5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

NPS Vatsalya : குழந்தைகளுக்கான புதிய சேமிப்பு திட்டம்.. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட என்.பி.எஸ் வாத்சல்யா என்றால் என்ன?

New Scheme for Children | நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறுவர், சிறுமிகளுக்கான ஒரு சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த திட்டத்திற்கு என்பிஎஸ் வாத்சல்யா என பெயரிடப்பட்டுள்ளது. இது சிறுவர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டமாகும்.

NPS Vatsalya : குழந்தைகளுக்கான புதிய சேமிப்பு திட்டம்.. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட என்.பி.எஸ் வாத்சல்யா என்றால் என்ன?
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 23 Jul 2024 16:26 PM

புதிய சேமிப்பு திட்டம் : பாஜக தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ள நிலையில், முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் 1.30 மணி நேரம் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 18 வயதுகுட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கான புதிய சேமிப்பு திட்டம் ஒன்றையும் அவர் அறிவித்தார். இந்த திட்டம் எதற்கு பயன்படுகிறது, இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

பட்ஜெட்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய சேமிப்பு திட்டம் 

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறுவர், சிறுமிகளுக்கான ஒரு சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த திட்டத்திற்கு என்பிஎஸ் வாத்சல்யா என பெயரிடப்பட்டுள்ளது. இது சிறுவர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டமாகும். அதாவது 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதன்படி குழந்தைகள் 18 வயதை பூர்த்தி செய்யும் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. பிறகு 18 வயது முடிவடைந்த பின் இந்த திட்டம் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குழந்தைகளின் பெயரில் மாற்றம் செய்யப்படும். இந்த திட்டம் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Budget 2024 Cheaper and Costlier Items: செல்போன் முதல் வைரம் வரை.. பட்ஜெட் அறிவிப்பால் விலை குறையும் பொருட்கள் எவை தெரியுமா?

அதாவது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர் சேமித்து வைப்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் என்பிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே முதலீடு செய்து பயனடைய முடியும். எனவே சிறுவர்களும் பயனடையும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மற்ற முக்கிய அம்சங்கள் என்ன?

  • 2024-25ஆம் நிதியாண்டில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.1.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இளைஞர்கள் சுயதொழில் முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ.10 லட்சமாக இருந்த நிலையில், உயர்த்தப்பட்டுள்ளது.
  • வேலை தேடும் 1 கோடி இளைஞர்களுக்கு நாட்டின் 500 முன்னணி நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வழங்கப்படும்.
  • பிரதம மந்திரி இன்டன்ஷிப் மூலம் 12 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இத்திட்டத்தில் மாதந்தோறும் 5000 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரம் ஐடிஐக்கள் உருவாக்கப்படும்.
  • 4 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்கும் வகையில் புதிய கொள்கை வகுக்கப்படும்.
  • வேலை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
  • முதல்முறையாக வேலைக்கு செல்வோரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக ரூ.15,000 வரை செலுத்தப்படும். ஒரு மாதம் சம்பளம் வழங்குவதன் மூலம் 30 லட்சம் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாதம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவான சம்பளம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.
  • உள்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயில 10 லட்ச ரூபாய் வரை கல்விக் கடன் வழங்கப்படும். கடன் தொகையில் 3 சதவீத வட்டி மானியத்துடன் வழங்கப்படும்.
  • EPFOயில் பதிவு செய்யப்பட்டோருக்கு ரூ.15,000 முதல் ஒரு லட்ச ரூபாய் வரை ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படும்.

Latest News