5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

DA Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. வெளியான முக்கிய தகவல்!

Central Government | மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அதாவது ஆண்டுக்கு முதல் முறை ஜனவரி மாதத்திலும், பிறகு 6 மாதங்கள் கழித்து ஜூலை மாதத்திலும் அகவிலைப்படி உயர்த்தப்படும். அகவிலைப்படி உயர்வு குறித்தி அறிவிப்பு வெளியானதும், குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அது நடைமுறைப்படுத்தப்படும்.

DA Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. வெளியான முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 09 Oct 2024 20:53 PM

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் என்பதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு DA (Dearness Allowance) மற்றும் DR ( Dearness Relief ) உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (அக்டோபர் 09) நடந்து முடிந்த நிலையில், டிஏ மற்றும் டிஆர் உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், டிஏ எனப்படும் அகவிலைப்படி உயர்வு என்றால் என்ன, அது உயர்த்தப்படுவதால் ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : FD Interest Rate : 2 முதல் 5 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

ஆண்டுக்கு 2 முறை உயர்த்தப்படும் அகவிலைப்படி

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அதாவது ஆண்டுக்கு முதல் முறை ஜனவரி மாதத்திலும், பிறகு 6 மாதங்கள் கழித்து ஜூலை மாதத்திலும் அகவிலைப்படி உயர்த்தப்படும். அகவிலைப்படி உயர்வு குறித்தி அறிவிப்பு வெளியானதும், குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அது நடைமுறைப்படுத்தப்படும். பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை போலவே பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் டிஆர் உயர்த்தப்படும்.

இதையும் படிங்க : FD Interest Rate : 1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

கடைசியாக 4% உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு

சமீபத்தில் கூட மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதாவது கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. மார்ச் மாதத்தில் உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப்படி, ஜனவரி மாதத்தில் இருந்து பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, தற்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து சுமார் 50% அகவிலைப்படியாக பெறுகின்றனர். இதேபோல ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களின் ஓய்வூதியத்தில் இருந்து 50% டிஆர் ஆக பெறுகின்றனர்.

இதையும் படிங்க : Indian Rupees : இந்திய ரூபாய் நோட்டிற்கு காந்தியின் புகைப்படம் முதல் தேர்வு அல்ல.. முதல் தேர்வு என்ன தெரியுமா?

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்

கடைசியாக மார்ச் மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது என்று மத்திய அரசு ஊழியர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தகவலின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் பட்சத்தில் அதன் மூலம் சுமார் 1.15 கோடி மக்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. விழாக்காலத்தை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு அறிவித்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஊழியர்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : PPF Rules Changed : பிபிஎஃப் விதிகளில் அதிரடி மாற்றம்.. இன்று முதல் அமலுக்கு வருகிறது.. என்ன என்ன மாற்றங்கள் தெரியுமா?

கடந்த முறை 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், இந்த முறை 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தற்போது அகவிலைப்படி உயர்த்தப்பட்டால், அது ஜூலை மாதத்தில் இருந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Latest News