ட உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் அக்டோபர் 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : MSSC : 7.5% வட்டி.. பெண்களுக்கான சிறந்த சிறு சேமிப்பு திட்டம்.. முதலீடு செய்வது எப்படி.. முழு விவரம் இதோ!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News