5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bank Holidays : நவம்பர் மாதம் இந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது.. லிஸ்ட் இதோ!

November List | இந்த குறிப்பிட்ட நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்கள் ஏடிஎம்கள், நெட் பேங்கிங், மொபைல் பயன்பாடுகள் மற்றும் வங்கி இணையதளங்கள் வழியாக தங்களது வங்கிச் சேவைகளை அணுக கூடிய வாய்ப்பு உள்ளது.

Bank Holidays : நவம்பர் மாதம் இந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது.. லிஸ்ட் இதோ!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 28 Oct 2024 17:16 PM

அக்டோபர் மாதம் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வழக்கமான வார விடுமுறைகளை தாண்டி கூடுதலாக 2 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நவம்பர் மாதத்திற்கான வங்கிகளின் விடுமுறை தினங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : November Changes : கேஸ் சிலிண்டர் முதல் தொலைத்தொடர்பு வரை.. நவம்பர் மாதம் வரவுள்ள அதிரடி மாற்றங்கள்!

நவம்பர் மாதத்தில் இந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது

நவம்பர் மாதம் தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அந்த மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி,

  • நவம்பர் 3 – ஞாயிற்று கிழமை என்பதால் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள வங்கிகள் செயல்படாது
  • நவம்பர் 9 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் நவம்பர் 9 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள வங்கிகள் செயல்படாது.
  • நவம்பர் 10 – ஞாயிற்று கிழமை என்பதால் நவம்பர் 10 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள வங்கிகள் செயல்படாது.
  • நவம்பர் 17 – ஞாயிற்று கிழமை என்பதால் நவம்பர் 17 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள வங்கிகள் செயல்படாது.
  • நவம்பர் 23 – வாரத்தின் 4வது சனிக்கிழமை என்பதால் நவம்பர் 23 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள வங்கிகள் செயல்படாது.
  • நவம்பர் 24 – ஞாயிற்று கிழமை என்பதால் நவம்பர் 24 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள வங்கிகள் செயல்படாது.

இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ முதல் ஐசிஐசிஐ வரை.. 5 ஆண்டுகளுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!

மேற்குறிப்பிட்ட தகவலின் படி நவம்பர் மாதத்தில் மொத்தம் 6 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறிப்பிட்ட நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்கள் ஏடிஎம்கள், நெட் பேங்கிங், மொபைல் பயன்பாடுகள் மற்றும் வங்கி இணையதளங்கள் வழியாக தங்களது வங்கிச் சேவைகளை அணுக கூடிய வாய்ப்பு உள்ளது. இருப்பினும், வங்கி விடுமுறை தினங்களை மனதில் கொண்டு அதற்கேற்றாவாறு, தங்களுக்கான பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு வங்கிகள் சார்பில் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதையும் படிங்க : Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டம்.. மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?

மக்கள் மத்தியில் வங்கியின் பயன்பாடு எப்படி உள்ளது?

நவீன மயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, மொபைல் போன்களின் வளர்ச்சி ஆகியவற்றால் அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் போல் இல்லாமல் வங்கி சேவைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம் பண பரிவர்த்தனை அல்லது நிதி தொடர்பான தேவைகளுக்கு வங்கிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் தற்போது அத்தகைய கட்டாயம் எதுவுமில்லை.

இதையு படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ Vs செண்ட்ரல் பேங்க்.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கி எது?

வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, கடன் செலுத்துவது என அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே செய்துக்கொள்ள முடியும். அதுமட்டுமன்றி ஏடிஎம்கள், மொபைல் செயலிகள் மூலம்  வங்கிக்கு செல்ல வேண்டிய தேவைகள் முற்றிலுமா குறைந்துவிட்டது. இருப்பினும், சில முக்கிய விஷயங்கள் அதாவது. வங்கி கணக்கு திறப்பது, வங்கி கணக்கில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் வங்கி சென்று திருத்தம் செய்வதையே மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : MSSC Scheme : பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்.. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!

எனவே வங்கிகளின் விடுமுறை நாட்களை மனதில் கொண்டு பொதுமக்கள், வங்கி தொடர்பான வேலைகளை திட்டமிட்டுக்கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News