ஜூலை மாதத்தில் இந்த நாள்கள் வங்கிகள் இயங்காது; தேதியை செக் பண்ணுங்க! | Banks will not function on these days in July 2024 Tamil news - Tamil TV9

ஜூலை மாதத்தில் இந்த நாள்கள் வங்கிகள் இயங்காது: தேதியை செக் பண்ணுங்க!

Updated On: 

22 Jun 2024 22:43 PM

Bank Holidays In July: பண்டிகைகள், பிராந்திய கொண்டாட்டங்கள் மற்றும் பொது வார விடுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விடுமுறைகள் வங்கிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த வகையில், 2024 ஜூலை மாத வங்கி விடுமுறை நாள்கள்: ஜூலை மாதத்தில், தேசிய மற்றும் பிராந்திய விடுமுறைகள் காரணமாக மொத்தம் 12 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது.

ஜூலை மாதத்தில் இந்த நாள்கள் வங்கிகள் இயங்காது: தேதியை செக் பண்ணுங்க!

2024 ஜூலை மாத வங்கி விடுமுறை

Follow Us On

2024 ஜூலை மாத வங்கி விடுமுறை நாள்கள்: ஜூலை மாதத்தில், தேசிய மற்றும் பிராந்திய விடுமுறைகள் காரணமாக மொத்தம் 12 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது, மூடப்பட்டிருக்கும். அதன்படி, கீழேயுள்ள முழு வங்கி விடுமுறைப் பட்டியலைச் சரிபார்த்த பின்னர் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிப் பணிகளை ஜூலை மாதத்தில் எந்தத் தேதியில் முடிக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளலாம். இந்தப் பட்டியல் மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. பண்டிகைகள், பிராந்திய கொண்டாட்டங்கள் மற்றும் பொது வார விடுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விடுமுறைகள் வங்கிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த வகையில், நாட்டிலுள்ள அனைத்து வங்கிகள் மற்றும் கிளைகளுக்கு பொதுவான வார இறுதி விடுமுறைகள் பொருந்தும். அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளுடன் திருவிழாக்கள், தேசிய விடுமுறைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் போன்ற வார இறுதி விடுமுறைகள் கீழே உள்ள பட்டியலில் அடங்கும்.

2024 ஜூலை மாத வங்கி விடுமுறை பட்டியல்

  1. ஜூலை 3 புதன்கிழமை பெ தீன்கிளம் ஷில்லாங்
  2. ஜூலை 6 சனிக்கிழமை எம்.ஹெச்.ஐ.பி அய்ஸ்வால்
  3. ஜூலை 7 ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை அனைத்து வங்கிகள்
  4. ஜூலை 8 திங்கள்கிழமை காங் (ரதஜாத்ரா) இம்பால்
  5. ஜூலை 9 செவ்வாய்க்கிழமை துருபா திசே ஸி காங்டாக்
  6. ஜூலை 13 சனிக்கிழமை இரண்டாம் சனிக்கிழமை அனைத்து வங்கிகள் விடுமுறை
  7. ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகள்
  8. ஜூலை 16 செவ்வாய்க்கிழமை ஹரேலா டேராடூன், அகர்தலா, அய்ஸ்வால், பெலாபூர், பெங்களூரு, போபால், சென்னை, ஹைதராபாத், ஆந்திரா, தெலங்கானா, ஜெய்ப்பூர்
  9. ஜூலை 17 புதன்கிழமை மொஹரம் ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புதுடெல்லி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா மற்றும் ஸ்ரீநகர்
  10. ஜூலை 21 ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை அனைத்து வங்கிகள்
  11. ஜூலை 24 சனிக்கிழமை நான்காம் சனிக்கிழமை அனைத்து வங்கிகள்
  12. ஜூலை 28 ஞாயிறு வார விடுமுறை அனைத்து வங்கிகள்

இந்த நாள்களில் வங்கி கிளைகள் முழுவதும் இந்த விடுமுறைகள் அனுசரிக்கப்படுகின்றன. இருப்பினும், டிஜிட்டல் வங்கிச் சேவைகள் இந்தக் காலகட்டங்களில் தடையின்றி செயல்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் நிதிச் சிக்கல்களை நிர்வகிக்க மொபைல் பேங்கிங், யூ.பி.ஐ, இன்டர்நெட் பேங்கிங் போன்ற சேவைகளைத் தேர்வுசெய்யலாம்.
1881 ஆம் ஆண்டின் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டத்தின் கீழ் வங்கி விடுமுறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI), முழு ஆண்டுக்கான வங்கி விடுமுறை காலெண்டரை வெளியிடுகிறது, மேலும் இந்த காலெண்டரை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் பின்பற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வீட்டை விட்டு ஒரு அடி கூட நகர வேண்டாம்: SBI பேங்க் பேலன்ஸ் தெரிந்து கொள்வது எப்படி?

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version