5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Railway Staff Bonus : ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்.. மத்திய அரசு அதிரடி!

Unions Request | மத்திய அமைச்சரவையின் இந்த முடிவை அடுத்து, ரயில்வே துறையில் பணிபுரியும் அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தண்டவாள பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்ஸ், ஸ்டேஷன் மாஸ்டர்ஸ், மேற்பாற்வையாளர் மற்றும் தொழில்நுட்ப கோளாறு நிபுனர்கள் ஆகியோருக்கு போனஸ் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

Railway Staff Bonus : ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்.. மத்திய அரசு அதிரடி!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 04 Oct 2024 10:34 AM

இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போனஸில் ரயில்வே துறையில் பணிபுரியும் அனைத்து துறை ஊழியர்களும் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Diwali Bonus : தமிழக அரசு ஊழியர்களுக்கு இரட்டை போனஸ்?.. வெளியான முக்கிய தகவல்!

11.72 ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அக்டோபர் மாதத்தில் வரவிருக்கும் பண்டிகைகளை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த போனஸ், ரயில்வே துறையில் பணிபுரியும் 11.72 லட்சம் ஊழியர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க சுமார் ரூ.2,028 கோடி பணத்தை ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : FD Interest Rate : 2 முதல் 5 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

ரயில்வேயில் அனைத்து துறை ஊழியர்களுக்கும் வழங்கப்படும் போனஸ்

மத்திய அமைச்சரவையின் இந்த முடிவை அடுத்து, ரயில்வே துறையில் பணிபுரியும் அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தண்டவாள பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்ஸ், ஸ்டேஷன் மாஸ்டர்ஸ், மேற்பார்வையாளர் மற்றும் தொழில்நுட்ப கோளாறு நிபுனர்கள் ஆகியோருக்கு போனஸ் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : FD Interest Rate : 1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

பண்டிகைகளை முன்னிட்டு முன்கூட்டியே வழங்கப்படும் போனஸ்

வழக்கமாக துர்கா பூஜை மற்றும் தசரா பண்டிகைகளை முன்னிட்டு இந்த PLB போனஸ் வழங்கப்படும். அதேபோல இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு ரயில்வே யூனியன்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 6வது ஊதியக்குழுவை மையப்படுத்தி போனஸ் வழங்குவதற்கு பதிலாக 7வது ஊதியக்குழுவை மையப்படுத்தி போனஸ் வழங்க வேண்டும் என்று அவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : Flipkart : 1 ரூபாய்க்கு ஆட்டோ சவாரி.. பிளிப்கார்ட் அதிரடி சலுகை.. ஆச்சரியத்தில் வாய் பிளக்கும் மக்கள்!

போனஸ் குறித்து அதிருப்தி தெரிவிக்கும் ரயில்வே யூனியன்கள்

ரயில்வே துறையில் இயங்கும் அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பு (IREF), சிக்னல் பொறியாளர்களின் இந்திய ரயில்வே சேவை கூட்டமைப்பு ஆகியவை தற்போதைய போனச் கணக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அது தற்போதைய ஊதிய அளவில் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் 6வது ஊதியக்குழு அடிப்படையிலான போனஸ் பெற்று வருகிறோம். போனஸ் தொகை ரூ.17,591 ஆக இருந்தாலும், அது ரூ.7,000-ல் கணக்கிடப்படுகிறது என்றும், 7வது ஊதியக்குழு அடிப்படை ஊதியத்தை ரூ.18,000 ஆக உயர்த்தியதில் இருந்து இனி அது பொருந்தாது என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இதையும் படிங்க : Indian Rupees : இந்திய ரூபாய் நோட்டிற்கு காந்தியின் புகைப்படம் முதல் தேர்வு அல்ல.. முதல் தேர்வு என்ன தெரியுமா?

புதிய ஊதிய அளவுடன் ஒப்பிட்டு பார்க்கையில் போனஸ் தொகை ரூ.46,159 ஆக இருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டுள்ளனர். கோவிட் பெருந்தொற்று உள்ளிட்ட கடினமாக சூழல்களிலும் ரயில்வே ஊழியர்கள் அயராது உழைத்த நிலையில், அவர்களுக்கு உரிய போனஸ் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News