கனரா வங்கி FD வட்டி தாறுமாறு உயர்வு.. புதிய வீதம் தெரியுமா?
Canara Bank FD interest rates: பொதுத்துறை நிறுவனமான கனரா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள், இன்று (டிச.1, 2024) முதல் அமலுக்கு வந்துள்ளன.
கனரா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்: கனரா வங்கி ரூ.3 கோடிக்கும் குறைவான முதலீட்டு தொகைக்கான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் டிசம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வரும் என கனரா வங்கி தெரிவித்துள்ளது. கனரா வங்கியின் இந்த எஃப்.டி வட்டி திருத்தத்துக்கு பின்னர், பொது மக்களுக்கு 4 சதவீதம் முதல் 7.40 சதவீதம் வரையும், மூத்த குடிமக்களுக்கு 4 சதவீதம் முதல் 7.90 சதவீதம் வரையும் வட்டி விகிதங்களை ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு வழங்குகிறது. கனரா வங்கியின் புதிய எஃப்.டி வட்டி விகிதங்கள், ஃபிக்ஸட் டெபாசிட் காலக்கெடு, விதிமுறைகள் குறித்து பார்க்கலாம்.
கனரா வங்கி புதிய எஃப்டி விகிதங்கள்
கனரா வங்கி தற்போது 7 முதல் 45 நாள்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு 4 சதவீத வட்டியையும், 46 முதல் 90 நாள்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு 5.25% வட்டியையும் வழங்குகிறது.
மேலும், கனரா வங்கி 91 முதல் 179 நாள்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 5.5 சதவீத வட்டியும், 180 முதல் 269 நாள்களுக்குள் முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 6.25 சதவீத வட்டியும் வழங்குகிறது.
இந்த வட்டி விகிதங்களில் மூத்தக் குடிமக்களுக்கு அளிக்கப்படும் தொகை மாறுபடும். அதேபோல், 270 நாள்கள் மற்றும் ஓராண்டுக்கு குறைவாக முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு வங்கி 6.25 சதவீதம் வரை வட்டியை வங்கி வழங்குகிறது. தொடர்ந்து, 444 நாள்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7.25% வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது.
இதையும் படிங்க: நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.. மாதம் ரூ.10 ஆயிரம் முதலீடு, ரூ.1 கோடி ஈஸி ரிட்டன்!
அதிகப்பட்ச வட்டி விகிதம்
கனரா வங்கியானது 1 ஆண்டு முதல் இரண்டு வருடங்களுக்கும் மேலாக முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 6.85 சதவீத வட்டியை வழங்குகிறது. தொடர்ந்து, கனரா வங்கியில் 2 ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான டெபாசிட்களுக்கு 7.30 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அமலாகும் இந்தத் திருத்தத்துக்கு பின்னர் வங்கியானது 3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 7.40 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்
கனரா வங்கி திருத்தத்திற்குப் பிறகு, மூத்தக் குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலவரையறையில் அழைக்கக்கூடிய டெபாசிட்டுகளுக்கு வங்கி 4 சதவீதம் முதல் 7.90 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனரா வங்கி, ரூ.3 கோடி வரையிலான மூத்த குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 0.50% கூடுதல் வட்டி வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரியல் எஸ்டேட் முதல் சிறு நிறுவனம் வரை.. புதிய IPO-க்களை நோட் பண்ணுங்க!
சிறப்பு மூத்தக் குடிமக்கள்
கனரா வங்கி சிறப்பு மூத்தக் குடிமக்களுக்கு 0.60 சதவீதம் கூடுதலாக வட்டி விகிதங்களை வழங்கும். இதனால், கனரா 444 டெபாசிட்டுக்கு 7.85 சதவீதம் வரை வட்டி விகிதம் கிடைக்கும்.
எஃப்.டி அபராதம் எவ்வளவு?
கனரா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் செய்யப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னர் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை திரும்ப பெற்றால் சில அபராதங்களை விதிக்கிறது. அந்த வகையில் அபராதத் தொகை 1 சதவீதம் வரை இருக்க வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கிளை மேலாளரை தொடர்புக் கொள்வது நல்லது.
பொறுப்பு துறப்பு: பயனர்கள் முதலீடுக்கு முன், செபியால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிபுணரிடம் ஆலோசனைகள் பெறுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. பயனரின் எந்தவொரு முதலீடு லாப நஷ்டங்களுக்கும் டிவி9 தமிழ் பொறுப்பு ஏற்காது.