5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

EPFO : பிஎஃப் உச்ச வரம்பை உயர்த்தும் மத்திய அரசு? ஊழியர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!

Provident Fund | வரும் 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஊழியர் வருங்கால வைப்புநிதி ஊதிய உச்ச வரம்பு உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டும் பிஎஃப் ஊதிய உச்ச வரம்பு உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் உயர்த்த வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

EPFO : பிஎஃப் உச்ச வரம்பை உயர்த்தும் மத்திய அரசு? ஊழியர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 06 Jul 2024 13:31 PM

ஊழியர் வருங்கால வைப்பு நிதி : தனியார் துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் வரவிருக்கும் பட்ஜெட்டில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனபடி, சம்பளம் பெறும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதி குறித்து சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி ஊழியர் வருங்கால வைப்புநிதி உட்சபட்ச வரம்பு உயர்த்தப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஊழியர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் ஊதியம் பிடித்தம் செய்யப்படுகிறது. அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணம் ஊழியர்களின் பிஎஃ கணக்கில் மாதம் தோறும் வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் தங்களுக்கு தேவைப்படும்போதோ அல்லது தங்களின் ஓய்வு காலத்திலோ பயன்படுத்திக்கொள்ளலாம். ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து மத்திய அரசு புதிய அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதன்படி, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான குறைந்தபட்ச ஊதிய வரம்பை மத்திய அரசு உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளளது. வரும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்ப்பார்க்க படுகிறது. அதுமட்டுமன்றி ஊழியர்களுக்கு வருமான வரிச் சலுகைகள் உள்ளிட்ட பிற சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளாதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி உச்ச வரம்பு

இந்தியாவில் தற்போது ஊழியர் வருங்கால வைப்புநிதிக்கான சம்பள உச்ச வரம்பு ரூ.15,000 ஆக உள்ளது. பிஎஃப் சம்பள உச்ச வரம்பு கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி கடைசியாக உயர்த்தப்பட்டது. அதன்படி ரூ.6,500 ஆக இருந்த சம்பள உச்ச வரம்பு ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இது ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படலாம் என தகவல் வெளியானது. ஒருவேளை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தால், கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு ஊழியர் வருங்கால வைப்புநிதிக்கான சம்பள உச்ச வரம்பு உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : பிஎஃப் கணக்கை பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டுமா?.. ஈசியா மாத்திடலாம்.. முழு விவரம் இதோ!

மத்திய அரசு, ஊழியர் வருங்கால வைப்புநிதிக்கான சம்பள உச்ச வரம்பை அதிகரித்தால் அது ஊழியர்களின் பங்களிப்பை அதிகரிக்கும். இதனால் பிஎஃப் சேமிப்பு மேலும் உயரும். எனவே மத்திய அரசு உச்ச வரம்பை உயர்த்தினால் ஊழியர்களின் எதிர்காலம் மேலும் பாதுகாப்பானதாக மாற்றபப்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News