5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gas Cylinder : கேஸ் சிலிண்டர் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

New Rules | மத்திய அரசு கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கான சில முக்கிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி கேஒய்சி இல்லாமல் கேஸ் சிலிண்டர் வாங்க முடியாது என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி சிலிண்டர் வீட்டில் விநியோகம் செய்யப்படும்போது, பயனாளர்களின் பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யபப்ட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Gas Cylinder : கேஸ் சிலிண்டர் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
கேஸ் சிலிண்டர்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 31 Jul 2024 12:56 PM

கேஸ் சிலிண்டர் : இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் கேச் சிலிண்டர் வாங்குவதில் சில கட்டுப்படுகள் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கான சில முக்கிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி கேஒய்சி இல்லாமல் கேஸ் சிலிண்டர் வாங்க முடியாது என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி சிலிண்டர் வீட்டில் விநியோகம் செய்யப்படும்போது, பயனாளர்களின் பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யபப்ட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர் வாங்க பயோமெட்ரிக் சான்றுகள் அங்கீகாரம் கட்டாயம்

கடந்த சில மாதங்களாக கேஸ் சிலிண்டர் நுகர்வோரின் பயோமெட்ரிக் சான்றுகளின் அங்கீகாரம், கேஸ் சிலிண்டர் விநியோகத்தின் போது நுகர்வோரின் வீட்டு வாசலில் செய்யப்படுகிறது. அதன்படி  எல்.பி.ஜி சிலிண்டர்களை வீட்டு வாசலில் டெலிவரி செய்பவர்கள் உங்கள் பயோமெட்ரிக்கை சோதனை செய்து ஆதார் விவரங்கள் உங்களுடையதா என்பதை சோதனை செய்வார்கள். இதன் காரணமாக 80% ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் அங்கீகார சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு புறம் இருக்க கேஸ் சிலிண்டர்களுக்கு ஆதார் கேஒய்சி செய்யவில்லை என்றால் சிலிண்டர் வழங்கப்படாது என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Aadhaar : ஆதார் கார்டு விவரங்களை எத்தனை முறை மாற்றலாம்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்!

கை ரேகை பதியாவிட்டாலும், கேச் சிலிண்டர் கிடைக்கும் – கேஸ் நிறுவனக்கள்

இந்த நிலையில், ஆதார் சரிப்பார்ப்பதற்கு கை ரேகை பதியாவிட்டாலும், கேச் சிலிண்டர் கிடைக்கும் என்று சிலிண்டர் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, மானியத்துடன் கூடிய கேச் சிலிண்டரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வழஙக்ப்பட்ட ஆதாரை அங்கீகரிப்பதற்காக மட்டுமே இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கை ரேகை பதிவு செய்ய ஆட்கள் எப்போதும் வீட்டில் இருக்க வாய்ப்பு இல்லை. இதன் காரணமாக அவர்கள் கை ரேகை பதிவு செய்ய முடியாமல் போகலாம். இதனால் மானியம் தடைபடவும் வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : Income Tax : வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. வரி தாக்கல் முதல் அபராதம் வரை.. முழு விவரம் இதோ!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கேஸ் நிறுவனங்கள்

எனவே ஆதார் சரிப்பார்ப்பதற்கு கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று கேஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கைரேகை எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம். அது கட்டாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலு  கைரேகை பதிவு செய்தால் மட்டுமே கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று கூறப்படுவது தவறு என்று கேஸ் சிலிண்டர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News