பங்குச் சந்தைகள் அதிரடி உயர்வு.. இன்று எந்தப் பங்குகள் வாங்கலாம்?

Stock Market Today : இந்தியப் பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை வர்த்தக அமர்வை புதிய உச்சத்தில் தொடங்கின. பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ புதிய வரலாறை படைத்தது.

பங்குச் சந்தைகள் அதிரடி உயர்வு.. இன்று எந்தப் பங்குகள் வாங்கலாம்?

இந்திய பங்குச் சந்தைகள் உயர்வு

Published: 

25 Nov 2024 10:37 AM

இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) நிஃப்டி-50 ஆகியவை வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை தொடக்க மணி நேரத்தில் பாரிய அளவில் உயர்ந்தன. இது நேர்மறையான உள்நாட்டு குறிப்புகள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனையின் மந்தநிலையால் உந்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அமர்வின் தொடக்கத்தில், பி.எஸ்.இ சென்செக்ஸ் 1,227 புள்ளிகள் அல்லது 1.55 சதவீதம் அதிகரித்து 80,344.78 ஆக காணப்பட்டது. தொடர்ந்து, என்.எஸ்.இ நிஃப்டி 50 370 புள்ளிகள் அல்லது 1.55 சதவீதம் அதிகரித்து 24,277 ஐ எட்டியது.

மராட்டிய தேர்தல் முடிவுகள்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, சந்தைகள் புதிய நம்பிக்கையை ஈர்த்து வருகின்றன.
மேலும் உலகளாவிய சந்தைகளில் நேர்மறையான சமிக்ஞைகள் காணப்படுகின்றன. இந்த வேகத்துடன், முந்தைய வாரத்தின் கடைசி வர்த்தக அமர்வின் லாபத்தை இந்திய சந்தைகள் நீட்டிக்கின்றன.

இருப்பினும், உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான விற்பனை ஆகியவையும் முதலீட்டாளர்களால் கவனிக்கப்பட்டு வருகின்றன.
இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி தொடர்பான அமெரிக்க அறிக்கைகள் புயலை கிளப்பிய நிலையில் இன்று சந்தை நிலவரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பங்குகள் நிலவரம்

இன்றைய சந்தையில், ஆட்டோ, வங்கி, மீடியா, டெலிகாம், ஆயில் & கேஸ், பவர், ரியால்டி போன்ற துறைகளின் குறியீடுகள் 1-2 சதவீதம் வரை பச்சை நிறத்தில் வர்த்தகமாகின்றன.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எம்&எம், பாரத் எலக்ட்ரானிக், அதானி எண்டர்பிரைசஸ், பிபிசிஎல் ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டின.
இதற்கிடையில், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நஷ்டமடைந்தது. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1.5 சதவீதம் உயர்ந்தன. மேலும், சோமோட்டோ பங்குகள் 5 சதவீதம் வரை லாபம் கண்டுள்ளன. மேலும், சில ப்ளூசிப் பங்குகளும் உயர்வை கண்டு வர்த்தகமாகி வருகின்றன. இது பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வத்தை கொடுத்துள்ளது. இதற்கிடையில், ஹெச்.சி.எல் உள்ளிட்ட பங்குகளில் முதலீடு செய்யலாம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : அரசு ஊழியர்களுக்கு ரூ.50 ஆயிரம் மாதச் சம்பளம்.. எப்போது கிடைக்கும்?

இந்திய ரூபாயின் மதிப்பு

ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து 84.35 ஆக காணப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை (நவ.25, 2024) காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 6 காசுகள் அதிகரித்து 84.35 ஆக இருந்தது.
இது உள்நாட்டு பங்குகளில் சாதகமான போக்கால் வலுவடைந்தது. அதிக டாலர் குறியீட்டு நிலைகள் மற்றும் கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலையில் ஏறக்குறைய 5 சதவிகிதம் உயர்ந்தது.

இதுபோன்ற காரணிகள், ரஷ்யா-உக்ரைன் மோதலின் தீவிரத்தால் உந்தப்பட்டு ஏற்பட்டுள்ளன என அந்நிய செலாவணி வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50, இன்று 1% க்கும் அதிகமாக வர்த்தகமாகி வருகிறது.
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி வெற்றி பெற்ற பிறகு முதலீட்டாளர்களின் நம்பிக்கையால் உந்தப்பட்டுள்ளது என்றும் முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. பயனரின் முதலீட்டு லாப நஷ்டங்களுக்கு டி.வி 9, நிர்வாகம் பொறுப்பேற்காது. எந்தவொரு முதலீட்டுக்கு முன் செபி-யால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது.

இதையும் படிங்க : மகாராஷ்டிரா தேர்தல் முடிவு.. முதலீட்டாளர்களுக்கு லாபமா? நஷ்டமா?

பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?
தமிழ்நாட்டின் நகரங்களும் அதன் புனைப் பெயர்களும்...