மாதம் மாதம் சரியாக EMI செலுத்தியும் கிரெடிட் ஸ்கோர் குறைகிறதா? கட்டாயம் இத பண்ணுங்க! - Tamil News | Be cautious about these issues when your credit score keep getting decreased | TV9 Tamil

மாதம் மாதம் சரியாக EMI செலுத்தியும் கிரெடிட் ஸ்கோர் குறைகிறதா? கட்டாயம் இத பண்ணுங்க!

Credit Score | மாதம் மாதம் சரியாக EMI செலுத்தியும் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைகிறது என்றால் அதற்கு சில காரணங்கள் இருக்கும். அந்த காரணங்களை கண்டுபிடித்து சரி செய்வதன் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சுலபமாக உயர்த்த முடியும். வேறு ஒருவருடன் இணைந்து கடன் வாங்குவது, அடிக்கடி கடனுக்கு விண்ணப்பிப்பது மற்றும் தகவல் திருட்டு காரணமாக உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம்.

மாதம் மாதம் சரியாக EMI செலுத்தியும் கிரெடிட் ஸ்கோர் குறைகிறதா? கட்டாயம் இத பண்ணுங்க!

மாதிரி புகைப்படம்

Published: 

05 Jul 2024 16:57 PM

கிரெடிட் ஸ்கோர் : வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்றால் ஆவணங்கள் அவ்வளவு முக்கியமோ அந்த அளப்விற்கு கிரெடிட் ஸ்கோரும் முக்கியம். கிரெடிட் ஸ்கோர் போதுமான அளவு இல்லையென்றால் வங்கி லோன் மனுவை தள்ளுபடி செய்துவிடும். எனவே சீரான கிரெடிட் ஸ்கோரை தக்கவைத்துக்கொள்வது மிகவுக் அவசியம் ஆகிறது. ஏற்கனவே வாங்கிய கடனுக்கு மாதம் மாதம் சரியான தேதியில் பணத்தை செலுத்திவிட்டால் போதும். உங்களது கிரெடிட் ஸ்கோர் சீராக இருக்கும். ஒருவேளை ஏதெனும் ஒரு மாதம் கிரெடிட் ஸ்கோர் கட்ட மறந்துவிட்டீர்கள் அல்லது தவறி விட்டீர்கள் என்றால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிடும். இதனை தவிர்க்க வேண்டும் என்றால் ஆட்டோ டெபிட் முறையை பின்பற்றலாம். இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து சரியான தேதிக்கு பணம் எடுக்கப்படும்.

ஆனால் மாதம் மாதம் சரியாக EMI செலுத்தியும் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைகிறது என்றால் அதற்கு சில காரணங்கள் இருக்கும். அந்த காரணங்களை கண்டுபிடித்து சரி செய்வதன் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சுலபமாக உயர்த்த முடியும். அவை எனென்ன  காரணங்கள், அதை எப்படி சரி செய்யலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

அடிக்கடி கடனுக்கு விண்ணப்பிப்பது

குறுகிய காலத்தில் பல கடன்களுக்கு விண்ணப்பிப்பதன் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைய வாய்ப்புள்ளது. காரணம் ஒவ்வொரு முறை நீங்கள் புதிய கடனுக்கு விண்ணப்பிக்கும்போதும் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் இருந்து கணிசமான புள்ளிகள் குறையும். அதை நீங்கள் கண்டுக்கொள்ளாமல் மேலும் மேலும் புதிய கடன்களுக்கு விண்ணப்பித்தால் அது உங்களது கிரெடிட் ஸ்கோரை மேலும் மேஅலும் குறைய செய்யும். ஒருவேளை புதிய கடனுக்கான EMI செலுத்தும்போது அது சரி செய்யப்படலாம்.

கடனை திருப்பி செலுத்தமல் இருப்பது

வேறு ஒருவருடன் இணைந்து விண்ணப்பம் பெற்று ஜாயிண்ட் லோன் வாங்கி, அந்த லோனுக்கு அவர் சரியாக EMI கட்டவில்லை என்றாலும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். எனவே கடன் வாங்கும் போது நீங்கள் யாருடன் சேர்ந்து விண்ணப்பிகிறீர்கள் எனபதில் கவனமாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : பிஎஃப் கணக்கை பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டுமா?.. ஈசியா மாத்திடலாம்.. முழு விவரம் இதோ!

அடையாள திருட்டு

சமீப கலமாக தகவல் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உங்கள் தகபல்கள் திருடப்பட்டு உங்கள் பெயரில் புது கணக்குகள் தொடங்கப்பட்டு இருக்கலாம். கடன் ஸ்டேட்மெண்டை அடிக்கடி ஆய்வு செய்து பார்ப்பதன் மூலம் இதை தவிர்க்கலாம்.

மேற்குறிப்பிட்ட இந்த 3 காரணங்களுக்காக உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த விஷயங்களில் அதிக கவனம் தேவை.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!