Fixed Deposit : 333 நாட்களுக்கான FD திட்டத்தை அறிமுகம் செய்த பேங்க் ஆஃப் இந்தியா.. வட்டி எவ்வளவு தெரியுமா?

New FD Scheme | 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான பல்வேறு நிலையான வைப்புநிதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகம் செய்துள்ள புதிய 333 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம். 

Fixed Deposit : 333 நாட்களுக்கான FD திட்டத்தை அறிமுகம் செய்த பேங்க் ஆஃப் இந்தியா.. வட்டி எவ்வளவு தெரியுமா?

மாதிரி புகைப்படம் (Photo Credit : Pradeep Gaur/Mint via Getty Images)

Updated On: 

25 Oct 2024 11:11 AM

பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகம் செய்த புதிய எஃப்டி : சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அதற்கு ஏற்றார் போல் 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான பல்வேறு நிலையான வைப்புநிதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகம் செய்துள்ள புதிய 333 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Richest Man of Asia : அதானி Vs அம்பானி.. ஆசியாவின் முதல் பணக்காரர் யார்.. ஃபோர்ப்ஸ் அறிக்கை கூறுவது என்ன?

பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய FD

பேங்க் ஆஃப் இந்தியா 333 நாட்களுக்கான புதிய நிலையான வைப்புநிதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஸ்டார் தன் விரித்தி என்ற பெயரில் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் பொது குடிமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகிய இருவருக்குமே சிறந்த வட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் சுமார் ரூ.3 கோடி வரை முதலீடு செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார் தன் விரித்தி திட்டத்தின் வட்டி விகிதம்

பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகம் செய்துள்ள ஸ்டார் தன் விரித்தி திட்டத்திற்கு சிறந்த வட்டி வழங்கப்படுகிறது. அதாவது 333 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7.25% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 333 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.75% வட்டி வழங்குகிறது. இதுவே முதலீடு செய்பர சூப்பர் சீனியர் சிட்டிசனாக இருந்தார் என்றால் 7.90% வழங்குவது குறிப்பிடத்தக்கது.

வட்டி விகிதங்களையும் மாற்றி அமைத்த பேங்க் ஆஃப் இந்தியா

இந்த புதிய 333 நாட்களுக்கா நிலையான வைப்புநிதி திட்டத்தை அறிமுகம் செய்தது மட்டுமன்றி, தனது FD திட்டங்களின் வட்டி விகிதங்களையும் பேங்க் ஆஃப் இந்தியா மாற்றி அமைத்துள்ளது. அதன்படி இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Hurun 2024 : ஹூருன் இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2024.. முதல் 10 இடத்தில் இருப்பவர்கள் யார் யார்?

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!