5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Farmer ID Card : ஆதார் கார்டை போலவே விவசாயிகளுக்கு அடையாள அட்டை.. வெளியான முக்கிய தகவல்!

Identity Card |இந்த திட்டத்தின் மூலம் வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள சுமார் 5 கோடி விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க இலக்கு நிரணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Farmer ID Card : ஆதார் கார்டை போலவே விவசாயிகளுக்கு அடையாள அட்டை.. வெளியான முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம் (Photo Credit : pixelfusion3d/E+/Getty Images)
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 10 Sep 2024 18:15 PM

விவசாயிகளுக்கு அடையாள அட்டை : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகன்களுக்கும் ஆதார் கார்டு வழங்கப்படுவதை போல, இந்திய விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள சுமார் 5 கோடி விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க இலக்கு நிரணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த அடையாள அட்டையின் பெயர் என்ன, எதற்காக வழங்கப்படுகிறது, இதன் மூலம் விவசாயிகளுக்கு என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் உள்ளிட்டவற்றை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : PM Kisan : பிஎம் கிசான் 18வது தவணை பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?.. உடனே இத பண்ணுங்க!

ஆதார் அட்டையின் முக்கியத்துவம்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை தனிநபர் அடையாள அட்டையாக மட்டுமன்றி, முக்கிய முகவரி சான்றிதழாகவும் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சேறுவது, மருத்துவம், பயணம், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் பல காரியங்களை செய்யவே முடியாத நிலை உள்ளது. இத்தகைய முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை உள்ள நிலையில், இதேபோல விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

விவசாயத்தையே நம்பி வாழும் மக்கள்

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். ஆனால் விவசாயம் அந்த அளவுக்கு லாபகரமான தொழிலாக இல்லை. விவசாயம் செய்வதன் மூலம் நிதி இழப்புகள் உள்ளிட்ட பல பிரச்னைகளை விவசாயிகள் சந்திக்கின்றானர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் இதே நிலை தான் நீடிக்கிறது. இந்த நிலையில் தான் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டம், கடன் திட்டங்கள், மாநிய விலையில் விவசாய பொருட்கள், உரம், மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்!

விவசாயிகள் குறித்த தகவல்களை டிஜிட்டல் மயமாக்கி வரும் அரசு

இவற்றை எளிதாக்கும் வகையில் விவசாயிகளுக்கு தேவையான மானியங்கள், வளர்ச்சி திட்டங்கள், விவசாயிகள் பயிர் சாகுபடி குறித்த தகவல்கள் ஆகியவற்றை மத்திய அரசு டிஜிட்டல் மயமாக்க திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற வேளாண் தொழில்நுட்ப வளர்ச்சி மாநாட்டில் பங்கேற்ற வேளாண் துறை செயலாளர் தேவேஷ் சதுர்வேதி விவசாயிகள் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதாவது, விவசாயிகளின் நலனுக்காக ரூ.2,817 கோடி ஒதுக்கீட்டில் டிஜிட்டல் வேளான்ணை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

விவசாய பதிவேடை உருவாக்கும் மத்திய அரசு

தொடர்ந்து பேசிய அவர், விவசாயத்தை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் விவசாயிகளை பதிவு செய்யும் பணிகளை தொடங்கி இருக்கிறோம். ஏனெனில் தற்போதைய நிலையில், விவசாயிகள் ஏதேனும் வேளாண் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்போது ஒவ்வொரு முறையும் அவர் விவசாயி தானா, அவர் என்ன விவசாயம் செய்கிறார் என்பதை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இதற்கு கணிசமான நேரம் மற்றும் செலவும் செய்ய வேண்டிய உள்ளது. இந்த சரிபார்ப்பு முறை சில அசவுகரியங்களையும் ஏற்படுத்துகிறது. இதற்கு தீர்வு காண விவசாயிகளோடு பதிவேடு ஒன்றை உருவாக்க உள்ளோம்.

இதையும் படிங்க : ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி வரி ரத்தா? நிர்மலா சீதாராமன் எடுத்த முக்கிய முடிவு!

மார்ச் மாதத்திற்குள் 5 கோடி விவசாயிகளின் பெயர்கள் பதிவு செய்யப்படும்

தற்போதை சூழலில் மாநில அரசுகள் அளித்த விவசாய நிலங்கள், பயிர் சாகுபடி குறித்த தரவுகள் மட்டுமே மத்திய அரசிடம் உள்ளது. விவசாயிகள் குறித்த தனிப்பட்ட தரவுகள் மத்திய அரசிடம் இல்லை. அந்த குறையை இந்த புதிய திட்டம் தீர்க்க போகிறது. நாடு முழுவதும் விவசாயிகளின் பெயர்களை பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை விரைவில் வெளியிட போகிறோம். அக்டோபர் மாதம் பதிவு செய்யும் பணி தொடங்கும். இதற்காக நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்படும். அதன் மூலம்  வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள 5 கோடி விவசாயிகளின் பெயர்களை பதிவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News