5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

EPS : ஊழியர் ஓய்வூதிய திட்டம்.. அதிரடி மாற்றத்தை செய்த மத்திய அரசு.. என்ன தெரியுமா?

Pension Scheme | 1995-ன் ஊழியர் ஓவூதிய திட்டத்தில் மத்திய அரசு அதிரடி திருத்தம் செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஏராளமான ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பழைய ஓய்வூதிய திட்ட விதிகளின்படி ஆண்டுக்கு சராசரியாக 7 லட்சம் திரும்ப பெறுதல் நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த திருத்தம் பயனுள்ளதாக இருக்கும்.

EPS : ஊழியர் ஓய்வூதிய திட்டம்.. அதிரடி மாற்றத்தை செய்த மத்திய அரசு.. என்ன தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Follow Us
intern
Tamil TV9 | Published: 02 Jul 2024 12:02 PM

ஊழியர் ஓய்வூதிய திட்டம் : ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் (EPS) மத்திய அரசு அதிரடி திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தின்மூலம் 6 மாதங்களுக்கும் குறைவான பங்களிப்பு சேவையுடன் ஊழியர் ஓய்வூதிய திட்டத்திலிருந்து வெளியேறும் 7 லட்சத்திற்கும் அதிகமான EPS உறுப்பினர்கள் பயண்டைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கான சேவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதையும், வழங்கப்பட்ட சேவையில் இருந்து திரும்ப பெறும் பலன்கள் வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய அரசு டி அட்டவணையை மாற்றி அமைத்துள்ளது. அட்டவணை டி என்பது திட்டத்தின் தகுதிக்கு தேவையான சேவையை வழங்காத உறுப்பினர்கள் அல்லது 58 வயதை எட்டிய உறுப்பினர்களை குறிப்பது.

முன்னதாக EPS திரும்ப பெறும் பலன், முடிந்த ஆண்டுகளில் பங்களிப்பு சேவையின் காலம் மற்றும் பங்களிப்பு செய்யப்பட்ட ஊதியத்தின் அடிப்படையின் கணக்கிடப்பட்டது. இதில் கட்டாய 6 மாத சேவையும் அடங்கும். எனவே 6 மாதங்கள் மற்று அதற்கு மேற்பட்ட பங்களிப்பு செவையை முடித்த பிறகே உறுப்பினர்களுக்கு அதற்கான பலன்கள் வழங்கப்படும். ஆனால் 6 மாதங்களுக்கு முன்பு திட்டத்திலிருந்து வெளியேறும் உறுப்பினர்களுக்கு எந்தவித பலன்களும் கிடைக்காது.

ஊழியர்கள் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் பங்களிப்பு சேவையை முடித்த பிறகு, உறுப்பினர்கள் திரும்பப் பெறுவதற்கான பலனை பெறுவார்கள். 6 மாதங்களுக்கு முன்பு திட்டத்திலிருந்து வெளியேறும் உறுப்பினர்களுக்கு பலன்களை பெற உரிமை இல்லை. கட்டாய சேவையை வழங்குவதற்கு முன்பு வெளியேறும் உறுப்பினர்களுக்கான பல கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதற்கு இதுவே காரணம். 2023-24 நிதியாண்டில் பங்களிப்பு சேவை 6 மாதங்களுக்கு குறைவாக இருந்ததால், திரும்ப பெறும் பலன்களுக்கான 7 லட்சம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

அட்டவணை டியை மாற்றியமைப்பது, கட்டண முறையை எளிமையாக்குவதன் மூலம், இந்த திட்டத்தின் கீழ் சுமார் 23 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் பயனடைவார்கள் என அரசு மதிப்பிட்டுள்ளது. அட்டவணை டி-ன் கீழ் உள்ள முந்தைய மதிப்பீட்டில், ஒவ்வொரு ஆண்டும் 6 மாதங்களுக்கு வழங்கப்படும் சேவையின் பகுதியளவு காலத்தை கருத்தில் கொள்ளவில்லை. பல சூழ்நிலைகளில் இது குறைவான பணத்தை திரும்ப பெற செய்கிறது. எனவே அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய மாற்றம் உறுப்பினர்கள் திரும்ப பெறும் தொகையில் உள்ள முரண்பாடுகளை நீக்கும்.

இதையும் படிங்க : SBI வங்கி சொன்ன ஹேப்பி நியூஸ்.. விரைவில் தொடங்கப்படும் 400 புதிய கிளைகள்.. விவரம்!

அரசின் அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் 95 லட்சத்திற்கும் அதிகமான இபிஎஸ் உறுப்பினர்கள் ஓய்வூதியத்திற்கான கட்டாய பத்தாண்டு பங்களிப்பு சேவையை வழங்குவதற்கு முன்பே திட்டத்தை விட்டு வெளியேறுகின்றனர். அத்தகைய ஊழியர்களுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் திரும்ப பெறும் பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் 2023-24 நிதியாண்டில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான திரும்ப பெறுதல் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கை கூறுகிறது.

ஊழியர் ஓய்வூதிய திட்டம் 1995-ல் ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு தகுதியான பணியாளர்களும் ஓய்வூதிய திட்டத்திற்கு தகுதியுடைவர்கள் ஆவார்கள்.