5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

EPFO : இபிஃப்ஓ உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்.. இரவோடு இரவாக அரசு எடுத்த அதிரடி முடிவு!

New Update | இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊழியர்களுக்கும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு மாதம், மாதம் பிடித்தம் செய்யப்படும் பணம், ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும்.

EPFO : இபிஃப்ஓ உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்.. இரவோடு இரவாக அரசு எடுத்த அதிரடி முடிவு!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 30 Aug 2024 14:05 PM

ஊழியர் வருங்கால வைப்புநிதி : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊழியர்களுக்கும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு மாதம், மாதம் பிடித்தம் செய்யப்படும் பணம், ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். ஊழியர்கள் இந்த பணத்தை தங்களது தேவைகளுக்கான பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை ஊழியர் தனது பணிக்காலம் முழுவதும் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்றால், பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியமாகவும் பெற்றுக்கொள்ளலாம். ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான ஊழியர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், EPFO மொத்தமாக மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : Blue Aadhaar Card : ப்ளூ ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய எவ்வளவு செலுத்த வேண்டும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

EPFO தளத்தில் புதிய மாற்றங்களை செய்யும் மத்திய அரசு

தற்போது செயல்பாட்டில் உள்ள EPFO தளத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. அதன்படி, பணம் கிளைம் செய்வது, கேஒய்சி மாற்றுவது உள்ளிட்டவற்றில் பல பிரச்னைகள் உள்ளன. இந்த சிக்கல்களை சரிசெய்ய முடிவு செய்து, EPFO தளத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தளத்தை மாற்றுவதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பணிகளை எளிதாக்கும் வகையில் மாற்றங்கள்

EPFO இணையதளத்தில் பணம் கிளைம் செய்வது, கேஒய்சி மாற்றுவது போன்ற பணிகளை எளிதாக்கும் விதமாக மாற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி மத்திய அரசு 1995 ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவையில் உள்ள ஊழியர்களுக்கு withdrawal benefits எனப்படும் திரும்ப பெறும் பலன்களை வழங்குகிறது. இதன் மூலம் ஏராளமான ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வெளியேறும் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான EPS உறுப்பினர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்பபடுகிறது.

இதையும் படிங்க : Unified Pension Scheme: ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் என்றால் என்ன? யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம்!

6 மாதங்களுக்கு முன்பு வெளியேறினாலும் Withdrawal Benefits கிடைக்கும்

முன்னதாக ஊழியர் ஒரு பணியில் இருந்து 6 மாதங்களுக்கு முன்பு விலகினார் withdrawal benefits கிடைக்காது. ஆனால் புதிய சட்டப்படி குறைந்தது 6 மாதங்களுக்கு முன் வெளியேறும் உறுப்பினர்களுக்கும் பலன் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News