5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bank Holidays : தீபாவளி தொடர் விடுமுறை.. இந்த 4 நாட்கள் வங்கிகளுக்கு செல்ல திட்டமிடாதீர்கள்!

Festivals | வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அன்று தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த நாட்களில் எந்த எந்த மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Bank Holidays : தீபாவளி தொடர் விடுமுறை.. இந்த 4 நாட்கள் வங்கிகளுக்கு செல்ல திட்டமிடாதீர்கள்!
கோப்பு புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 23 Oct 2024 17:55 PM

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர் விடுமுறை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி மேலும் சில பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது, எந்த எந்த மாநிலங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Aadhaar Service : இனி தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை.. இந்தியா போஸ்ட் அதிரடி அறிவிப்பு!

பொதுமக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் வங்கி சேவை

என்னதான் தொழில்நுடபம் வளர்ச்சியடைந்து ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் பயன்படுத்தப்பட்டாலும், பெரும்பாலான மக்கள் வங்கி சேவைகளையே பயன்படுத்த விரும்புகின்றனர். காரணம், செயலிகள் மற்றும் ஆன்லைன் சேவைகளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மனதில் உள்ளது. இதன் காரணமாகவே, பெரும்பாலான மக்கள் வங்கி சேவைகளை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை தொடர் பண்டிகைகள் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய தேவை ஏதேனும் இருந்தால் விடுமுறைக்கு முன்பாகவோ அல்லது விடுமுறைக்கு பின்னரோ திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க : Post Office Scheme : ரூ.1,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.31 லட்சம் வரை வருமானம் பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அன்று தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எந்த எந்த நாட்கள் விடுமுறை

அக்டோபர் 31 ஆம் தேதி

அக்டோபர் 31 ஆம் தேதி தீபவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக ஆந்திர பிரதேசம், கோவா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலங்கானா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1 ஆம் தேதி

நவம்பர் 1 ஆம் தேதி லட்சுமி பூஜை மற்றும் தீபாவளி அமாவாசை கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய தினத்தில் திரிபுரா, பேலாபூர், கர்நாடகா, உத்தரகண்ட், சிக்கிம், மனிப்பூர், ஜம்மு மற்றும் காஷ்மீர், மஹாராஷ்டிரா மற்றும் மேகாலயா பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : EPFO : PF உறுப்பினர்களுக்கு முக்கியச் செய்தி.. EPF பணத்தை எடுக்கும் விதிகளில் அதிரடி மாற்றம்.. முழு விவரம் இதோ!

நவம்பர் 2 ஆம் தேதி

நவம்பர் 2 ஆம் தேதி கோவர்தனன் பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினத்தில் குஜராத், கர்நாடகா, உத்தரகண்ட், சிக்கிம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 3 ஆம் தேதி

நவம்பர் 3 ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் பாய் பூஜை கொண்டாடப்பட உள்ளது. அதுமட்டுமன்றி நவம்பர் 3 ஆம் தேதி ஞாயிற்று கிழமை பொது விடுமுறை என்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Monthly Income Scheme : வட்டி மட்டும் ரூ.66,600.. அதிக லாபம் வழங்கும் அஞ்சலக மாத வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!

மேற்குறிப்பிட்ட இந்த 4 தினங்களில் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நாட்களில் வங்கிக்கு செல்ல திட்டமிட்டிருக்கும் நபர்கள் தங்கள் திட்டங்களை மாற்றி அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News