EPFO : 7 சிறப்பு ஓய்வூதிய திட்டங்களை வழங்கும் EPFO.. இவ்வளவு பலன்களா.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

Pension Schemes | ஊழியர்கள் இந்த பணத்தை தங்களது தேவைகளுக்கான பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை ஊழியர் தனது பணிக்காலம் முழுவதும் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்றால், பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியமாகவும் பெற்றுக்கொள்ளலாம். ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

EPFO : 7 சிறப்பு ஓய்வூதிய திட்டங்களை வழங்கும் EPFO.. இவ்வளவு பலன்களா.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

மாதிரி புகைப்படம்

Published: 

30 Aug 2024 14:43 PM

ஊழியர் வருங்கால வைப்புநிதி : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊழியர்களுக்கும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு மாதம், மாதம் பிடித்தம் செய்யப்படும் பணம், ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். ஊழியர்கள் இந்த பணத்தை தங்களது தேவைகளுக்கான பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை ஊழியர் தனது பணிக்காலம் முழுவதும் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்றால், பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியமாகவும் பெற்றுக்கொள்ளலாம். ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான ஊழியர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஊழியர்கள் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் கிடைக்கும் 7 பென்ஷன் திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : EPFO : இபிஃப்ஓ உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்.. இரவோடு இரவாக அரசு எடுத்த அதிரடி முடிவு!

இளநிலை பென்ஷன்

58 வயதை பூர்த்தி செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே EPFO பென்ஷன் வழங்கி வரும் நிலையில், இந்த திட்டத்தின் மூலம் 50 வயது முதலே பென்ஷன் பெறலாம். நீங்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பட்சத்தில், உங்கள் பிஎஃப் தொகையில் இருந்து ஆண்டுக்கு 4% பணம் பிடித்தம் செய்யபடும்.

ஓய்வூதியம்

58 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு EPFO பென்ஷன் வழங்குகிறது. நீங்கள் பென்ஷனுக்காக எவ்வளவு முதலீடு செய்தீர்கள் என்பதை பொருத்து பென்ஷன் தொகை வேறுபடும். இந்த பென்ஷனை பயனர்கள் தங்களது 58 முதல் 60 வயதுக்குள் தேர்வு செய்துக்கொள்ளலாம். அவ்வாறு 58 முதல் 60 வயதில் க்ளெய்ம் செய்யும்போது பென்ஷன் தொகை ஆண்டுக்கு 4% அதிகரிக்கும்.

மாற்றுத்திறநாளி பென்ஷன்

பணிக்காலத்தின் போது பயனர்கள் ஏதேனும் விபத்தில் ஊனமுற்றால் இந்த பென்ஷன் திட்டத்தின் மூலம் பயனடையாலாம். 10 ஆண்டு கால முதலீடு இதற்கு பொருந்தது. EPFO திட்டத்தில் குறைந்தது 2 ஆண்டுகள் பங்களிக்கும் பட்சத்தில் இதில் பயனடையலாம்.

இதையும் படிங்க : Senior Citizen Saving Scheme : மூத்த குடிமக்களுக்கான FD-க்கு 8.2% வட்டி.. அசத்தும் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

விதவை அல்லது குழந்தை பென்ஷன்

EPFO உறுப்பினர் உயிரிழந்துவிட்டால் அவரது மனைவி மற்றும் 25 வயதிற்குட்பட்ட 2 குழந்தைகள் இந்த திட்டத்தில் பயனடையலாம். அதுமட்டுமன்றி 3வது குழந்தைக்கும் பென்ஷன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல் குழந்தை 25 வயதை பூர்த்தி செய்யும்போது தான் மூன்றாவது குழந்தைக்கு பென்ஷன் கிடைக்கும். 10 ஆண்டு கால முதலீடு இதற்கு பொருந்தது. EPFO திட்டத்தில் குறைந்தது 1 ஆண்டுபங்களிக்கும் பட்சத்தில் இதில் பயனடையலாம்.

ஆதரவற்றோர் பென்ஷன்

EPFO உறுப்பினர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்துவிட்டால் அவர்களது 25 வயதிற்குட்பட்ட 2 குழந்தைகள் இந்த திட்டத்தில் பயனடையலாம். அவர்கள் 25 வயதை அடையும் வரை இந்த திட்டத்தின் மூலம் பென்ஷன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!