5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

DA Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு?.. வெளியான முக்கிய தகவல்.. முழு விவரம் இதோ!

Dearness Allowance | மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அதாவது ஆண்டுக்கு முதல் முறை ஜனவரி மாதத்திலும், பிறகு 6 மாதங்கள் கழித்து ஜூலை மாதத்திலும் அகவிலைப்படி உயர்த்தப்படும். அகவிலைப்படி உயர்வு குறித்தி அறிவிப்பு வெளியானதும், குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அது நடைமுறைப்படுத்தப்படும்.

DA Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு?.. வெளியான முக்கிய தகவல்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 15 Oct 2024 11:41 AM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அகவிலைப்படி உயர்வு குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், மாத இறுதியில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : SBI Amrit Vrishti : எஸ்.பி.ஐ வழங்கும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டம்.. வட்டி மட்டும் 7.75%.. அம்ரித் விருஷ்டி குறித்த முழு விவரம் இதோ!

ஆண்டுக்கு 2 முறை உயர்த்தப்படும் அகவிலைப்படி

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அதாவது ஆண்டுக்கு முதல் முறை ஜனவரி மாதத்திலும், பிறகு 6 மாதங்கள் கழித்து ஜூலை மாதத்திலும் அகவிலைப்படி உயர்த்தப்படும். அகவிலைப்படி உயர்வு குறித்தி அறிவிப்பு வெளியானதும், குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அது நடைமுறைப்படுத்தப்படும். பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை போலவே பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் டிஆர் உயர்த்தப்படும்.

இதையும் படிங்க : Amrit Kalash Scheme : அதிக வட்டி வழங்கும் SBI-ன் அம்ரித் கலாஷ் திட்டம்.. முதலீடு செய்ய காலக்கெடு நீட்டிப்பு!

கடைசியாக 4% உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு

சமீபத்தில் கூட மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதாவது கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. மார்ச் மாதத்தில் உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப்படி, ஜனவரி மாதத்தில் இருந்து பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, தற்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து சுமார் 50% அகவிலைப்படியாக பெறுகின்றனர். இதேபோல ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களின் ஓய்வூதியத்தில் இருந்து 50% டிஆர் ஆக பெறுகின்றனர்.

இதையும் படிங்க : MSSC : 7.5% வட்டி.. பெண்களுக்கான சிறந்த சிறு சேமிப்பு திட்டம்.. முதலீடு செய்வது எப்படி.. முழு விவரம் இதோ!

தீபாவளி பண்டிகையையொட்டி அறிவிக்கப்படும் அகவிலைப்படி உயர்வு?

இந்த ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது வரும் என அரசு ஊழியர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி போனஸ் உடன் அகவிலைப்படி உயர்வும் சேர்த்து அறிவிக்கப்படலாம் என ஊழியர்கள் எதிப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : Indian Billionaire : $1.1 ட்ரில்லியனை தாண்டிய இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு.. மாஸ் காட்டும் தொழிலதிபர்கள்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படும் 3% அகவிலைப்படி?

தற்போது அரசு ஊழியர்களுக்கு 50% அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3% வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அகவிலைப்படி உயர்த்தப்படும் பட்சத்தில், ஜூலை மாதம் முதல் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன்படி, ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 53% ஆக இருக்கும்.

இதையும் படிங்க : Forbes 2024 : ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2024.. முதல் இடத்தில் முகேஷ் அம்பானி.. 2வது இடத்தில் இருப்பது யார்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பி விரைவில் வெளியாகும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Latest News