5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

FD-க்களின் வட்டி விகிதத்தை உயர்த்திய வங்கிகள்.. எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டி வழங்குகின்றன.. முழு விவரம் இதோ!

Fixed Deposit | நிலையான வைப்புநிதிக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் மாற்றி அமைத்துள்ளன. அவை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி ரூ.3 கோடிக்கும் குறைவாக நிலையான வைப்புநிதிகளின் வட்டி விகிதங்களை ஆக்சிஸ், ஐசிஐசிஐ உள்ளிட்ட பல முன்னணி வங்கிகள் உயர்த்தியுள்ளன.

FD-க்களின் வட்டி விகிதத்தை உயர்த்திய வங்கிகள்.. எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டி வழங்குகின்றன.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 03 Jul 2024 13:21 PM

நிலையான வைப்புநிதி : இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகள் நிலையான வைப்புநிதியின் வட்டி விகிதத்தை திருத்தியுள்ளன. அதன்படி இந்த மாற்றங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி ரூ.3 கோடி வரையிலான நிலையான வைப்புநிதி திட்டத்தில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆக்சிஸ்,ஐசிஐசிஐ உள்ளிட்ட முக்கிய வங்கிகள் இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளன. தனிநபர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதம் மாறுபட்டதாக உள்ளது. அதன்படி மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பநிதி திட்டத்தின் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இந்த வட்டி விகிதங்கள் ரூ.3 கோடி வரையிலான நிலையான வைப்பு நிதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

மூத்த குடிமக்களுக்கான 15 முதல் 18 மாதங்களுக்குள்ளான நிலையான வைப்புநிதிக்கு அதிகபட்சமாக 7.75% வட்டி வழங்கப்படுகிறது. தனிநபர்களுக்கு 15 முதல் 2 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதிக்கு அதிகபட்சமாக 7.2% வட்டி வழங்கப்பப்டுகிறது.

ஐசிஐசிஐ வங்கியின் நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதம்

நிலையான வைப்புநிதிக்கான வட்டி விகிதங்களை ஜூலை 1 ஆம் தேதி முதல் ஐசிஐசிஐ வங்கி மாற்றி அமைத்துள்ளது. அதன்படி 15 முதல் 18 மாதங்கள் வரையிலான மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதிக்கு அதிகபட்சமாக 7.75% வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல 15 முதல் 2 ஆண்டுகளுக்கான தனிநபர் நிலையான வைப்புநிதிக்கு அதிகபட்சமாக 7.2% வரை வட்டி வழங்கப்படுகிறது.

ஆக்சிஸ் வங்கியின் நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதம்

நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதங்களை ஆக்சிஸ் வங்கி கடந்த ஜுலை 1 ஆம் தேதி மாற்றி அமைத்துள்ளது. வங்கியின் இணையதள தகவலின்படி இந்த வட்டி விகித மாற்றங்கள் ரூ.3 கோடி வரையிலான நிலையான வைப்புநிதிகளுக்கு பொருந்தும். அதன்படி 5 முதல் 10 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதிக்கு மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.75% வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல 17 முதல் 18 மாதங்கள் வரையிலான தனிநபர் நிலையான வைப்புநிதிக்கு அதிகபட்சமாக 7.2% வரை வட்டி வழங்கப்படுகிறது.

பஞ்சாப் வங்கியின் நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதம்

நிலையான வைப்புநிதி திட்டத்திற்கான வட்டி விகிதங்களை பஞ்சாப் வங்கி கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் மாற்றி அமைத்துள்ளது. 666 நாட்களுக்கான நிலையான வைப்புநிதிக்கு மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.80% வட்டி வழங்குகிறது. அதே கால அளவை கொண்ட நிலையான வைப்புநிதிக்கு தனிநபருக்கு அதிகபட்சமாக 7.3% வட்டி வழங்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் ரூ.3 கோடி வரையிலான நிலையான வைப்புநிதிகளுக்கு பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : EPFO : திருமணத்திற்காக பிஎஃப் கணக்கிலிருந்து எவ்வளவு பணம் எடுக்கலாம்?.. விதிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!

பேங்க் ஆஃப் இந்தியாவின் நிலையான வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதம்

ஜூன் 30 ஆம் தேதி முதல் நிலையான வைப்புநிதிக்கான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது பாங்க் ஆஃப் இந்தியா. அதன்படி 666 நாட்களுக்கான நிலையான வைப்புநிதிக்கு மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.80% வரை வட்டி வழங்கப்படுகிறது. அதே கால அளவிலான நிலையான வைப்புநிதிக்கு தனிநபருக்கு அதிகபட்சமாக 7.3% வரை வட்டி வழங்கப்படுகிறது.